தமிழ்த் தெய்வம்

20/10/11

கட்டுரை

                                               

                                                                    திருமணம்

        "திருமணம்" ஆயிரங்காலத்துப் பயிர்.இது காலங்காலமாக இருந்துவரும் முதுமொழி.ஆனால் இன்று, இது ஆயிரங்களின் பயிர். பிள்ளைகளின் வாழ்க்கையை ஆயிரங்கள் சிலவற்றில் அடக்கிவிடுகின்றனர்.
          இப்பொழுதெல்லாம் பிள்ளைகள் நிறைய படிக்கின்றனர்.நல்ல வேளையிலும் அமர்ந்து விடுகின்றனர்.பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளுடன்  மன நிறைவோடு மகிழ்ச்சி பொங்க வாழ்கின்றனர்.ஆனால் திருமணம் என்ற பேச்சு வரும்போது மட்டும் பெற்றோர்கள் பெருமை பேச ஆரம்பித்துவிடுகின்றனர்.அதுவும் சில பெற்றோர்கள் பேசுவது பெரும் பிரச்சினையையே உருவாக்கிவிடும் என்ற அச்சம் எழுகின்றது. மேலும் பெண்கள் ஆண்களைவிட அதிகம் படிக்கின்றனர்.நன்கு படிக்கின்றனர்.நல்ல வேலையிலும் அமர்ந்துவிடுகின்றனர்.ஆனால் திருமணம் என்று வரும்போது தங்களுக்கேற்றவாறு பையன் கிடைக்காமல் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்,பெண்களும்,பெற்றோர்களும்.
               பெண்கள் படிக்க வேண்டும்,பெரிய படிப்பு  படிக்க வேண்டும்.நல்ல வேலையில் அமர்ந்து நல்ல சம்பளமும் வாங்கவேண்டும்.ஆனால் திருமணம் என்ற நிலைப்பாடு வரும்போது மட்டும் பெண்களைப் பெற்றோர் பெரும் வேதனைப் படுகின்றனர்.உதாரணமாக,பெண், பி.ஈ  எம் .எஸ் படித்திருக்கின்றார் என்றால் அதைவிட உயர்ந்தவராக மாப்பிள்ளை இருக்க வேண்டும் என பல  பெற்றோர்கள்  நினைக்கின்றனர்.இந்த மாதிரியான நினைப்புதான் பல பெண்களின் வாழ்க்கை த்ள்ளிப்போக காரணமாகின்றது.பெண்ணிண் படிப்புக்கு ஏற்ற படிப்பும், பண்பாடும் ,இருந்தால் உடன் மணம் முடித்துவிட வேண்டும்.இதை விடுத்து, " என் பெண் இவ்வளவு படித்து, இவ்வளவு சம்பளம் வாங்குகின்றாள் ,பையனுக்கு அதைவிட அதிக படிப்பும், சம்பளமும் இருக்கவேண்டும்" என பேசினால்,பெண்ணுக்கு எப்படி திருமணம் நடக்கும்? பையனின் பெற்றோர்களும் "என் பையன் இவ்வளவு படித்திருக்கின்றான்,இவ்வளவு சம்பளம் வாங்குகின்றான்,எங்களுக்கு ஒரே பையன்"என்றெல்லாம் பெருமை பேசி,ஒருசில விருப்பு, வெறுப்புகளையும் கொண்டிருப்பதால்தான், இக்காலத்து திருமணங்கள்,ஆயிரங்காலத்துப் பயிராக இல்லாமல் சில நாள் பயிராக வாடி வ்தங்கிப் போய் விடுகின்றது.
                               இப்படியெல்லாம் இல்லாமல்,தங்கள் பையன் ,தங்கள் பெண் ,தங்கள் குழந்தைகளின் வாழ்க்கை என்பதை மட்டும் மனதில் இருத்தி,கடந்த காலத்தில் நாம் எப்படி இருந்தோம்?, இப்பொழுது எப்படி இருக்கின்றோம்? எதிர் காலத்தில்   நமது பிள்ளைகள் வாழ்வு எப்படி இருக்க வேண்டும்? என்பதை மட்டும் மனதில் கொண்டு  நமது செயல் பாடுகள் அமைய வேண்டுமே தவிர, .எந்தக் காரணத்தைக்கொண்டும் தங்களது விருப்பு வெறுப்புகளை தங்களது பிள்ளைகளின் வாழ்க்கை மீது தினிக்காமல்  திருமணத்தை பேசி முடித்து,அவர்களுக்கு வெற்றிகரமான வாழ்க்கை அமைய பாடுபட வேண்டும்.
                              அடுத்து, சில பெற்றோர்கள் ஜாதகத்தை நம்பியே தங்களது செல்லக் குழந்தைகளின் வாழ்க்கையை சீரழித்து விடுகின்றனர்.ஜாதகத்தை நம்புவோர், ஓரளவுதான் அதை நம்ப வேண்டுமே தவிர,அதில் உள்ள எல்லா அம்சங்களையும் அலசி ஆராய்ந்து கொண்டிருக்கக்கூடாது.எல்லா ஜாதகத்திலும் நல்லதும் கெட்டதும் கலந்துதான் இருக்கும்.குறிப்பாக தோஷமில்லாத ஜாதகமே இருக்காது.செவ்வாய் தோஷத்தை மட்டும் வேண்டுமானால் திருமணத்திற்காக பார்க்கலாமே தவிர,வேறு எந்த தோஷத்தையும் பார்க்கக்கூடாது.ஆதலால்,ஜாதகத்தை நம்புவோர் செவ்வாய் தோஷத்தை மட்டும் பாருங்கள், மற்ற எந்த தோஷம் இருந்தாலும் அதற்கும் திருமணத்திற்கும் தொடர்பில்லை.ஆதலால் செவ்வாய் தோஷம் பாருங்கள் ,பொருத்தம் பாருங்கள், நல்ல முறையில் பேச்சு வார்த்தையை முடித்து திருமண்த்தை நடத்தும் வழியைப் பாருங்கள்
                     "பிள்ளைகளின் ஜாதகத்தைப் பார்ப்பதைவிட,பெற்றோர்களின் ஜாதகத்தை முதலில் பார்த்து,சம்பந்திகளுக்குள் பொருத்தம் இருந்தால், பிறகு பேசலாம்" என்று வேடிக்கையாக சொல்வ்துண்டு..இம்மாதிரியான இக்கட்டான நிலைமைகளையெல்லாம் ஏற்படுத்தாமல் , ஜாதகம் பார்ப்போர் பாருங்கள்,ஜாதகத்தை நம்பாதோர்,தங்கள் பிள்ளைகளை நம்புங்கள்.எல்லாவற்றுக்கும் மேலாக பெண்ணையும், பிள்ளையையும் நேரில் பார்த்து பேச வாய்ப்பளியுங்கள்.முதலில் அவர்கள் தங்களைப் புரிந்துகொள்ளட்டும்,பிறகு தொடருங்கள் உங்கள் பேச்சுக்களை.
       ஆதலால்,பிள்ளைகளே,பெற்றோர்களுக்கு மரியாதை கொடுங்கள், ம்திப்பளியுங்கள்,ஆனால் உங்கள் வாழ்க்கைப் பாதையை  நீங்களே நிர்ணயித்துக்கொள்ளுங்கள்.பெற்றோர்களே,நீங்களும் உங்கள் பிள்ளைகளின் எதிகாலத்தை நன்றாக கவனத்தில் கொண்டு, நல்ல முடிவினை எடுங்கள்.வீண் வார்த்தை, விதண்டாவாதம் பேசி, எதிகால சந்ததியினரை ஏமாற்றத்துக்கு ஆளாக்காமல், அவர்கள் வாழ்வில் வளம் பெற ,வாழ்வில் ஏற்றம்பெற, வாழ்வில் ஒளீயேற்ற முயற்சியுங்கள்.
                 எல்லா பெற்றோர்களும்,தங்கள் பிள்ளைகளின் வாழ்வை வளமாக்கத்தான் விரும்புவர். ஆனால், வளமான வாழ்வு வாழ, முதலில் தங்கள் பிள்ளைகளின் மனதை ஆராய்ந்து,தங்களின் நிலையையும் நன்குணர்ந்து,பிறகு மற்றவர்களின் கருத்துக்கு மதிப்பளித்து,மண வாழ்க்கையை, மணமுள்ள வாழ்க்கையாக மாற்ற முணைவோம்.விரைவில் எல்லோரது இல்லங்களிலும் மகிழ்ச்சியான மணவிழா காண வாழ்த்துக்கள்.

                    இது ஒரு மீள் பதிவு.

     இராசராசன் செய்தி மலரில்  மே 2007-ல் வேளிவந்தது.



13/10/11

நல்ல சிந்தனைகள்

                                                  சிந்தியுங்கள்.
            
         1.பத்து ரூபாய் பூ தலைமேலே
                 அதிக  விலையுள்ள செருப்பு காலுக்கும் கீழே.

           2.வேட்டையாடிவிட்டு திரும்பிய மன்னனிடம், புலவர்,
                 "புலி வேட்டையில் வென்று புவனத்தில் உயர்ந்த மன்னா,இனி
                  உன் சந்ததி எலி வாலைப் பிடித்து உண்ணும்." (Mouse)

           3.சிலந்திக்கு சிக்கலில்தான் வெற்றி, 
             ரோஜாவுக்கு முள்ளில்தான் மனமும் மரியாதையும்,
            மனிதனுக்கு தோல்வியில்தான் வெற்றி.
          
          4.நன்மைகள் போனால்தான் தெரியும்.
            தீமைகள் வந்தால்தான் தெரியும்.

          5.ஒரு விவசாயி வக்கீலிடம் கூறியது,
                 "வயல் போனாலும் பரவாயில்லை,
                  வரப்பு நிலைக்க வேண்டும்"

          6.கள்ளு கெட்டதுதான்-ஆனால் அதை போய்த்தான் பருகவேண்டும்
              பால் நல்லது-ஆனால் நாம் ஒவ்வொரு இடத்திற்கும் போய்த்தான் ஊற்றவேண்டும்          
                உன்னைத் தேடி மக்கள் வந்தால், நீ கள்ளுக்கடைக்காரன்.
                நீ மக்களைத் தேடிச் சென்றால் பால்காரன்.

           7.பள்ளீயில் பிராணி படம் வரைந்தான், மாணவன்,வாயில்லாமல்,
             ஏனெனில் அது வாயில்லா ஜீவனாம்.

             8.மனைவிகள் கனவர்களிடம் பேசக்கூடாதவை.
                     "உங்ககிட்ட கொஞ்சம் பேசனும்"
                     " நீங்க எப்பவுமே இப்படித்தான்."
                    "  உங்களைக் கட்டிகிட்டு என்னத்தைக் கண்டேன்?"
                     "  தொந்தியும் தொப்பையும் ஆளைப் பார்க்கவே சகிக்கலை"
                    
                                   அடுத்தவர்களிடம்,தன் கனவர்களிடம் உள்ள குறைகளை,அவை சிறியதோ, பெரியதோ, பேசக்கூடாது,உங்கள் பெற்றோரிடம் கூட.

                9.கடவுளைக் காண்பதைவிட கடவுளைப் புரிந்து கொள்வதுதான் முக்கியம்.

              10.உலகிலேயே அழகான ம்னிதரும் நீங்கள்தான்,அசிங்கமான மனிதரும் நீங்கள்தான்.
                கொஞ்சம் புன்னகையை, முகத்தில் தேக்கி, உங்களை நீங்களே கண்ணாடியில் பாருங்கள்,உண்மை விளங்கும்.

            11உனது சிந்தனைகளை கண்ணில் தேக்கி வைக்காதே,இதயத்தில் தேக்கி வை.  கண்ணில் தேக்கி வைத்தால், அவை கண்ணீரில் கரைந்துவிடும்.இதயத்தில் தேக்கிவைத்தால்,இதயம் துடிக்கும்போதெல்லாம் ,உன் நினைவில் நின்றுகொண்டேயிருக்கும்.

             12.  Any voiceof freedom is better than the silence of Tyranny
                   
                     It does not mater where you come from-It matters where you move..

                    we cannot control circumstances,bu we can control response to circumstances.
     
             13. வாக்கற்றவனுக்கு வாத்தியார் வேலை,
                   போக்கற்றவனுக்கு போலிஸ் வேலை.
   
          இதன்  விளக்கம் இதோ,

                         மாணவர்களுக்கு சொல்லி கொடுக்கும் அளவுக்கு வாக்கு கற்றவன்தான் வாத்தியார் வேலைக்கு  வரவேண்டும்.
                        குற்றவாளிகளின் போக்கை அறிந்தவன் தான்  போலிஸ் வேலைக்கு வரவேண்டும்.           ,

                                            888888888888888888888




11/10/11

சிறுகதை

                                               கெடாவெட்டு
                      இப்பதான் தாத்தா ஆபிசில் லீவு கிடைத்தது.நா இல்லேன்னா என்ன தாத்தா, அதான் வீட்டுல என் அண்ணனும், தம்பியும் இருக்காங்களே, நா வந்து என்னெ தாத்தா பண்ண்ப்போறேன்?இப்படி கூறியபடியே ஆற்றுக்குள் இறங்கி நடக்க ஆரம்பித்தான்,சுக்ரன்.அவனைத் தொடர்ந்து,அவனது மனைவியும் மகன் புகழேந்தி,மகள் சித்ரா ஆகியோரும் ஆற்றில் இறங்கி நடக்க ஆரம்பிததனர்.அந்த ஊரில் இருக்கும் பெரிசுகள்,நமது சுப்ரமணியனை சுக்ரன் என்றுதான் அழைப்பர்.நாமும் இனி அப்படி அழைக்கலாமே.!
                    கோடைகாலமாக இருக்கும்போது தஞ்சையிலிருந்து பேருந்தில் வந்து இறங்குபவர்கள்,அந்த இடத்தில் இறங்கி ஆற்றுக்குள் நடந்துதான் செல்வர்.கோடைகாலத்தில் ஆற்றில் தண்ணீர் இருக்காதே!.மற்ற நாட்களில் பாலம் இருக்கும் இடத்தில் இறங்கி ஏற்த்தாழ ஒரு கிலோமீட்டருக்குமேல் நடக்கவேண்டியிக்கும்  .அன்றும் அப்படித்தான் அவர்கள் நடந்து சென்றனர்.
                  காலை வெயிலில் ஆற்று மணலில் நடக்க ஆரம்பிதததும்,மணல் சூடு சற்று இதமாக ஏறிக்கொண்டிருந்தது.சின்னப்பெண் சித்ராவுகு கால் சூடு எடுக்க ஆரம்பித்துவிட்டது."கால் சுடுதப்பா" என்று கூறிக்கொண்டே வேகமாக நடக்க ஆரம்பித்தாள்.உடனே புகழேந்தி, "என்ன் பாப்பா, காலா சுடுது? ஆற்று மணல்தானே சுடுகின்றது?"என்றுகூறி வேடிக்கையாக சிரித்தான். ஆற்று மணலில் சிறிது தூரம் நடப்பதற்குள் சுக்ரனின் மனைவிக்கும்,குழந்தைகளுக்கும் களைப்பு ஏற்பட்டவிட்டது. சென்னை நகர வீதிகளில் வலம் வந்த கால்களாயிற்றே,குழந்தைகளின் கால்கள்.  ஆனாலும் கிராமத்தின் சூழ்நிலையும், பச்சைப்பசேலென்றிருக்கும் செடிகொடிகளையும் பார்க்கின்றபோது அவர்களுக்கு உற்சாகம்பீறிட்டுவிடும்.
                  ஆற்றின் மேற்கு கரையில் ஏறியதும்,அங்கு சில அடி தூரத்தில் தெரிந்த வீரனார் கோயில்,அதனருகில் அமைக்கப்பட்டிருந்த பந்தலும்,தோரணங்களும் இன்னபிற ஏற்பாடுகளும அவர்களுக்கு ஆனந்தத்தை அள்ளிவழங்கின. ஆற்றின் மேற்கு கரையின் இரு பக்கமும் எப்போதும் வளர்ந்திருக்கும் முட்செடிகள் வெட்டப்பட்டு,கோயிலுக்குச் செல்லும் வழி சீர்செய்யப்பட்டிருந்தது.கோயில் அருகில் கெடா வெட்டுமிடம்,சமைக்குக்மிடம்,வீரனாருக்கு விருந்து படைக்குமிடம் மற்றும் பலவற்றையும் பார்த்து ஆச்சரியப்பட்டனர்.கோயிலுக்கு புது வண்ணம் பூசப்பட்டு ,பொலிவுடன் காட்சியளித்தது.சென்ற முறை ஊருக்கு வந்தபோது மற்ற சிறுவர்களுடன் சேர்ந்து, ஆற்றங்கரைப் பக்கம் வந்து, காரைப்பழம்,சூரைப்பழம்மற்றும் ஈச்சம்பழம் ஆகியவற்றை பறித்து சாப்பிட்ட அனுபவத்தையும்,ஆற்று மணலில் மற்ற சிறுவர்களுடன் துள்ளிவிளையாடிய அனுபவத்தையும்,அசைபோட்டு,தன் தங்கையிடம் பெருமையாக பேசிக்கொண்டிருந்தான் புகழேந்தி..
                       ஆம்,சுரனும் அப்படித்தான் தனது இளவயது பள்ளி நாட்களில் மாலை வேளையில் அந்த ஆற்றங்கரையில் காலார நட்ந்து சென்று படித்ததையும்,நாவல்பழம், இலந்தப்பழம் ஆகியவற்றை காயாக இல்லாமலும் பழமாக இல்லாமலும் பறித்து தின்றதையும் எதிர் கரையில் சென்ற வாகனகளைப்பார்த்து வியந்ததையும் நினைத்து, பெருமூச்சுவிட்டு,  தனது குலதெய்வக் கோயிலின் அழகைக்கண்டு ஆனந்தக்கண்ணீர் வடித்து நின்றான்..
கோயில் பந்தலில் சில சிறுவர் சிறுமியர் தங்கள் உற்சாகத்தை ஊராருக்கு காட்டிக் கொண்டிருந்தனர்.அப்போது 'கட்டையன்' என்றழைக்கப்படும் தமிழரசன் என்பவன் மட்டும் இவர்களை அடையாளம் கண்டுகொண்டு அறுகில் வந்தான். பிறகு மற்ற சிறுவர்களும் அருகில் வந்து இரண்டற கலந்து விளையாட ஆரம்பித்துவிட்டனர்.இதுதானே குழந்தைகள் உலகம் என்பது!.
           சிறிது நேரத்தில் சுக்ரனின் அண்ணன் அங்கு வந்தார்.இவர்கள் கோயிலடியில் நிற்பதைப் பார்த்ததும்,அனைவரையும் அழைத்துக்கொண்டு தனது வீட்டிற்கு சென்றார்.வீட்டில் உற்றார் உறவினர்கள், அக்கம்பக்கம் உள்ளவர்கள் என ஒரு பெரிய பட்டாளமே இருந்தது.தனது உறவினர்களையும் மற்ற ,ஊர் பெரியவர்களையும் பார்த்து புகழேந்தி, சித்ரா இருவருக்கும் உற்சாகம் அதிகமாகிவிட்டது.பெரும்பாலும், இந்த கால கிராமத்து உறவுகளே  கோயில் திருவிழா, கல்யாணம், காதுகுத்து,இன்னபிற இது போன்ற நல்லது கெட்டதுகளுக்குத்தானேஊருக்கு வந்து கூடுவர்.வெளீயிடங்களிலிருந்து வந்துள்ள கூட்டம் இவ்வளவு என்றால்,இனி அண்டை அயல் கிராமங்களிலிருந்தெல்லாம் இரவுக்குள் வந்து கூடிவிடுவர் இப்படிப்பட்ட உற்றார் உறவினர் கூட்டம், இவர்கள் வீட்டில் மட்டுமல்ல, ஊரில் எல்லா வீடுகளிலும்தான். நிறைந்திருக்கும்.

        இரவு வந்தது. எல்லோரும் கோயிலுக்குப் புறப்பட்டனர்.அங்கே, ஆற்றின் கரை இருமருங்கிலும் மக்கள் கூட்டம்.கோயில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு,மேளதாளம் வாணவேடிக்கை ஒரு பக்கம் மறுபக்கம் நாட்டுப்புற கலைகளான கொம்பு, தாரை தப்பட்டை போன்ற கருவிகளின் ஒலிமுழக்கம்.சென்னையில் வளர்ந்த சுக்ரனின் குழந்தைகள் மட்டுமல்ல,மற்ற பெங்களூரு, திருவனந்தபுரம்,மேலும் வெளிநாட்டில் வாழும் குழந்தைகளுக்கும் இந்நிகழ்ச்சிகள்  மகிழ்ச்சியை தந்தன.ஊரில் உள்ள் சிறுவர் சிறுமியர்களுடன் இவர்களும் சேர்ந்து கொண்டு தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.
          இரவு போய்க்கொண்டேயிருந்தது.கெடாவெட்டும் நேரம் நெருங்கியது.முதல் கெடா சுக்ரனின் வீட்டு கெடாதான்.எனெனில் சுக்ரனின் வீடுதான் பூசாரி வீடு.அதன் பிறகுதான் மற்ற கெடாக்கள் வெட்டப்படும்.அதன்படி சுக்ரனின் வீட்டு கெடா வெட்டப்பட்டு,பிறகு நாட்டாமை வீட்டு கெடா வெட்டப்பட இருக்கும்போது,'அப்போது எனந்த மனிதன் வந்தானோ,இன்னலை ஏற்படுத்த?.வடக்குத்தெரு வாயாடி  குடிகார கோயான் என்றெல்லாம் அழைக்கப்படும் துரைராசு என்பவன் அங்கு வந்து,"தன் வீட்டுக்கெடாவைத்தான் பூசாரி வீட்டு கெடாவுக்கு அடுத்து வெட்ட வேண்டுமென வீண்வம்பு பேசினான்.இதக்கண்ட ஊர் பெரிசுகள் சிலர்,"அப்படியெல்லாம் வழக்கத்தை மாற்றக்கூடாதப்பா,நாட்டாமை கெடாவை வெட்டிய பின்தான் மற்ற கெடாக்கள் வெட்ட வேண்டும்"என மன்றாடினர்,"அதெல்லாம் முடியாது, எங்கெடாதான் வெட்டப்பட வேண்டும்"என மீண்டும் மீண்டும் முரண்டு பிடித்துக்கொண்டிருந்தான் அப்போது  ராசதுரை , அமைதியாக துரைராசு முன் வந்து,"பெரியவர்கள் சொல்வதைக் கேள், நாட்டாமை கெடா வெட்டிய பின் உங்கெடவை வெட்டலாம்,என்று அமைதியாக கூறினான்.அதையெல்லாம் பொருட்படுத்தாமல் துரைராசு வீண் வம்பு செய்துகொண்டிருந்தான் பொறுமையை இழந்த ராசதுரை,உடனே துரைராசுவின் கண்ணத்தில் ஓங்கி ஒரு அறை கொடுத்து அவனை அப்புறப்படுத்திவிட்டான்.. ராசதுரை கொஞ்சம் கோபக்காரந்தான்,ஆனால் குண்வானுமாவான. அதனால் அவனுக்கு ஊரில் நல்ல பெயர்.ஆனால் துரைரசுக்கோ,'குடிகாரன் ,குணக்கேடன் என்றெல்லம் கெட்ட பெயர்தான்.
           பிறகு கெடாவெட்டு அமைதியாக நடந்தது. வீரனாருக்கு படையல் போட்டு,மக்கள் அமைதியாக சாமி கும்பிட்டுவிட்டு படையல் சாதத்தை வாங்க  வரிசையில் நின்றனர்.அப்போது சிலர் தேவையில்லாமல் துரைராசுக்கு ஆதரவாக பேச முன்வந்தனர்.எல்லாம் பாழாய்ப்போன குடியால் ஏற்படுவதுதான்.குடியாலேயே அந்த கிராமத்தில் பல குடிகள் அழிந்துள்ளன.
     துரைராசுவிடம் கொஞ்சம் பணம் இருநததால் அவனைச்சுற்றி எப்போதும். ஒரு கூட்டம் இருந்து கொண்டேயிருக்கும்.அந்த கூட்டத்தில் முக்கியமானவன் சாமிநாதன் என்கிற ஒரு போலியோ நோய் உடையவன்.சிறு வயதிலேயே பெற்றோரை இழந்து பாட்டியுடன் பரிதாப வாழ்க்கை நடத்திக்கொண்டிருப்பவன்.ஆனால் மூளை எப்போதும் நேர் வழியில் வேலை செய்தது இல்லை.வஞ்சனை எண்ணம்கொண்டு கெட்ட எண்ணத்துடனேயே எப்போதும் இருப்பவன்." நொண்டிக்கு நூற்றீயெட்டு கிருத்துவம்""என்று கிராமப்புறங்களில் கூறுவது இவனைப்போன்றவர்களைப் பார்த்துதானோ ,என்னவோ?.இந்த நொண்டியின் தூண்டுதலால்தான் துரைராசு, ஊரில் கெட்ட பெயரை சம்பாதித்துக்கொண்டிருந்தான்.இவர்கள் கெடாவெட்டில் செய்த கலாட்டா ஊர் மக்களையும்,வந்திருந்த உறவினர்களையும் பாதித்தது, ஏன் வீரனாரையே பாதித்து என்றும் சொல்லலாம். பொறுமை காத்த மக்கள் துரைராசுவையும் அவனது கோஷ்டியினரையும் மிகக் கடுமையாகச் சாடினர்.
       நடந்த அனைத்தையும்   அமைதியாக பார்த்துக்கொண்டிருந்த சுக்ரன்,பொறுமையின் எல்லைக்குச் சென்று,பொறுக்கமாட்டாமல், தானும் களமிறங்கினான்.இவனைத் தொடர்ந்து ஊர் இளைநர்களும் பொது மக்களும் திரண்டு கலாட்டா செய்த துரைராசுவையும், அவனது கோஷ்டியினரையும் விரட்டியடித்தனர்.குடிகார கூட்டமான துரைராசுவும் அவந்து கூட்டமும் எடுத்தனர் ஓட்டம்.  மக்கள் கூட்டம் விடாமல் அவர்களைத் துரத்தி அடித்துக் கொண்டே சென்றது.அவர்களோ துண்டைக் கானோம் துணியைக் கனோம் என்று ஓடிக்கொண்டேயிருந்தனர்.
        ஓடிய கூட்டம் அடியும் உதையும் பட்டு ஆங்காங்கே விழுந்து புரண்டு ஓடிக்கொண்டிருந்தனர்.அப்படி ஓடும்போது நொண்டி சாமினாதன் எதிரே இருந்த சமையல்செய்த அடுப்புக்குழி என்பதை அறியாமல் அதனுள் விழுந்துவிட்டான்.நல்ல தீக்காயங்களுடன் கானப்பட்ட அவனை  மருத்துவமனையில் சேர்க்க சுக்ரந்தான் உதவி புரிந்தான். மேலும் பலரும் அந்த கூட்டத்தில் படுகாயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
                  பின்னர் கெடாவெட்டு விருந்து அமைதியாக நடந்து முடிந்தது .ஊர் மக்கள் அனைவரும் அவரவர் வீடு நோக்கி விரைந்து துயில் கொண்டனர். மறுநாள் காலை  நொண்டியைப் பார்ப்பதற்காக மருத்துவமனைக்குச் சென்றான் சுக்ரன்.அய்யகோ, அவன் மருத்துவமனையை அடையுமுன் நொண்டி இறைவனடி சேர்ந்துவிட்டான்.ஆம், வீரனார் தெய்வத்திற்கு நடத்த்ப்படும் விசேஷத்தில் விளையாட்டாகக் கூட சிறு இடைஞ்சலையும் ஏற்ப்டுத்தக்கூடாது. வீரனார் மட்டுமல்ல, எந்த தெய்வந்தான் இதுமாதிரி நடப்பதை ஏற்கும்?
       ஊர் மக்கள் துரைராசு மற்றும் அவனது கூட்டத்திற்காக அழுதாலும்,அவர்களின் கொட்டம் அடங்கியதை எண்ணி தங்கள்வேலைகளை பார்க்க புறப்பட்டனர்.சுக்ரனும் அன்று மாலையே செனையை நோக்கி புறப்பட்டான், கனத்த இதயத்துடன்தான்.

4/10/11

மாசோலியம்

                         ஒரு மனிதனுக்கு ஏற்படுகின்ற எல்லா நிலைகளிலும் காதல்தான் உயர்ந்த நிலை.காதல் இல்லையேல் தனக்கு வாழ்க்கையே இல்லை என்பதாகத்தான் ஒவ்வொரு மனிதனும் எண்ணுகின்றான்.எந்த ஒரு மனிதனும் தனது எந்த ஒருநிலையிலாவது காதல் வயப்பட்டிருக்கவேண்டும்.எனக்கு காதலே ஏற்பட்டதில்லையென்று யாராவது கூறுவார்களேயானால்,அவர்களை மனித வர்க்கத்தினின்று சற்று தள்ளியே அமர்ந்திருக்கச் செய்யலாம்.காதலில் ஆண் பெண் என்ற பாகுபாடே கிடையாது இருபாலாருக்கும் காதல் ஒரேமாதிரிதான் தோன்றும்.ஆணின் காதல் அளவிடற்கரியது,என்பதின் எடுத்துக்காட்டுத்தான் ஷாஜஹான் தன் மனைவிக்காக கட்டிய தாஜ்மஹால்.இன்றளவும் அது காதலின் அழியாச்சின்னமாகவும், உலகின் அதிசய்ங்களில் ஒன்றாகவும் மிளிர்கின்றதே!
                         ஆனால் அதைவிட பெண்ணின் காதல் பேரளவிடற்கரியது.இதோ பெண்ணின் காதலுக்கோர்,பெண்ணின் பெருமைக்கோர் பெரிய சான்று.
         முற்காலத்தில் பாரசீக  நாட்டின் ஒரு பகுதியான காரியா என்ற நாட்டை ஒரு சிற்றரசன் ஆண்டு வந்தான். அவன் பெயர் மாசோலஸ் .நல்ல வாட்டசாட்டமானவன்.ஆணழகனும்கூட.அவன் மனைவி ஆர்ட்டிமிர்சியாவும் நல்ல அழகி.இருவரும் காதலித்து மனம் புரிந்துகொண்டு சிறப்பாக வாழ்ந்து வந்தனர்.இருவரும் காதலில் தங்களை மிஞ்ச யாரும் இல்லை இந்த  உலகில் என்று மற்றவர்கள் கூறுமளவிற்கு ஒருவர்மீது ஒருவர் அளவிலா அன்புகொண்டு வாழ்ந்தனர்.இப்படிப்பட்ட இன்ப வாழ்வில்தானே இடி பலமாக தாக்கும்.அப்படித்தாக்கியது அவர்கள் வாழ்வில் ஓர் பேரிடி.ஆம்.மன்னன் மாசோலஸ் தனது 36- வது வய்தில் நோவாய்ப்பட்டான்.அரச வைத்தியர்கள் முதல் அனைத்துலக் வைத்தியர்களும் சிகிச்சை செய்தும்,பலனின்றி தனது வாழ்வை முடித்துக்கொள்ளநேர்ந்தது,அந்த மாவீரனுக்கு.
                       காதல் கனவன் காலமானதும் அரசு கட்டிலை ஏற்க வேண்டிய நிலை அந்த அபலை  ஆர்ட்டிமிர்சியாவுக்கு.மனதைத் திடமாக்கிக்கொண்டு ஆட்சியில் அமர்ந்தாள்.ஆட்சியில் அதிக வேலைகளிருந்தாலும்  ஆர்ட்டிமிர்சியாவால் தனது அன்புக் கனவனை மறக்கமுடியவில்லை.தனது காதல் கனவனின் நினைவுக்கு ஒரு வடிவம் கொடுக்க முனைந்தாள்.உலகின், மற்ற நாட்டின், பல தேசங்களிலிருந்தும் புகழ்பெற்ற சிற்பிகள் வரவ்ழைக்க்ப்பட்டனர்.பிரமாண்டமான 36 தூண்கள் நிறுவப்பட்டன.மேலே விண்ணைத்தொடும் அளவிற்கு 24 அடுக்குகள் கொண்ட பெரிய விதானம் அமைக்கப்பட்டது. நடுவில் கல்லறை,அத்ற்கும் மேலே மாசோலஸ் மன்னனின் பிரமாண்டமான சிலை. கல்லறைக்குச் செல்ல 200 படிக்கட்டுகள்.படிக்கட்டுகள் அனைத்திலும் வண்ண வண்ண  ஓவியங்கள்.
                           இப்படி மக்கள் அனைவரின் கண்ணையும் ,கருத்தையும் கவரும் வண்ணம் தனது காதல் மன்னனுக்காக நினைவுச்சின்னம்  எழுப்பினாள் ஆர்ட்டிமிர்சியா.அந்த மாளிகைக்கு "மாசோலியம்"என்று பெயர் சூட்டினாள்.அப்போது உல்கப் பேரதிசயங்களில் ஒன்றாகவும் இது கருத்ப்பட்டது. கி.பி. 15 ம் நூற்றாண்டில் படையெடுத்த அயல் நாட்டினர். அந்த காதல் மாளிகையான 'மாசோலியத்தை இடித்துக்கொண்டிருக்கும்போது வயதான முத்யவர் ஒருவர்,"இது காதல் கனவனுக்காக காதல் மனைவி தீட்டிய காதல் காவியம். இதை அழித்துவிட வேண்டாமே?"என்று அவர்களிடம் கேட்டுக்கொண்டாராம். உடனே இதைக் கேட்டதும் சிலிர்த்துப்போய் இடிப்பது நிறுத்த்ப்பட்டது.எஞ்சிய பாகங்கள்தான் இன்று இருப்பதாக தெரிகின்றது
              மேலை நாட்டுக் காதலில் ஆழம் இருக்காது என்பது நமது மக்களின் கனிப்பு.ஆனால் இந்த க் காதல்?....!.இப்போது புரிகின்ற்தா? பெண்ணுக்காக ஆண் கட்டிய காதல் சின்னம்,தாஜ்மஹால்,ஆணுக்காக பெண் கட்டிய காதல் சின்னம் மாசோலியம்.  .
                  காதல் என்பது ஆணுக்கு வாழ்க்கையில் ஓர் அம்சம்.ஆனால் பெண்ணுக்கோ அதுதான் வாழ்க்கை என்று கூறப்படுவதுண்டு.உண்மைதான்.பெண்களைப் பொருத்தவரை காதல் அவ்வளவு ஆழமானது, புனிதமானது.
                           ஒருவர் தனது மனைவியைக் காணவில்லை என்று டி.வி.யில் விளம்பரம் செய்தார்.இதைக்கண்ட மனைவி  மறுநாள் நேராக வீட்டிற்கு வந்து சேர்ந்தாள்.கனவனுக்கு மிகவும் மகிழ்ச்சி.ஆனால் திடீரென்று மறுபடியும் உடனே கானமல் போய்விட்டாள்.அக்கம்பக்கம்பத்தில் இருந்தவர்கள் கனவனிடம்,"ஏன் ம்றுபடியும் சன்டை போட்டீர்களா? என்று விசாரித்தனர் "இல்லை, வீட்டில்தான் கலர் போட்டோ இருக்கே,ஏன் பிளாக் &ஒயிட் கொடுத்தீர்கள்?விளம்பரத்திற்கு? இனிமேல் இதைக்கொடுங்கள்" என்று கூறிவிட்டுப் போய்விட்டாள்"என்று கூறினார்.
                             இது தற்போதைய காதல்.ம்..ம்...ம்ம்ம்.



30/9/11

வேலை

                             நம்மில் பலர் இன்று வேலை தேடுவதையே பெரிய வேலையாக கருதி செயல்படுகின்றனர்.இந்த கால இளைஞ்ர்கள் வேலை தேடும் கொள்கையை முனைப்புடன் செயல்படுத்தும் அதே நேரத்தில்,எப்படி வேலை தேடவேண்டும்,எங்கு வேலை தேடவேண்டும்,யார் மூலம் வேலை தேடவேண்டும், என்றெல்லாம் ந்னறாக அலசி ஆராய்ந்து, நல்ல வழியில் சென்று முய்ற்சிக்க வேண்டும். குறுக்கு வ ழியில் சென்றால் குடும்பத்துக்கு அவப்பெயரும்,மேலும், தனக்கு கெட்டபெயரையும்தான் தேடிக்கொள்ளவேண்டும்.
                                      
                                  ஒருவன் வேலை சம்பந்தமாக முக்கிய பிரமுகர் (வி.ஐ.பி) ஒருவரிடம் சென்றான்.கூடவே தனது தந்தையையும் அழைத்துச்சென்றான்.அவ்னது தந்தையும் அந்த பிரமுகரை வணங்கி தனது மகனுக்கு வேலை வாங்கி தரும்படி வேண்டினார்."சரி,பார்க்கலாம், உங்கள் பையன் எந்த நிறுவனத்திற்கு மணு செய்துள்ளான்?" எனக் கேட்டார்."எங்கேயும் இல்லை அய்யா,தாங்கள் பார்த்து எங்கேயாவது வாங்கி கொடுங்கள், என் பையன் திற்மையை பிறகு பாருங்கள்" என்றார் .பிரமுகருக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. சற்று யோசித்துவிட்டு, "சரி நான் என்னைய்யா ,மற்றவர்களுக்கு வேலை தரும் அளவிற்கு எந்த நிறுவனமும் நடத்தவில்லையே,என்னால் ,யாரிடமாவது சொல்லி, வேலை தரச்சொல்லலாமே தவிர, நான் எப்படி வேலை தர முடி யும்?.அதுவும் நீங்கள் எங்காவது 'வேலைக்கு ஆள் கேட்டிருக்கின்றர்கள்.அதற்கு மணு செய்துள்ளேன்,கொஞ்சம் ஏற்பாடு செய்யுங்கள்' என்றால் சரி.அதை விடுத்து, சும்மா வந்து நின்றுகொண்டு 'எனக்கு எங்கேயாவது வேலை வாங்கி கொடுங்கள் 'என்றால் என்னால்  எப்படி செய்யமுடியும்?.என்று கேட்டார்.
                    " நாங்கள் இப்போது என்ன செய்ய வேண்டும், என்று கூறுங்கள்? அதன்படி நாங்கள் செய்கின்றோம்'  என்று தந்தையும் த்னயனும் விவரத்தை ந்ன்றாக அறிந்துகொண்டு அங்கிருந்து புறப்பட்டனர்  இது ஒருவகையான வேலை தேடும் நிலைப்பாடு.
             தந்தயும் மகனும் இனி எந்தெந்த நிறுவனங்களில் ஏறி, இறங்க இருக்கின்றன்ரோ அது அவர்களுக்குத்தான் வெளிச்சம்.

                   இனி  இன்னொருவகையான வேலை தேடும் முறையைப்பார்ப்போம்..

                ஒரு நிறுவனத்தில்,சில குறிப்பிட்ட வேலைக்கு ஆட்கள் தேவை என விளம்பரம் வந்தது.அந்த நிறுவனத்திற்கு தேவையான ஆட்களை விட ஏறத்தாழ ஐம்பது மடங்கு அதிகமாக விண்ணப்பங்கள் வந்து சேர்ந்து விட்டன. மேலும் இறுதி நாளன்று மாலை 5.00 மணியளவில் ஒரு விண்ணப்பதாரர் வந்து தனது விண்ணப்பத்தைச் சமர்ப்பித்தார்.
                    "நேரம் முடிந்து விட்டது."எனக் கூறி அவருடைய வியண்ணப்பத்தை நிராகரித்தார்,அங்கிருந்த கடை நிலை ஊழியர்.ஆனால் விண்ணப்பதாரரோ,'தாம் வந்த பேருந்து சற்று தாமதமாக வந்து விட்டது,சற்று பொருத்தருள வேண்டும்.தயவு செய்து ஏற்றுக்கொள்ளூங்கள்" என்று மன்றாடினார்.ஆனால் கடைநிலை ஊழியர் அவரை பொருட்படுத்தாமல்,தனது மேல்நிலை ஊழியரை வரவழைத்தார்.வந்தவரும் விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்ள மறுத்தாரேயன்றி,விண்ணப்பத்தாரருக்கு ஆதரவாக செயல்படவில்லை.பிறகு இரண்டு முதுநிலை மேலாளர்கள் வந்தனர்.அவர்களும் அதே பதிலைத்தான் தந்தனர். இவ்வளவையும் ,தாமதமாக வந்த வேறு சிலரும்,பார்த்துக்கொண்டிருந்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர்.
       ஆனால் நமது நாயகனோ அங்கிருந்து செல்வதாக இல்லை.பின்னர் ஒரு வழியாக அங்கிருந்தவர்களிடம் அணுமதி பெற்றுக்கொண்டு மேலான்மை இயக்குனரை நேரடியாக சென்று சந்தித்து தனது காலதாமதத்துக்கான காரணத்தையும், தனது குடுமப நிலையையும் ,மிகத் தெளிவாக விவரித்தான்.மேலான்மை இயக்குனரோ "நீ சொல்வது சரிப்பா,ஆனால் இந்த நிலையில் என்னால்  எதுவும் செய்யமுடியாத நிலையில் இருக்கின்றேனே"என்று இழுத்து.. "இப்பொழுது வந்துள்ள இவ்வளவு விண்ணப்பங்களையும் எப்படி பிரித்து,தகுதியானவர்களை தேர்ந்தெடுப்பது என்பதே பெரிய வேலையப்பா,"என்று அவர் கூறி முடிப்பதற்குள், "அய்யா, அந்த வேலையையாவது எனக்கு கொடுங்களேன்.நான் அதை பிரித்து தேர்ந்தெடுக்கும் வேலையை பார்க்கின்றேனே?"என்றார் அதற்கும் எம் .டி.,,"முன்பே அதற்காக,ஒருசிலரை நியமித்துள்ளோமே" என்றார்..இத்ற்கும் இந்த விடாக்கண்டன் கொடாக்கண்டனாக மாறி,"அவர்களில் நானும் ஒருவனாக இருக்கின்றேன அ ய்யா ,எப்படியாவது எங்கள் குடும்பத்தை சில நாட்களாவது பட்டினியிலிருந்து காப்பாற்றிய புண்ணியம் உங்களைச்சாரும் " என்று கூறினான்.
                 இதற்குமேல் எம்.டி.யால் ஏதும் பேசமுடியவில்லை.அவரும் மனிதர்தானே? எவ்வள்வு பெரிய இடத்தில் இருந்தாலும் மனம் எல்லோருக்கும் மனிதநேயத்துடந்தானே அமைந்துள்ளது?.பிறகு ஒருவாறு சமாளித்து,"சரி, சரி,நாளை வந்து என்னைப் பார்.நான் ஏதாவது செய்கின்றேன்" என்றார்.
                மறுநாள் நமது ஆள் சென்றார்,வேலை கிடைத்தது.இவருடைய வேலைத்திறமையைப் பார்த்து தொடர்ந்து அந்த அலுவலகத்திலேயே வேலையில் சேர்ந்து நன்றாக பணியாற்றி அனைவரிடமும் நல்ல பெயர் வங்கினான்.
                  சில நாட்களில், அங்கு வேலை பார்க்கும்  அனைவரும்,"நீ நல்ல திறமையும் யாரிடம் எப்படிப் பேசவேண்டும் என்ற புத்திசாலித்தனமும்
உடைவன். உன்னைத்தான்யா ""வந்தான் ,வென்றான்"என்று சொல்ல வேண்டும்" என்று கூறி அவனை திக்குமுக்காட செய்தனர்.


19/9/11

சமயல் சுலபம்தான்

                                   சாப்பாட்டு சமாச்சாரத்தில் ஒவ்வொரு வீட்டிலும் ஏதாவது பிரச்சினைகள் வருவது சகஜ்மே.அதிலும் சில வீடுகளில் ஆண்கள் சமைத்தால் பிரச்சினையே வருவதில்லை.ஆனால் சில கணவன்மார்கள் தங்கள் சமயலைப் ப்ற்றி தங்கள் மனைவிகளிடம் மிகவும் அலட்டிக்கொள்வார்கள்.மறைமுகமாக ஆதங்கமும் படுவார்கள்.
                              கணவன் சொல்வதையெல்லாம் கேட்டுக்கொண்டு,கணவன் சமைத்ததையே தின்றுவிட்டு,கண்டபடி ஊர் சுற்றி வரும் சில மனைவிமார்கள்,
 'கணவன் சமைத்ததுதானே நாம் சாப்பிடுகின்றோம் 'என்ற எண்ணமின்றி, கணவனின் சமயலை கிண்டல் பண்ணிக்கொண்டும்,கேலிப்பேசிக்கொண்டும்,ஏளனம் செய்துகொண்டும் காலம் தள்ளிக்கொண்டிருப்பார்கள்.இன்னும் சில மனைவிமார்களோ  ஒருபடி மேலே சென்று "வெந்ததைத் தின்று வீதிவலம் வருபவளா நான்?" என்றெல்லாம் பேசித்திரிவர்.  கணவனும் வாய்மூடி மௌனியாய் மனைவி காலால் இட்ட வேலையை தலையால் செய்துமுடித்து,தங்கள் மனைவி மார்களுக்கு சேவை செய்வதையே பெரும்பாக்கியமாக கருதுவதுண்டு.இந்த பிறவியில் தாங்கள் ஏதோ தங்கள் மனைவிமார்களுக்கு
சேவை செய்தால் மறு பிறவியிலாவது தங்களுக்கு நல்ல மனைவியோ அல்லது இதைவிட சிறந்த மனைவியோ கிடைப்பாள் என்று    ஏக்கப் பெருமூச்சு விட்டுக்கொண்டு வீட்டிலேயே முடங்கிக் கிட்ப்பவர்களும் உண்டு.
                        ஒருமுறை ,ஒரு கணவன் மனைவியரிடையே சமையலைப் ற்றி பெரிய வாக்குவாதம் ஏறபட்டு, அதுவும் வய்ச்சண்டையாகி,பின்ன் ர் கைச்சண்டை ஆகும் அளவுக்கு முற்றீவிட்டது.சண்டையின் முடிவில் கணவனும் மனைவியும் சமாதானமாகி,(எல்லா வீட்டிலும் ந்டப்பதுதானே என்கிறீர்களா?) ஆளுக்குப் பதினைந்து நாட்கள் சமைப்பது என முடிவானது.அந்த ஏற்பாட்டின்படி கணவன் முதல் பதினைந்து நாட்களும் ,மனைவி அடுத்த பதினைந்து நாட்களும் சமைக்கவேண்டும்.   முதல் பதினைந்து நாடகள் கணவன் நன்றாக சமைத்து நன்றாக மனைவிக்கான பனிவிடைகள் செய்து எப்போதும்போல நல்ல பெயர் வாங்கினான்.
           அடுத்த பதினந்து நாட்கள் மனைவி சமைக்கவேண்டிய முறை வந்தது.
அவளும் கணவனிடம் நல்ல பெயர் வாங்கவேண்டும் என்ற எண்ணத்தில்,அந்த ஊரில் நன்றாக சமைக்கும் சில அனுபவம் வாய்ந்த பெண்மணிகளிடம் எல்லாம் கேட்டும்,சில தொலைக்காட்சித் தொடர்களைப் பார்த்தும்,பல சமையல் புதககங்களை நன்கு படித்தும் ,தனது கடமையே கண்ணாக கருதி நல்ல முறையில் சமையல் செய்து கணவனுக்குப் பரிமாறினாள்.கணவனும் மனைவி செய்யும் அனைத்தையும் எதுவும் கூறாமல் ஏற்றுக்கொண்டு அமைதியாக அனைத்து நாட்களையும் நன்றாக கழித்து வந்தான்.
            பதினைந்தாம் நாள் முடிவில் மனைவி கணவனிடம் நினைவுபடுத்தினாள்,"நாளை முதல் உங்கள் சமையல்.நீங்களும் என்னைப்போல நன்றாக சமைத்து என்னிடம்  மேலும் நல்ல பெயர் வாங்க வேண்டும் கடந்த பதினைந்து நாட்களில் ஒருமுறையாவது நீங்கள் என் சமைய்லில் குறை சொன்னதுண்டா?எவ்வளவு நன்றாக நான் சமைத்தேன்? என்று கூறினாள்.அதற்கு கணவனோ அமைதியாக,"ஆமாமாம், நீ பதினைந்து நாட்கள் சமைக்கின்றாயே, எப்போது முடியும் என்ற்தான் காத்துக்கொண்டிருந்தேன்" என்று கூறினான்..  ஏங்க ,நான் இந்த பதினைந்து நாட்கள் சமைத்தது ,'பதினைந்து நாட்கள் இப்படி மனைவியை  கஷ்டப்படுத்துகிறோமே என்று உங்களுக்குகவலையாக  இருந்ததா? எனக்கு சமையல் செய்வது அப்படி ஒன்றும் பெரிய சிரமமாக தெரியவில்லை.மிகச்சுலபமாகத்தான் இருந்தது.'என்றாள். அதற்கு கணவன் "ம்..ம்..சமையல் செய்தது உனக்கு சுலபமாகத்தான் இருந்தது;அதை சாப்பிட்ட எனக்க்ல்லவா தெரியும், நான் பட்ட அவஸ்தை"என்றாரே.  பிறகென்ன அங்கு தம்பதியரிடையே தொடர்ந்து தோன்றியதையும் கூறவேண்டும் என்ன?

12/9/11

புதிய பார்வை

      மனிதர்களாய் பிறந்த அனைவரும் தினம் தினம் புதிதாய் பிறந்துகொண்டுதான் இருக்கின்றார்கள்.அப்படி பிறக்காதவர்கள் வாழததெரியாதவர்கள்.புதிதாய் பிறக்கின்றார்கள் என்றால்,புதிதாய் இந்த உலகைப் பார்க்கின்றாரகள்,புதியவர்களை நேசிக்கின்றார்கள்,புதிய எண்ணங்களை வளர்த்துக்கொள்கின்றார்கள்,புதிய வாழ்க்கை வாழ வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்திக்கொள்கின்றார்கள்.
            தினம் தினம் மனிதன் விழித்து எழுந்ததும் புதி ய  வானத்தைப் பார்க்கின்றான், புதிய கதிரவனைக் கானுகின்றான்,புதிய மல்ர்களை நோக்குகின்றான்,புதிய பறவகள்,புதிய காற்று, புதிய நீர், புதிய நண்பர்கள், புதிய சிந்தனை, புதிய ஓசை, புதிய நாற்றம்,புதிய சாலைகள்,புதிய மேகம் ,புதிய மழை, புதிய தென்றல்,இன்னும் என்னென்னவோ, அவன் பார்க்கும் அனைத்துமே புதியவைகள்தான்.
     நேற்றுப் பார்த்த வானத்தையா நாம் இன்று பார்க்கின்றோம்? அதில் எத்தனை மாற்றங்கள்? எத்தனை வண்ணங்கள்?அத்தனையும் புதிதாய், புதிய தோற்றத்துடன்!  கதிரவனின் ஒளிக்கதிர்களும் அப்படித்தானே,.எத்தனை மாற்றங்கள்? சிலநேரங்களில் வானில் மேகமூட்டம் இருந்தால்,கதிரவனைக் கானவே முடியாதே! மரங்க்ள்,செடிகொடிகள்,புள்ளினங்கள் அனைத்திலுமே புதிய தோற்றங்கள் ,புதிய பரிமான்ங்கள்,அப்பப்பா,அனைத்தும் இயற்கையின் திருவிளையாட்ல்தானே.
                 நாம் உள்ளீழுத்து,வெளிவிடும் மூச்சுக்காற்றும் புதியவைதானே.ஏன், நம்து மூச்சுகூட புதுசுதானே.இப்போதுதான் நாம் புதிதாய் பிறக்கின்றோம்.கவி பாரதி சொன்னானே "இன்று புதிதாய்ப் பிறந்தோம்" என்று.ஒவ்வொரு மனிதனும் தினம் தினம் புதிதாய்த்தான் பிறக்கின்றான்.நாள் வளர வளர மனிதனும் வளர்கின்றான்,எப்போழுதும் புதிதாய் வளர்ந்துகொண்டேயிருக்கின்றான்.அந்த புதிய வள்ர்ச்சியில்தான் மனிதனின் எண்ணங்கள் வள்ர்ந்து கொண்டேயிருக்கின்றன.புதிதாய் பிறக்கின்ற ஒவ்வொருநொடியிலும் நம்து முந்தைய எண்ணங்கள் மறைந்து புதிய எண்ணங்கள் உத்யமாகின்றன. நம்மிடம் இருக்கின்ற மகிழ்ச்சி, கோபம் ,வண்மம், பயம்,.அறிவு, ஆற்றல் அனைத்துமே புதிதாய்த்தான் உருவகம் பெறுகின்றன.
       எவனொருவன் தினம் தினம் புதிதாய் பிறக்கின்றானொ அவனெப்போதும் திருப்தியுடன் இருக்கின்றான்.அவனது பார்வயில் கூர்மை தெரியும்,அவனது உடலில் இளமை துள்ளிவிளையாடும்,அவனது ஆற்றலில் அதிக வேகம் இருக்கும்,அவனது மனதில் மகிழ்ச்சி தாண்டவமாடும்,அவனது சிந்தனையில் தெளிவு தெற்றென தோற்றமளிக்கும்.
          தான் என்ற தன்மை கொண்டு,தறுதலையாக வாழும் எண்ணங்களை மறக்க வேண்ண்டும்.தான் என்ற தர்க்கம்,தறுதலை என்ற மூர்க்கம் ஆகியவ்ற்றைக் கொண்டிருப்பவன் மீண்டும் புதிதாய் பிறப்பதேயில்லை .
தன்னுடைய என்ற தன்மையை ஒருவன் இழக்க முன்வர வேண்டும்.என்னுடைய என்ற இறுமாப்பை எவன் என்றும் கைக்கொள்கின்றானோ அவன் தினம் தினம் இறப்பவன்,பிறப்பவனல்ல..எவன் காலச்சக்கரத்தின் சுழற்சியில் அகப்படாமல்  புத்துணர்ச்சியோடு புது உலகை
காண்கின்றானோ அவனே புதிதாய் பிறப்பவன்.
                        "அடுத்தவனை தோற்கடித்தல் உனது வெற்றியல்ல. உனது குறிக்கோளை நீ அடைவதுதான் உன்னுடைய உண்மையான வெற்றி.""

8/9/11

கண்ணதாசன் கருத்துக்கள்

தத்துவம்      ஒன்று நடந்துதான் தீருமென்றால் அதைப் பற்றிக் கவலைப்பட்டு என்ன பயன்?
              இந்த வாழ்க்கையில் கசப்பையே இனிப்பாக்கிக் கொள்ளுங்கள்.இருட்டையே வெளிச்சமாக்கிக்கொள்ளுங்கள்.நஷ்டத்தையே லாபமாக்கிக்கொள்ளூங்கள்.எது நேர்ந்தாலும் கவலைப்ப்டாதீர்கள்.விதி என்ற உண்மையைப் போட்டு அதை துடைத்துவிடுங்கள்.
            எந்தசெய்தியையும் அமைதியாக கேளூங்கள்.உடம்பை அலட்டிக்கொள்ளாதீர்கள்.
           யாராவது தாறுமாறாக உங்களிடம் பேசிக்கொண்டிருந்தால்,'நீங்கள் சொல்வதே சரியாக இருக்கக்கூடும்' என்று சொல்லிவிடுங்கள்.
           உங்களை 'முட்டாள்' என்று திட்டினால்"எனக்கு கூட அந்த சந்தேகம் உண்டு"என்று கூறுங்கள்.
            உங்கள் மனைவி சண்டை போட்டால் "சம்சாரத்தில் இதுதான் முக்கிய கட்டம்"என்று கருதுங்கள்.
          யாராவது உங்களை அவமானப்படுத்தினால் ஒரு அனுபவம் செகரிக்கப்பட்டுவிட்டதென்று கருதுங்கள்.
           வருகின்ற துன்பங்கள் எல்லாம் ஒன்று, இரண்டு,மூன்று என்று அநுபவமாக சேகரித்துக்கொள்ளுங்கள்.
            புதுப் புது அனுபவமாக சேகரியுங்கள ஒரே அநுபவத்திற்கு  இரண்டு மூன்று பதிப்புகள் போடாதீர்கள்.
              'நம்மால் ஆனது ஒன்றுமில்லை' என்ற நினைப்பு,'நமக்கு வந்தது துன்பமில்லை'என்று நினைக்க வைத்து சாந்தியைத் தரும்.
              நாட்டையே கட்டி ஆண்டவர்கள் எல்லாம்கூட கோர்ட்டை மிதிக்கும்படி விதிவவைக்கிறதே! உனக்கும் எனக்கும் வருவது துன்பமா என்ன?


                 கண்ணதாசனின் "அர்த்த்முள்ள இந்துமதம்"என நூலிலிருந்து.

காலாம்புடிக்கியும், மேணாமிணுக்கியும். (நையாண்டி தொடர்)

     கா.பு: என்னடா, மேணா மிணுக்கி,கொஞ்ச நாளா ஆளையே கானோம்?
    மே.மி: இல்லண்ணே.கொஞ்சம் ஊருக்குப் போயிருந்தேன்.மழை பெய்ததால ஒடனே வர முடியல.
      கா.பு.:சரிடா,இந்த கருனாநிதி என்னடா திருச்சி இடைத்தேர்தல ல போட்டி போட மாட்டோம்னு சொல்லியிரூக்காரு?அப்பறம்,உள்ளாட்சித் தேர்தலையும் புறக்கனிப்போம்னும் ஆலோசணை பண்ணிகிட்டு இருக்காராம்.
     மே.மி: என்னண்ணே,அவ்வள்வு மோசமாவா போயிடுச்சு,தி.மு.க?
      கா.பு:ஆமாடா, ஆட்சியில் இருக்கும்போதே தமிழ்நாடு முழுவதும் போட்டி போட்டு,எதிக்கட்சியா கூட வரமுடியல.இனிமே என்னத்த போட்டியிட்டு,எப்படி ஜெயிக்கமுடியும்னு செயற்குழுவுல ஆலோசணை பன்னப் போறாராம்.
        மே.மி: ஆமாண்ணே,செய்ற்குழுகூட்டம் கடலூரா? வேலூரா?,பாளையங்கோட்டையா?,சேலமா?, திருச்சியா?,அல்லது கோவையா?
        கா.பு:டேய், அநேகமா டில்லியில் இருக்கும்னு நினைக்கிறேண்டா.ஏன்னா,
       அங்கதாண்டா கனிமொழி இருக்குது.
        மே.மி:அது சரிண்ணே, சட்டமன்றத்துக்கே போகமாட்டோம்னு சொல்லிபுட்டு திடீர்னு போறாங்க,திடீர்னு போகமாட்டோம்னு சொல்றாங்க.அப்புறம் போய்ட்டு தினசரி வெளிநடப்புன்றாங்க.....
        கா.பு:அதாண்டா,அவங்க சானநாயகம்.இதுகூட பரவாயில்லடா,பேரவைத்தலைவ்ர் திருக்குறள் படிச்சதுக்கே வெளிநடப்புன்னா பாத்துக்கடா.இனிமேல் திருவள்ளுவ்ரே வந்தாலும் இந்த தி.மு.க காரங்களையும்,கருனாநிதியையும் திருத்தவே முடியாதுப்பா.
        மே.மி:அது சரிண்ணே,பாண்டிச்சேரியில் என்.ஆர். காங்கிரஸை ஆதரிக்கிறதா ராம்தாஸ் சொல்லியிருக்கின்றாரே.
         கா.பு. ஆமாடா,இப்ப மீண்டும் அவருக்கு சாதி உணர்வு தலை தூக்குதுன்னு நினைக்கிறேண்டா.
         மே.மி:ஏண்ணே, ராம்தாஸ்க்கும், திருமாவளவனுக்கும் இந்த சாதிய விட்டா வேறு எதுவும் அரசியலில் தெரியாதா?
           கா.பு.:டேய், ராம்தாஸ்க்கு தன் மகன் அன்புமணி மந்திரியாகனும்,திருவுக்கு தானும் அரசியலில் இருக்குறோம் என்பதைக் காட்டிக்கொள்ளனும்.அவ்வள்வுதாண்டா.
             மே.மி:சரிண்ணே, வேறு ஏதாவது பொது தகவல் இருக்கண்ணே?
             கா.பு:  இருக்குடா இருக்கு."வரும் 27 ந்தேதியிலிருந்து 140 என்ற எண்ணிலிருந்து மட்டும்தான் வியாபார அழைப்புக்கள் நமது செல்லிடப்பேசிக்கு வரலாம். அதையும் நாம் வேனாம் என்று பதிவு செய்த்விட்டால் மீண்டும் அந்த அழைப்பு வரக்கூடாது.
             மே.மி: நல்ல தகவ்ல் அண்ணே, வரட்டுமா?.

6/9/11

முத்துக்கள்

                .
             1 If your heart is pure,then all thin s in your world are pure.

 .       . 2..  நேற்றைய சம்பவங்களின் நினைவுகள்தான் இன்றைய மகிழ்ச்சி/கவலை.

              3.  ஒரு சந்தர்ப்பம் தவறிவிட்டால் கண்ணீர் சிந்துவதைவிட அடுத்ததும் கை நழுவிப் போகாமல் இருக்க நாம் நமது பார்வையை தெளிவாக வைத்திருக்கவேண்டும்.

            6.தாரமும் குருவும் தலை விதிப்படிதான்.

           7.படுத்தால் பாதையாகவும், நின்றால் ஏணியாகவும் செயல்பட வேண்டும்.

          8,வழ்வதற்குப் பொருள் வேண்டும்தான்,நீ வாழ்வதிலும் பொருள் வேண்டுமே.

           9.வயலைவெட்டி,வரப்பைவெட்டி, பணத்தைவெட்டினார் என் அப்பா,நான் படிப்பதற்கு.

           10.கடலில் உள்ள எத்தனையோ பொருட்கள் வலையில் சிக்குகின்றன,ஆனால் அலை சிக்குவதில்லையே.

            11.சிக்கலில் உருவாவதுதான் சிலந்தி வலை.சிலந்தி எப்போதாவது அதில் சிக்கியதுண்டா?

            12.கறையான் கட்டிய புற்றில்தான் கருநாகம் குடியேறும்.அதற்காக கறையான் வேறு புற்றுக்கள் கட்டாமலா இருக்கின்றன?

            13.வசந்தம் வந்தால் அவள் வருகின்றாள்
                  தென்றல் வந்தால் அவள் தெரிகின்றாள்
                  மழை வந்தால் மண் மணக்கும் என்
                 மனைவி வந்தால் மனம் சிரிக்கும்.

              14.என் கண் சிவந்தது' சென்னை கண்' (Madras eye)வருகை
                   கீழ்வானம் சிவந்தது கதிரவன் வருகை,
                   கிளுகிளுப்பை ஒலித்தது குழந்தையின் அழுகை.

4.   பொக்கைவாய்
               பூரிப்பில் அவள்
              குழந்தை சிரித்தது.


           5.வருகின்றது
             கடிக்கின்றது
             வாசலில் நிற்கின்றது
            கொசு.

          
  15.தும்பைப்பூ நிறச்சட்டை தூய்மையின் அடையாளம்
    
             16.தாலிக்குத் தங்கம் இலவ்சம்
                  தாலிகட்ட ஓர் ஆண் மகன்.............

             17.காலம் கருப்பு உடை அணியும் நேரம்தான் இரவு.

             18.கஷ்டப்படாமல் வாழ கஷ்டப்படவேண்டும்.
       
              19.மனிதர்களை நேசிக்கின்ற பொருட்கள் கிடையாது,ஆனால்
                  பொருட்களை நேசிக்காத மனிதன் உண்டா?

              20.சைக்கிளைக் கண்டால் ஓட்டுகின்றோம்,
                  டி.வி.இருந்தால் பார்க்கின்றோம்,
                  செல்போன் இருந்தால் பேசுகின்றோம்,
                 புத்தகங்கள் இருந்தால் படிக்கின்றோமா?

                                                                                                            காலிங்கராயர்

                 



       

30/8/11

ஒரு நொடியில்

                                     அந்தக் காலங்களில் பெரும்பாலும் மக்கள் பயனம் செய்வதற்கு மாட்டு வண்டிகளைத்தான் அதிகம் பயன்டுத்தி வந்தனர்.இப்போது உள்ளதுபோல பேருந்தோ சிற்றுந்தோ அல்லது ஆட்டோக்களோ எதுவும அதிகம் ஓடிக்கொண்டிருக்கவில்லை.ரயில் நிலயங்களீல் இருந்தோ பேருந்து நிலையங்களிலிருந்தோ வருபவர்கள் ஜட்கா வண்டியிலோ அல்லது கிராம்ப்புறமானால் மாட்டுவண்டிகளிலோதான் தங்கள் இருப்பிடங்களுக்குச் செல்ல வேண்டும்.

                              ஒருமுறை தமிழறிநர் பண்டிதமனி மு.கதிரேசன் செட்டியார் அவர்கள் ரயிலிலிருந்து இறங்கி தமது கிராமத்துக்குச் செல்ல மாட்டுவண்டியை ஏற்பாடு செய்தார்.ரயிலடியில் நின்றிருந்த பல மாட்டுவண்டிக்காரர்கள் நான் நீ என போட்டி போட்டுக்கொண்டு வந்தனர். அதில் ஒரு வண்டிக்காரனிடம் கூலியைப் பேச ஆரம்பித்தார்.எல்லோரும் கூலி ஒரேமாதிரிதான் கேட்டனர்.ஆனால் யார் தம்மை சீக்கிரம் தமது கிராமத்தில் சேர்ப்பர் என்பதுதான் அவருக்கு கவலையாக இருந்தது.அதில் ஒரு வண்டிக்காரன் மட்டும் "தான் சீக்கிரம் சேர்த்து விடுவதாக கூறினான்.'ஆனால் சிறிது தயக்கத்துடன் சாலை கொஞ்சம் சரியில்லை .மழை பெய்து குண்டும் குழியுமாக இருப்பதாக கூறினான்.உடனே வேரொரு வண்டிக்காரன் 'தமது மாடுகள் இளகாளைகள் என்றும் தாம் ஒரு நொடியில் கொண்டு போய் சேர்த்து விடுவதாகக் கூறினான்.பண்டிதமனி அவர்களும் அவனிடமே பேசி அந்த வண்டியில் ஏறி அமர்ந்தர்.
                            வண்டி வேகமாகச் சென்றது.இளங்காளைகளாயிற்றே.சிறிது தூரம் வரை சாலையும் நன்றாகத்தான் இருந்தது.பண்டிதமனி அவர்களும் தாம் சீக்கிரம் வீடு போய் சேர்ந்து விடலாம் என்று நினைத்துகொண்டு வண்டிக்காரன் தம்மை ஒரு நொடியில் கொண்டுபோய் சேர்த்துவிடுவான் என எண்ணி பெருமிதத்துடன் வண்டியில் அமைதியாக உட்கார்ந்து இருந்தார். சிறிது தூரம் கடந்தபின்தான் சாலை குண்டும் குழியுமாக மக்கள் நடப்பத்ற்கே மிகவும் சிரம்ப்பட் வேண்டியிருப்பது தெரியவந்தது.
                                 கொஞ்சதூரம் மிகவும் மெதுவாகத்தான் வண்டி செல்லவேண்டியநிலை.காலைவெயில் ஏறிக்கொண்டிருந்தது.நடந்து வரும் மக்களும் சிரமப்பட்டே மிக மெதுவாக நடந்து வந்துகொண்டிருந்தனர்.எதிரே ஒரு வயதானவர் வெயிலுக்காக குடைபிடித்துக்கொண்டு ந்டந்துவந்துகொண்டிருந்தார்.குடையைக் கண்டதும் மாடுகள் வெறித்து தாறுமாறாக ஓட, அருகில் இருந்த ஒரு நொடியில் வண்டி குடைசாய்ந்துவிட்டது.
                                   "அய்யா, மன்னித்துக்கொள்ளுங்கள். குடையைக்கண்டதும் மாடு கொஞ்சம் வெறித்துவிட்டது.சாலையும் சரியில்லாத்தால் இந்த நொடியில் தாங்கள் வண்டியோடு சேர்ந்து விழ வேண்டியதாகிவிட்டது.இதோ மீண்டும் ஒரு நொடியில் உங்களை  சேர்த்துவிடுகிறேன்".என்றுகூறினார்வண்டிக்காரர்.உடனே, பண்டிதமனி அவர்கள்,"பரவாயில்லையப்பா,என்னை ஒரு நொடியில் சேர்த்துவிடுகிறேன்,என்றாய்,அப்படி சொன்னதைச் செய்தவன் நீதானப்பா."என்றுகூறி
அந்த நேரத்திலும் கலகலப்பை உண்டுபன்னினார்.
                          இந்த மாதிரி நேரங்களில் துன்பத்திலும் இன்பம் சேர்த்து
நகைச்சுவை  உணர்வோடு பேசுவதுதான் பண்டிதர்களின் தனிப்பெரும் தன்மையாகும்.
                                                                       *******
                                     

26/8/11

உறவு

                                                       உறவுகள்      
                              கனவன் மனைவி இருவர்.(கனவனும் மனைவியும் இருவர்தான் என்கிறீர்களா?)எப்பொழுதும் சண்டையும் சச்சரவுமாகவே வாழ்ந்து வந்தனர்.திருமணம் ஆன நாள் முதல் தினமும் இதே பிரச்சினைதான்.அதுவும் யாராவது உறவினர்கள் வந்து விட்டாலோ வர இருப்பதாக அறிகுறிகள் தென்பட்டாலோ உடனே வீடு அல்லோலகல்லோலப்படும்.
                                      கனவ்ன் வீட்டு நபர்களையும் அவர்களது உறவினர்களையும்
எப்பொழுதும் குறை சொல்லி பேசுவதே மனைவிகளுக்கு சிறந்த பொழுது போக்காக இருக்கும்.எந்தக் காரணத்தைக்கொண்டும் பிறந்த வீட்டுப் பெருமையை மட்டும் விட்டு தரவே மாட்டார்கள்.அவர்கள் எப்படி வாழ்ந்தார்கள், அவர்களை கட்டிக் கொள்ள யார்யார் வந்து  கியுவில் நின்றார்கள் என்பதை கோடி வீட்டு குப்புசாமி முதல் மயிலைக்காளை வைத்திருக்கும் மைனர் வரை கூறி கனவன்மார்களை வெறுப்பேற்றுவார்கள்.
கனவனும் பதிலுக்கு "போடி போக்கத்தவளே,குப்புசாமி தேவரும் மைனரும் உன்னைவச்சுக்கத்தாண்டி ஆசப்பட்டானுக, கட்டிக்க யாரும் வரலைடி.உன் அப்பந்தாண்டி உன் ஆத்தாவோட ஓடிவந்து என் அப்பன் ஆத்தா கால்ல விழுந்து உன்னை எந்தலையில கட்டிவிட்டாங்க.இப்ப நீ என்னன்னா குதிக்கிரே கும்மாள் போடுரே  ம்,..இப்ப நான் நினச்சாலும் உன்னையும் உன் குலத்தையும்
வேரோடும் வேரடி மன்னோடும் வெட்டிச் சாச்சுப் புடுவேண்டி"என்று ஒன்றும் செய்ய முடியாதுயென்றாலு்ம் வீராப்பு பேசுவர்
                                   இப்படியேதான் அவர்களது வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது.அது வளமான வாழ்க்கைதான் என்றாலும், தினமும் வம்படிக்கும் வாழ்க்கையாகிப்போனதே.கனவனுக்கும் மனைவிக்கும் கருத்து வேறுபாடு வரலாம்,அதை அவர்களின் வாழ்க்கையை  கருவருக்கு்ம் வேறுபாடாக வளரவிடக்கூடாது.தங்கள் குலப்பெருமைப் பேசலாம்,தவறில்லை.தமிழர்கள் எப்பொழுதுமே தங்கள் குலப்பெருமையையும்,பழ்ம்பெருமையையும் பேசியே வாழ்ந்து கொண்டிருப்பவர்களாயிற்றே.நம்து பெருமையை நாம்தான் பேசவேண்டும்,அடுத்தவர்களா பேசுவார்கள்?அப்படி குலப் பெருமையைப் பேசும் குலக்கொழுந்துகளே,'உங்கள் பேச்சு பேச்சாகத்தான் இருக்கவேண்டுமே தவிர,நச்சரவமாக மாறிவிடக்கூடாது'
                              ஒருநாள் இந்த கனவன் மனைவி சண்டை உச்ச கட்டத்தில் நடந்துகொ்டிருக்கும் நேரத்தில்,கனவனின் நண்பர் ஒருவர் அங்கு வந்தார்.எதிர்பாராத விதமாக ஒரு பிரச்சினை உச்சகட்டம் அடையும்போது, , நல்ல பிரச்சினை நீண்டு வள்ரவும், கெட்டப் பிரச்சினை ஒரு முடிவு பெறவும் இயற்கையிலேயே வழி ஏற்படும் .வந்த நண்பர் பிரச்சினை என்னவென்று கேட்டார்.கனவனோ "ஒன்றுமில்லையப்பா,யாராவது என்னுடைய உறவினரகள் ஊரிலிருந்து வந்தால் இவள் கண்டு கொளவதேயில்லை.அதேநேரம் அவளது உறவினர்கள் வந்து விட்டால் என்ன உபசரிப்பு தெரியுமா?"
                   "இதெல்லாம் எல்லா மனைவிமார்களும் செய்வதுதானே,அதைக் கண்டும் காணாமல் செல்வதுதான்  நல்ல கணவர்களின் பண்பாடு"என்றார்.
                      அதற்குள் மனைவி," அப்படி ஒன்றுமில்லை அண்ணா,இன்றுகூட அவரோட உறவினர்கள்தான் வந்திருந்தாகள்,நன்றாகத்தான் கவனித்தேன்" என்றாள்.
          "அப்படியா? பிறகு ஏனப்பா பிரச்சினையை நீயே உருவாக்குகின்றாய்?" என்று கேட்டார்.
   " அந்த என்னோட உறவினர்கள் யார் என்று அவளையே கேள்" என்றார்.
               "அவரோட மாமியாரும் மாமனாரும்தான் வந்திருந்தார்கள்,அண்ணா" என்றாரே மனவி,நண்பர் மயங்கிவிழாத குறைதான்.****


19/8/11

சிறுகதை

                                               குதிரை
         ' டேய் எழில், எழுந்திரு'  என்று அதட்டலுடன் எழுப்பினார் என் அப்பா.திடீரென விழித்தெழுந்த எனக்குப் பயம் உடலெங்கும் பரவியது.காரணம் அப்போது எனக்கு ஏழு அல்லது எட்டு வயதுதான் இருக்கும்.இருள் கவ்விய இருட்டு நேரம்.அந்த காலங்களில் பெரும்பாலும் கிராமங்களிலெல்லாம் கதிரவன் தன் கதிர்களை உள்ளிழுத்துக்கொண்டதும் ,கிராமவாசிகள் தங்களின் மாலைக் கடன்களை முடித்துவிட்டு பாய் போட்டு படுத்துவிடுவர்.ஒருசிலர் அன்றைய வேலைப்பளு பற்றியும்,அது எப்படி கழிந்தது என்பதையும், ம்றுநாள் செய்யவேண்டிய வேலைகள் பற்றியும்,  மற்ற சிலரோ,வெட்டிக் கதைகள் பேசியும் தூக்கத்தைவரவழைத்துக் கொண்டுவிடுவர்.இரவு ஒன்பது மணி என்பதே நடுச்சாமம் போல தோன்றும்.அப்போதெல்லாம் மின்சாரம் இல்லை.மிகவும் தாமதமாகத்தான் எங்கள் பகுதிகளில் மின்சாரம் எட்டிப் பார்த்தது.
                          தூக்கத்திலிருந்து எழுந்த எனக்கு பயம் கலந்த ஆச்சரியமாகவும்,ஆச்சரியம் கலந்த பயமாகவும் இருந்தது.அருகில் வெள்ளைநிறம் கலந்த செவலைக் குதிரை ஒன்று நின்றுகொண்டிருந்தது.அதன் பக்கத்தில் எங்கள் வீட்டில் வேலை பார்க்கும் சின்னராசு என்பவருடன் எனது உறவினர் ஒருவரும் நின்றுகொண்டிருந்தார்.'டேய்,இந்த குதிரையை அந்த கம்பத்தில் கட்டு'அப்பா கூறினார்.எனக்கு உடல் வெலவெலத்துப் போனது.காரணம் தூக்கத்தில் எழுந்தது மட்டுமல்ல ,இருட்டில் குதிரையைப் பார்த்த பயம்.அன்றுதான்  குதிரையை அவ்வளவு அருகில்  பார்க்கிறேன்.வேலைக்காரர் சின்னராசு என் பயத்தை அறிந்து,' பயப்படாதேப்பா,சும்மா பிடிச்சு கட்டு'என்று கயிற்றை என்னிடம் நீட்டினார்.நான் பயத்தில் பின் வாங்கினேன். என் அப்பாவும் உறவினரும் தைரியமூட்டி,என் கையைப் பிடித்து குதிரையின் அருகில் அழைத்து சென்று கயிற்றை என் கையில் கொடுத்து கட்டச் செய்தனர். அந்த நேரத்தில், என் அம்மாவும் அண்ணனும் விழித்தெழுந்து,நடப்பதை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை.பிறகு என் அம்மா அரிக்கன் விளக்கை ஏற்றியதும்,குதிரையை அவ்வளவு அருகில், வெளிச்சத்தில் பார்த்த எனக்கு ஆச்சரியத்தில் உடல் முழுதும் புல்லரித்துப் போனது.
                       குதிரை நல்ல அழகு.அதன் மூக்கு, கண், காது அணைத்தையும் அந்த அரை வெள்ச்சத்திலும் நன்றாக உற்றுப் பார்த்தேன்,என்னைக் கவ்வியிருந்த பயத்தைப் பாய்ந்தோடசெய்துவிட்டு,கயிற்றைப் பிடித்துக் குதிரையைக் கம்பத்தில் கட்டினேன்.அப்பொழுது,அப்பா, சின்னராசு,உறவினர்,என் அம்மா மற்றும் அண்ணன் ஆகியோர் 'வீரனாரே' எனக் கையெடுத்துக் கும்பிட்டனர். வீரனார் எங்களின் குல தெய்வம்,எங்கள் கிராமத்தின் காவல் தெய்வம்.நல்ல முறுக்கு மீசையுடன் ஒரு கையில் அரிவாளுடன் சிரித்த முகத்தோடு காட்சியளிப்பவர்.நான் குதிரையை சுற்றி சுற்றி வந்தேன்.முன்னங்கால்,வளைவுடன் கூடிய பின்னங்கால், பின் விலாப் பக்கத்தில் செவலை நிறத் தோலில் வெள்ளை நிற வட்டங்கள்,நீண்ட அடர்த்தியான முடிகள் நிறைந்த ,வழவழப்பான வால் பகுதி ஆகியவற்றைக் கண்ட எனக்கு மனதில் உற்சாகம் பீறிட்டது,என் தூக்கம் போயே போய்விட்டது.நான் குதிரையின் பின்புறம் சென்றதைக் கண்ட சின்னராசு,'தம்பி, பின்னால் போகாதே,குதிரை உதைக்கும்' என்றார்.அப்போதுதான் எனக்கு தெரிந்தது 'குதிரை பின்னால் சென்றால் உதைக்கும்' என்று.இப்போதும் அப்படித்தானே..பிறகு குதிரையை இரண்டு மூன்று முறை சுற்றிவந்து,குதிரையின் அழகை ஆராதித்துவிட்டு,குதிரையின் மேலேறி பார்க்கவேண்டும்  என்றும்,அதன் பிடரி மயிரின் அழகைக் காணவேண்டுமமென்றும் கூறினேன்.முன்பு குதிரையிடம் இருந்த பயம் நீங்கி இப்போது அதை அன்புடம் ஆள வேண்டும் என்ற எண்ணம்  தோன்றியது.சின்னராசுவிடம் என்னை குதிரைமேல் ஏற்றிவிடும்படிக் கெஞ்சினேன்.ஏனெனில் நான் உயரம் குறைந்தவன்தானே?சின்னராசுவும் என்னைக் குதிரைமேல் ஏற்றிவிட்டு,நான் குதிரையின் பிடரியை தொட்டுப்பார்த்ததும் கீழே இறக்கிவிட்டுவிட்டார்.எனக்கோ போர்க்களம் சென்று திரும்பிய போர் வீரன் உணர்வு அப்போது தோன்றியது எனலாம்.
                              பிறகு அம்மா கேட்டார்கள்,'இந்தக் குதிரை சும்மா கிடைத்ததா,இல்லை பணம் கொடுத்து வாங்கியதா? என்று.'பணம் இல்லாமல் பண்டம் கிடைக்குமா?'என்றார் அப்பா.'ஏங்க, நம்ம வயற்காட்டை உழுவதற்கு இரண்டு காளைமாடு வாங்கிவரச்சொன்னா ,நீங்க குதிரை வாங்கிட்டு வந்திருக்கிறீர்களே,இதை வைத்து உழ முடியுமா?'என்று சற்று கோபத்துடன் கேட்ட அம்மா,அவர்களுக்கு சாப்பாடு போட ஆரம்பித்தார்.அப்பா எதுவும் பேசாமல் மற்றவர்களுடன் சேர்ந்து பசியாரத் தொடங்கினார். உறவினர்தான் அம்மாவின் புலம்பலுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
                        'அக்கா நாங்க்ள் மாடு வாங்கத்தான் சந்தைக்கு சென்றோம்.அங்கு சில மாடுகளைப் பார்த்து, விலை கொஞ்சம் அதிகம் என்றாலும் நல்ல ஜாதி ஜோடியாக ஒன்றைப் பார்த்து அச்சாரம் கொடுத்து வந்துள்ளோம். மீதிப் பணத்தை இன்னும் ஒருவாரத்தில் கொடுத்து மாட்டை ஓட்டிவந்து விடலாம்.வீட்டுக்கு வரும் வழியில்,நமது ஆற்றுப்பாலத்திற்கு அருகில் உள்ள இளங்கோவன்  கடையில் டீ குடிக்கும்போது,அங்கு இந்த குதிரையோடுவந்த சிலரும் டீ குடித்தனர்.ஊருக்குப் புதிதாக இருக்கின்றார்களே என்று நாங்கள் அவ்ர்களை,யார், எவர், எந்த ஊர் என்று கேட்டுக்கொண்டிருந்தோம். அவர்களோ, தங்கள் ஊர் பதினைந்து மைல் தூரம் என்றும்,குதிரை விற்பனைக்கு என்றும்,சந்தைக்கு ஓட்டிச்செல்வதாகவும்,இப்போதிலிருந்து ஓட்டிச்சென்றால் விடிகாலைக்குள் சந்தையை அடைந்துவிடலாம் என்றும் கூறினர்'.குதிரைமீது ஏறிச்செல்லலாமே என்று கேட்டதற்கு, குதிரை மீது  ஏறிச்சென்றால் குதிரைக் களைப்படைந்துவிடுமே' என்று கூறினர்.அதற்குள் அக்கம்பக்கத்தில் நின்றுகொண்டிருந்த சிலர் அருகில் வந்துசேர்ந்தனர்.அவர்களில்  குண்டுவீரனும் ஒருவன்.அவன் உடனே தன்னுடைய வேலையைக்காட்ட ஆரம்பித்தான்.''ஏன்யா,நீங்க இதையெல்லாம் கேட்கினறீர்கள்?குதிரையை நீங்கள் வாங்க போறீங்களா? அப்படியே வாங்க நினைத்தாலும் உங்களிடமெல்லாம் பணம் ஏதைய்யா?. உங்களுக்குத்தான் வேறு வேலை இல்லை,அவர்கள் வேலையை ஏன் கெடுக்கின்றீர்கள்?'' என்று குத்தலாக கேட்டார்.
                                  குண்டுவீரன் நல்ல வாட்டசாட்டமான ஆள்தான்.கொஞ்சம் பக்கவாட்டில் வளர்ந்துவிட்டான். அதனால்தானோ என்னவோ பக்கத்தில் உள்ளவர்களைப் பாடாய் படுத்திவிடுவான்.நல்ல எண்ணமும் கிடையாது. பரம்பரை சொத்திலேயே வாழ்க்கையை அமைத்துக்கொண்டு ,பக்கத்துவீட்டு சொத்துக்களையும் வளைத்துப் போட்டு வாழ்க்கையை அமைத்துக்கொண்டாலும்,நல்ல எண்ணமின்றி நாட்டில் நடமாடும் நயவஞ்சகப் பேய்களில் அவனும் ஒருவன்.பணத்திமிரில் பங்காளிகளையும் உற்றார் உறவினர்களையும் உதறித்தள்ளி வாழ்ந்து வருபவன். "நீரென்றால் கீழ் நோக்கித்தான் செல்லும்,நெருப்பென்றால் மெல் நோக்கித்தான் செல்லும்" ஆனால் வீரனோ பக்கவாட்டில் பஞ்சமின்றி வளர்ந்துவிட்டான்.அதனால்தான் இவனைப் பார்ப்பவர்கள்,'இவன் தலையை மட்டும் துண்டித்துவிட்டால்,வீட்டிற்கு குதுரு தேவையில்லை,பத்து மூட்டை நெல் கொட்டிவைக்கலாம்'எனறு கேலி பேசுவர்.இளைய கூட்டமோ.இன்னும் ஒருபடி மேலே சென்று , 'என்னைய்யா நவீன தசரதரே'என்று பேசி  மகிழ்வர்.ஏனெனில் அவருக்கு மனைவிகளைவிட வைப்பாட்டிகளே அதிகம்.
இருந்தாலும் அவனிடம் கடன் வாங்கும் நேரத்தில் மட்டும் அன்போடு பேசி தங்கள் காரியத்தை சாதித்துக் கொள்வர்.
                           வீரன் பேசுவதைக் கேட்ட மாமா   உடனே  கோபம் கொண்டு,"என்னிடமா பண்ம் இல்லை? நீதான் பணக்காரன் என்ற நினைப்போ ரொம்ப திமிருடா உனக்கு" என்று கூறினார்   எங்களிடம் வீரன் நக்கலாக பேசுவதைக் கூட்டத்தினரும் கவனித்துகொண்டிருந்தனர்.உடனே வீரன்,"எங்கையா உன்னிடம் நூறு ரூபாய் இருந்தால் எடு, உனக்கே இந்தக் குதிரையை வாங்கித் த்ருகிறேன்",என்றார்.மாமாவிடம் நூறு ரூபாய் இருந்தது,ஆனால் உடனே எடுக்கக்கூடாது என்று எண்ணி சிறிது தயக்கம் காட்டி,தன்னிட ம் அதிகமாக இருந்த ஒரு இரண்டு ரூபாயைத் தாளைக் கீழே நைசாக போட்டுவிட்டார்.பிறகு தன்னிடம் இருந்த நூறு ரூபாயை எடுத்து நீட்டினார்.குண்டுவீரன் அசந்து விட்டான்.பிறகு ஒருவழியாக சமாளித்து,"நான் உன்னை சோதனை போடவேண்டும்.உன்னிடம் அதிகமாக இருக்கலாம்" என்று கூறி, பக்கத்தில் நின்ற தன் கைத்தடியை அழைத்து சோதனை செய்யச் சொன்னான்.மாமாவும் அதற்கு ஒத்துக்கொண்டு சோதனை போட அனுமதித்தார்.மடியில் கணம் இருந்தல்தானே.சோதனை முடிவில்  கூடுதலாகவோ, குறைவாகவோ பணம் இல்லை என தெரிந்ததும்,"சரி சரி,பரவாயில்லை.அவர்களது வியாபாரத்தில் நாம் நஷ்டம் ஏற்படுத்தக் கூடாது.எல்லோரும் போங்கையயா,"என்று மழுப்பலாக பேசத் தொடங்கினான்.
                                      உடனே,நமது  மேலத்தெரு வெங்கிடு,வீரனின் கையை இறுக்கிப் பிடித்துக்கொண்டு,"வேஷ்டியையெல்லாம் அவிழ்த்து சோதனைப் போட்டுவிட்டு இப்படி நழுவப்பார்க்கிறியே,ஒழுங்கா குதிரையை வாங்கிக் கொடு,இல்லையேல் உனக்கு மானம் என்ற ஒன்று இருந்தால்  அதைக் கப்பலேற்றிவிடுவேன்."என்றான்.""என்னடா மானம் கப்பல் என்று பேசுரே, என்னடா பண்ணமுடியும் உன்னால?" என்று குண்டுவீரனும் பதிலுக்கு முறைத்தான்.உடனே வெங்கிடு,வீரனின் கையை விட்டுவிட்டு,அவன் கழுத்தில் போட்டிருந்த துண்டால்  கழுத்தை இறுக்கிக் கொண்டே , "உன்னுடைய ஆடைகளையெல்லாம் அவிழ்த்துவிட்டு,கரும்புள்ளி செம்புள்ளிக் குத்தி,கழுதைமேல் ஏற்றி,காலை ஆறு மணி முதல் மாலை ஆறு மணிவரை ஊர்வலம் விடுவோம்"என்றதும், வீரனுக்கு உடல் வெலவெலத்துப் போய்விட்டது.காரணம்,வெங்கிடு, சொன்னதை செய்து காட்டுபவனாயிற்றே.பிறகு வேறுவழியின்றி,குண்டுவீரன் நூறு ரூபாயுடன் தன் பணத்தைப் போட்டு இந்தக் குத்ரையை வாங்கிக் கொடுத்தான்.
                                    இதுதான் எங்கள் வீட்டிற்கு குதிரை வந்த கதை.

                மறுநாள்,காலையிலிருந்தே எங்கள் வீட்டைச் சுற்றி கிராம மக்கள் கூட்டம், கூட்டமாக வரத்தொடங்கிவிட்டனர்.மக்கள் மகிழ்ச்சியில் திளைத்தபோது, என் அப்பா மட்டும் கவலையுடன்,'குதிரையை வாங்கிவிட்டோம்,அதை பராமரிப்பது எப்படி? திருமணங்களுக்கு ஓட்டிச் செல்வது யார்?' என்று யோசிக்கலானார்.அந்த்க் காலங்களில் எங்கள் பகுதிகளில் குதிரையில்தான் மாப்பிள்ளை ஊர்வலம் நடைபெறும். குதிரைக்கு ஏற்ற மாதிரி பத்து ரூபாயோ,இறுபது ரூபாயோ சத்தமாக  (வாடைகையாக)கிடைக்கும்.என் அப்பா என்ன செய்தார் தெரியுமா, எங்கள் குதிரைக்கு பத்து ரூபாய்தான் வாடகை என்று நிர்ணயித்து,அதை பராமரிக்கும் பொறுப்பை வேலையாள் சின்னராசுவிடம் ஒப்படைத்துவிட்டார்.மாப்பிள்ளை ஊர்வலத்துக்குப் போய்விட்டு வந்தால், ஒரு ஊர்வலத்துக்கு இரண்டு ரூபாய் கொடுப்பார் சின்னராசுக்கு.
                           இப்படியே  இன்பமாக போய்க்கொண்டிருந்தது குதிரையின் வாழ்க்கை. ஆனால் எனக்குத்தான்,'என்னை ஏன் எழுப்பி குதிரையைக் கட்டச்சொன்னார்கள்'என்று தெரிய்வேயில்லை .பிறகு ஒருநாள் ,அஸ்வனி நட்சத்திரத்தில் பிறந்தால்,குதிரை வாங்கும் அதிர்ஷ்டம் உண்டு என்றும் நான் அஸ்வனியில் பிறந்திருப்பதாகவும் கூறினார்கள்.அஸ்வம் என்றால் குதிரை என்று அர்த்தமாம்.அப்படியென்றால் குதிரை வைத்திருப்பவர்களெல்லாம் அஸ்வனியில் பிறந்தவர்களா என்றால் அப்படியல்ல,அஸ்வனியில் பிறந்தவகள் குதிரை வைத்திருப்பார்கள் என்று கூறுகின்றனர். உண்மையா?.
                                    

18/8/11

தெரிந்துகொள்ள வேண்டும்.

                                           அமெரிக்க பழமொழிகள்
       1.உலகில் புத்திமதிதான் இலவசமாக கிடைக்கும் சரக்கு
       2.வெகுமதியும் தண்டணையுமே உலகை ஆட்சி செய்கின்றன.
       3.நரியோடுசேர்ந்த சேவல் நன்மை அடையாது.
       4.பழைய புத்தகங்களுக்கு வேர் நீளம்.
       5.தேவையற்றதை வாங்காதே, தேவையானதை விற்காதே.
       6.பெரிய சண்டைக்குப் பின்னால் பெரிய நட்பு இருக்கும்.
       7.சொந்த் நாற்காலியில்தான்  சுகமாக உட்காரமுடியும்.

                                     ரக்ஷ்ய பழமொழிகள்
     1.பூண்டு ஏழு பிணிகளை தீர்க்கும்.
     2.திருடின விறகும் எரியும்.
     3.விக்கிரகங்கள் செய்பவன் அதை வணங்குவதில்லை.
     4.நோயாளிக்கு தேனும் கசக்கும்.
     5.பிறரை உள்ளன்புடன் நடத்துவது பெருந்தன்மையின் அடையாளம்.
     6.மனைவிக்கு கணவனே சட்டம்.
     7.பன்றி்க்கு உணவு நேரம் எது?.

                                    ஸ்பெயின் பழமொழிகள்
      1.பெண்கள் கிடைததை விரு்ம்பமாட்டார்கள்,மறுத்ததையே விரும்பி வாடுவார்கள்
      2.விருந்தினருக்கு முதுகுப் புறம்தான் அழகு.
      3.அதிகம் பேசுகின்ற இருவர் நெடுந்தூரம் சேர்ந்து போக முடியாது.
      4.கோழி ஊரெங்கும் கூவும், சேவல் குப்பை மேட்டில் இருந்துதான் கூவும்.
      5.எது நன்மை என்பது அதை இழக்கு்போதுதான் தெரியும்.
    
                                        இத்தாலி பழமொழிகள்
      1.வாலைஆட்டினால்தான் நாய்க்குகூட உணவு கிடைக்கும்.
      2.குழந்தை இல்லாதவனுக்கு அன்புதெரியாது.
      3.இதயம் குறைவானால் நாவு அதிகம்.
      4.நல்லது போனால் தெரியும் கெட்டது வந்தால் தெரியும்.
      5.உன் பகைவனே உன்னை அறிவாளி ஆக்குபவன்.
      6.தாமதித்து வருபவன் மிச்சம் உள்ளதையே உண்ணவேண்டும்.

                                    கிரீஸ் பழமொழிகள்
     1.இந்த உலகில் வாழவேண்டுமா எச்சரிக்கையுடன் இருங்கள்.
     2.ஏழை உ ண்மையைச் சொன்னாலும் நம்ப மாட்டார்கள்.
     3.பழிவாங்குதலைவிட மன்னித்தல் மேலானது.
     4.அதிர்ஸ்டம் உள்ளவன் சேவலும் முட்டையிடும்.
     5.நல்ல நடத்தையே சீரிய பண்பாக அமையும்.
     6.ஈரமான விறகிலிருந்து மட்டுமல்ல எல்லா விறகிலிருந்தும் புகை வரும்.

                                       ஆப்பிரிக்க பழமொழிகள்
     1.பல ப்ழங்களைப் பார்த்துக் கொண்டேயிருந்தால்,கடைசியில் அழுகிய ப்ழங்களைத்தான் வாங்க நேரிடும்.
     2மென்மையான சொற்கள் செல்வத்தைக் கொண்டுவரும்.
     3.கம்புகள் கட்டோடு இருந்தால் அதை ஒடிக்க முடியாது.
     4.செல்வம் தேயும்,கல்வி வள்ரும்.
     5.பிச்சைக்காரனின் கோபம் அவன் தலையில்தான் விடியும்.
     6.வீட்டுத் தலைவன்மீது எல்லோருடைய குப்பையும் கொட்டப்படும்.
     7.நாயிடம் கடன் பட்டிருந்தால்,அதையும் அய்யா என்றுதான் அழைக்கவேண்டும்.

                                   எஸ்டொனிய பழமொழிகள்
     1.மல்ட்டுப் பசுவைவிட, பால் கொடுக்கும் வெள்ளாடு மேலானது.
     2.நீ எதற்கு அஞ்சுகிறாயோ அது உன்னை எட்டிப் பிடித்துவிடும்.
     3.உங்களை நேசிப்பவகளைவிட ,வெறுப்பவர்கள் இந்த உலகில் அதிகம் இருப்பதால்- பொறுமையோடு வாழக் கற்றுக்கொள்ளுங்கள்.
     4.தொழில் தெரிந்தவனிடம்  வேலையே நடுங்கும்.
     5.காலியாய் உள்ள தலைகள் எப்போதும் நிமிர்ந்தே நிற்கும்.

                                                                     தொகுப்பு ---எழிலன். 


                                       

16/8/11

காலாம்புடிக்கியும், மேணாமிணுக்கியும். (நையாண்டி தொடர்)

   கா.பு :  டேய், மேனா மினுக்கி,இன்ன்னைக்கி என்னடா இவ்வளவு நேரம்?
 மே.மி:  ஓய்வு எடுக்கலாமுன்னு போனேன்.நாடு போற போக்கை பார்த்து ,..
 கா.பு: ஒடனே திரும்பி வந்துட்டிங்களாக்கும்.நாட்டு மேல அவ்வளவு அக்கறை?
மே.மி: ஆமாண்ணே.நாட்டு மேல இல்லண்ணே, வீட்டு மேலதான்.
கா.பு :என்னடா  முன்னாள் முதல்வர் கருனாநிதி மாதிரி பேசுற?
 மே.மி:ஆமாண்ணே,.. என்னண்ணே திடீர்னு கருனாநிதி ராகு காலத்தைப் பற்றி பேச ஆரம்பிச்சுட்டாரு?
  கா.பு. அட ஆமாடா,அவ்ரு மஞ்சள் துண்டு போட ஆரம்பிச்சதிலேருந்து நாட்டு மக்கள் அத்தனை பேரும் கேட்டாங்கடா,'மஞ்சள்துண்டின் மகிமை என்னன்னு,இதுவரை என்ண்டா சொன்னாரு?
 மே.மி: அவரு செஞ்சா அது அவரோட விருப்பம்.மற்றவங்க செஞ்சா அது பகுத்தறிவுக்கு பாதகம்ண்ணே.ஆமாண்ணே, ஏன் அவர் இதுவரைக்கும் சிறையில் வாடும் உடன் பிறப்புக்களை சென்று பார்க்கல?
 கா.பு: ஏண்டா, அவர்தான் டில்லிக்கே சென்று தன்னோட மகள் கனிமொழியையும்,உடன் பிறப்பு ராசவையும் பார்த்துவிட்டு வந்தாரே.தலைநகர் சென்று தன் மகளையும்,ராசாவையும் பார்த்தாலே,நாட்டில் எல்லோரையும் பார்த்ததாகத்தான் அர்த்தம்,புரிஞ்சுக்கோடா.
மே மி:ஏண்ணே,எல்லாமே பொய் வழக்குன்னு சொல்லி புலம்புராரே, அங்கே ராசா, கனிமொழி கைது மட்டும் உண்மையோ? இங்கே அவர் ஆட்சியில் இருக்கும்போது மட்டும் அவர் செய்தது எல்லாம் உண்மையோ?
அவர் செய்தது எல்லாம் உண்மை,.அம்மா செய்தால் பொய்யாகிவிடுமா?
கா.பு: டேய்,அவர் செய்தது எல்லாம் அவ்ருக்கே தெரியும்டா.நெஞ்சுக்கு நீதி எழுதியவர்டா,அதைப் பற்றி அதிகம் பேசாதே.பிறகு உனக்கும் அன்பழகனிடம் சொல்லி வக்கீல் நோட்டீஸ் வந்துவிடும்.
மே.மி: ஏண்ணே,எல்லா வழக்கையும் சட்டப்படி சந்திப்போம்னு சொல்ராரே,அப்ப சட்டப்படி இல்லாமலும் சந்திக்க முடியுமாண்ணே?
 கா.பு: டேய்,அவ்ர எப்படி சந்திச்சாலும் வாய் ஜாலம் காடட முயல்வாரே தவிர வழக்கில் அவர் ஜாலம் செல்லாது.'அனைத்து தமிழக மக்களும் அம்மாவை அரியனையில் அமர்த்தியுள்ளனர்.இந்திய துணைக்கண்டமே அம்மாவின்  வாய் அசைவுக்காக காத்துக் கிடக்கிறது,ஏன்,அமெரிக்கா உட்பட அகில உலகமும் அம்மாவின் நடவடிக்கைகளைக் கண்டு அசந்து போய் நிற்கிறது.
 மே மி: அமாண்ணே,பத்திரிகைகளில் மட்டும் கேள்வி ப்தில் வடிவிலும்,கடிதங்கள் மூலமும் எழுத்து ஜாலம் காட்டி தனது கட்சித் தொண்டர்களை ஏமாற்றுகின்றாரே தவிர,உறுப்படியாக இதுவரை எந்த நடவடிக்கையுமெடுக்கவில்லையே?....
 கா.பு: டேய்,அப்படி சொல்லாதே,விரைவில்,  தன் குடும்பத்தாருடன்  தானும் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக செய்திகள் உலா வருகின்றன.அப்படி
நடந்துவிட்டால்.......
 மே மி: அண்ணே நடக்கிற்தைப் பத்தி பேசுங்கண்ணே. இவர் குடும்பத்தினர்எப்பண்ணே இது மாதிரி  நிகழ்ச்சியிலெல்லாம் கலந்துகிட்டு இருக்காங்க? எல்லாம் ஊரை ஏமாற்றும் வேலைண்ணே.
 கா.பு: டேய்,இதையெல்லாம் அவ்ர் கட்சிக்காரர்களும்,நாட்டு மக்களும் புரிந்துகொண்டால் சரிதான்.நமக்கேண்டா அந்த வம்பு?
 மே.மி: ந்ட்டு மக்கள் புரிந்துதாண்ணே ஓய்வு கொடுத்தாங்க,அவ்ர்தாண்ணே இன்னும் புரிந்தும் புரியாததுபோல ந்டந்துக்கிறார்.நாமென்ன செய்ய முடியும்?.../
 சரிண்ணே,ஒரு சின்ன வேலை இருக்கு, நாளைக்கு வர்றேண்ணே. வரட்டுமா?
 கா.பு: சரி, போய்வா, மீண்டும் சந்திப்போம்..

8/8/11

காப்பி யடித்தல்

                                               எனக்கும் தெர்யாது              
                                                                         
              பள்ளித் தேர்வுக ள் முடிந்து விடைத்தாள்கள் மதிப்பிடும் பணி ஆரம்பமாகி விட்டாலே,நமது ஆசிரியர்களுக்கு ஒரே கொண்டாட்டம்தான்.குஷியும் அதிகமாகிவிடும். காரண்ம்,பணம் மட்டுமல்ல,அங்கு அவர்களுக்கு ஏற்படும் அனுபவங்களும்தான்.சில ஆசிரியர்களுக்கு அறிவு வளரும்,அன்பு பெருகும்,நல்ல எண்ணங்கள் உருவாகும்.சில நேரங்களில் வேடிக்கை விளையட்டுக்கள் கூட ஏற்பட்டு அவர்களின் வாழ்க்கை முறைகூட மாறுபட்டுவிடும்.
                                          அப்படி மதிப்பீடு செய்யும் காலங்களில்,இடைவேளையின்போதும்,மதிய உணவின்போதும்,தாங்கள்  சந்தித்த ,வேடிக்கையான, வினோதமான ,விளையாட்டுத்தனமான,அறிவுபூர்வமான,சில அழகான நிகழ்வுகளை,ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வர்.ஒருமுறை,ஓர் ஆசிரியர்,
தான் சந்தித்த ஒரு நிகிழ்ச்சியை விவரித்தார். தனக்கு வந்த பள்ளியின் விடைத்தாள்கள் அணைத்தும் நன்றாக இருந்ததாகவும்,ஏறத்தாழ எல்லா மாணவர்களுமே, நல்ல முறையில்,அழகாக, கையெழுத்தும் தெளிவாக இருந்ததாகவும் குறிப்பிட்டார்.
                                         உடனே அருகிலிருந்த அவ்ருடைய சகா ஒருவர்,'நீங்கள் கொடுத்துவைத்தவர் அய்யா,எங்களுக்கும் சில பள்ளிகளிலிருந்தும் வருகின்றதே,பார்க்கவே சகிக்கவில்லை.வாந்தி எடுத்தது போல் எழுதியிருக்கிறனர்,என்று அவர் தன்னையே நொந்து கொண்டார்.  பிறகு முன்னால் ஆசிரியரோ,தான் சந்தித்த இன்னொன்றையும் குறிப்பிட்டார்.
                                       இரண்டு மாண்வர்கள் ஏறத்தாழ ஒரே மாதிரியாக எலலா விடைகளையும் சரியாகவே எழதியிருந்தனர்.அதுவும்' ஈயடிச்சான் காப்பி 'என்று
கூறுவோமே அப்படி.'அதை எப்படி அய்யா  தாங்கள் ஈயடிச்சான் காப்பி என்று
கூற முடியும்?' என்று கேட்டனர். அதற்கு அவர்,'ஒரு மாணவன் ஒரு வினாவுக்கு ஒரு விடை எழுதியிருந்தால் அதைப் போலவே அடுத்த மாணவனும் அப்படியே ஜெராக்ஸ்காப்பியைப் போல் எல்லா விடைகளையும்
எழுதியிருந்தான்.' என்று கூறினார்
                                              ' தாங்கள்தான் எல்ல மாணவர்களும் நன்றாகவே எழ்தியிருப்பதாகவே கூறுகின்றீர்கள். இவர்கள் மட்டும் காப்பி அடித்ததாக எப்படிசொல்கின்ற்ரீர்கள்?'என்று கேட்டனர்.அதற்கு அந்த ஆசிரியர்
எப்படிக் கண்டுபிடித்தார் என்பதை , 'இறுதி வினாவுக்கு, ஒரு மாணவன் 'எனக்குத் தெர்யாது' என்று பதில் எழுதியிருந்தான்'.இன்னொரு மாண்வன்தான் காப்பி அடித்தான் என்பதைக் கண்டுபிடித்துவிட்டார் ஆசிரியர். ,அவன் என்ன எழுதியிருந்தான் என்பதைமுதல் வரியிலேயே கூறி விட்டாரே.

5/8/11

சாதி

                                                 சாதி
               ' சாதி இரண்டொழிய வேறில்லை' ஒள்வையார் அக்காலத்தில் பாடியது.
இப்பொழுது சாதி மூன்றாக உள்ளதே,திருந்ங்கைகளையும் சேர்த்து.
               ' சாதிகள் இல்லையடி பாப்பா' பாரதியார் பாடினார்.ஆனால் அவர்கூட தன்
சாதியில்தானே திருமணம் செய்துகொண்டார்.
               நமது நாட்டில்தான் சாதிகளொழியவேண்டும் என்று கூறுவோரும், தன் சாதியில்தான் எல்லாம் நடைபெற வேண்டும்,தன் சாதியினருக்கே எல்லா நலமும், வளமும் கிடத்திட வேண்டும் என்றுகூச்சலிடுவோரும் அதிகம். ஏன்,
அரசியலில்கூட, சாதியை ஒழிப்போம் என்று கூறிவிட்டு,தேர்தல் வந்து விட்டால்
எந்த தொகுதியில் ,எந்த சாதியினர் அதிகம் ,என்று அலசி ஆராய்ந்து, அந்த சாதியினரைத்தானே வேட்பாள்ராக அறிவிக்கின்றனர்.
                                சாதி என்பது பண்டைய நாட்களில் இருந்த்தாக தெரியவில்லை.மக்கள் தோன்றி, பல இடங்களில்,கூட்டம் ,கூட்டமாக வாழ
தலைபட்ட் பின்னர்தான், தங்களின் உணவு, உறைவிடம் போன்றவ்ற்றுக்காக
பல்வேறு தொழில் முறைகளை மேற்கொண்டு வாழ்ந்து வந்தனர்.இப்படி, தொழில் முறகளை வைத்துத்தான், தங்களுக்குள்ளேயே ,தாங்க்ள் யார், யார் என
பிரிந்து வாழ்ந்து வந்தனர்.இப்படித்தான், உல்கம் முழுவதும் மக்கள் தோன்றி
வாழ்ந்து வந்த்ள்ளதாக அறியப்படுகின்றது
                            பிற்காலத்தில், நமது நாட்டில் வந்து குடியேறிய ,ஒரு குறிப்பிட்ட வகுப்பினர்தான், மக்களிடையே சாதிப் பிரிவினையை ஏற்படுத்தி உள்ளனர்.
அந்த வகுப்பினர், நம் நாட்டிற்கு வருவத்ற்கு முன், நம் நட்டில் வாழ்ந்து வந்த நாகர் என்ற இனத்தவரிடமோ,திராவிடர், தமிழர் என்ற யாரிடத்தும், சாதிப்
பிரிவுகள் இருந்த்ததாக தெரியவில்லை.நம் நாட்டில் வாழ்ந்து வந்த மக்களைவிட, தாங்கள் எதோ அதிகம் அறிந்ததாக கூறிக்கொண்டு, ,அவர்களிடையே சாதிப் பிரிவிணையை ஏற்படுத்தி,தங்களின் கீழ் பணியாற்ற
பணித்தனர் .இப்படி ஏற்பட்டதுதான் சாதிப் பிரிவுகள்.உலகிலேயே நமது நாட்டில்தான், சாதிகளும் ,சாதிகளின் ஆதிக்கமும்.அதிகம்.
                  ஒருவன் இன்ன சதியைச் சேர்ந்தவன் என்பதை ,மிக விவரமாக பண்டைய நூல் ஒன்று கூறுகின்றது. ஒருவனது சாதியும், அவனது முன்னேர்ர்களது சாதியும் , ஏழு தலைமுறைகளாக ஒரே சாதியினராக இருத்தல் வேண்டும்.அதே போல, அவனது மனைவியின் சாதியும் அவளது
முன்னேர்ர்களது சாதியும் அப்படியே ஏழு தலைமுறைக்கும் ஒரே சாதியினராக
இருத்தல் வேண்டும்.    எழேழு தலைமுறை என்று கூறுவோமல்லவா?, அப்படி..
இதன்படி, முன்னோர்களின் ஏழேழு தலைமுறையும் ஒரே சாதியை சேர்ந்தவர்களாக இருந்தால்தான், அவர்களை அந்த சாதியை செர்ந்தவர்களென்று அணைவரும் ஏற்றுக்கொள்ளவேண்டும்.இப்படி மிக அழகாக, ஆணித்தரமாக ,அந்த காலத்திலேயே, சாதியைப் பற்றி, விளக்கமாக
 கூறப்பட்டுள்ளது.
                சாதி என்ற சொல் caste என்ற ஆங்கில சொல்லிலிருந்தும் caste என்ற சொல் casta என்ற போர்த்துகீசீய சொல்லிலிருந்தும் உருவானது.casta என்றால்sect,race பிரிவு,இனம் என்று பொருள்.இதுதான் த்மிழில் சாதி என்று உருவானது.இதிலிருந்தே பண்டைய காலங்களிலிருண்தே சாதிகள் இருந்துள்ளது தெளிவாகின்றது.
                     இப்படித்தான், ஆதி காலம் முதல் நமது நாட்டில் சாதிய அடிப்படையிலேயே எல்லாம் இயங்குகின்றது.அனேகமாக இனி வருங்கால்த்திலும் நமது நாடில் எல்லாமே சாதிய அடிப்படையிதான் இயங்கும் என எதிபார்க்கலாம்.                                 

28/7/11

கோபம்

         கோபம் என்பது வரவே கூடாது.வந்து விட்டால் அதை உடனே தனித்துவிடவேண்டும்.மீறினால் அது ஆளையே அபகரித்துவிடும்.கோபம் பலவகை உண்டு.அதில் கீழ்கண்ட மூன்றைமட்டும் பார்க்கலாம்.
     முதல் வகை; எறும்புக்கடி. இது பெற்றோர்களின் கோபம்.பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம் கோபன் கொண்டால்,பெற்றோர்,பிள்ளைகள் இருவருமே சில நிமிடங்களிலேயே அதை ஒரு தேய் தேய்த்துவிட்டு எறும்புக்கடியை மறப்பது போல் மறந்து விடுவர்.
    இரண்டாவது வகை; தேள்கடி.இது கணவன் மனைவிக்குள் ஏற்படும் கோபம்.கணவன்  மனைவி இருவரும் கோபப்பட்டால் இரண்டொரு நாட்களில் தங்களுக்குள்ளேயே கோபத்தை மற்ந்து சதாரண நிலைக்கு திரும்பி விடுவர்.
     மூன்றாவது வகை;பாம்புக்கடி .யாரிடத்தில் கோபம் கொண்டாலும் அதை மூண்று நாட்களுக்கு மேல் நீடிக்க விடுவது.இப்படி குறிப்பிட்ட நாட்களூக்கு மேல் கோபத்தை நீடிக்கவிட்டால் அது ஆளையே, இல்லை வாழ்க்கையையே அழித்துவிடும்.
      ஆதலால் கொல்லும் ந்ச்சான கோபத்தை தவித்து நாம் நலமுடன் வாழ நாம் அனைவரும் பண்போடும் பாசத்தோடும் வாழ கற்றுக்கொள்வோம். எழிலன்

12/7/11

தஸ்லிமா நஸ்ரின்

உற்வுகளுக்கு வணக்கம். நீண்ட நாட்களுக்குப் பின் சந்திக்கிறேன்.
         சமீபத்தில் கவிஞ்ர் தஸ்லிமா நஸ்ரின் எழுதிய 'இது எனது நகரம் இல்லை' என்ற கவிதை தொகுப்பு திருமதி. யமுணா ரஜேந்திரன் அவர்களின் மொழிபெயர்ப்பில் படிக்க நேர்ந்தது.நல்ல கவிதைகள். நல்ல கருத்துகள்.இது போன்ற கவிஞ்ர்களால்தான் இன்னும் இந்த உலகம் தலைநிமிர்ந்து வாழ்கிறது.வங்க் தேசம் மட்டுமல்ல மற்ற சில நாடுகளும் தடை போட்டாலும் எழுத்து மட்டும் எப்போதும் ,எங்கேயும், எழுந்து நின்று எழுச்சி நடனம் புரியும்.இதை ஆட்சியாளர்கள ஏனோ புரிந்துகொள்வதில்லை.அல்லது புரிந்தும் புரியாமலும் சில நிர்ப்பந்தங்க்ளால் சில முடிவுளை மேற்கொண்டுவிடுகின்றனர்.விளக்கமாக வேறொரு நாளில் எழுதுகின்றேன்.




13/8/10

சிந்திக்க

             நாட்டில் எவ்வளவோ மாமியார்கள் மருமகள்கள் இருக்கின்றனர்.எல்லோரும் எலியும் பூனையுமாக வாழ்ந்தாலும் ஒரு சிலர் நல்ல பண்பாடு பழக்க வழக்கங்களுடன் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர். இன்னும் சிலரோ பசுவும் கன்றும்போல பண்பாட்டுடன் வாழ்ந்து வருகின்றனர்.இந்தக் காலத்தில் எலியும் பூனையும்கூட விட்டுக் கொடுத்து வாழ்ந்து வருவதாக அறியப்படுகின்ற்து.ஆனால் மனித இனத்தில் மட்டும்தான் இன்னும் மாமியாரும் மருமகளும் ஒன்று சேர முடியவில்லை. தன் கழுத்தில் புது அட்டிகையுடன் ஒரு நாள் ஒரு பெண் தனது அலுவலகம் வந்திருக்கின்றாள்.அந்த அட்டிகை புது வடிவத்துடன் புதிய வேலைப்பாட்டுடன் அமைந்திருந்தது.இதைக் கண்ட அந்த அலுவலகத்தில் வேலை செய்யும் அத்தனை பெண்களும் அருகில் வந்து ,ஏதோ உடல் நலமில்லாதவரை விசாரிப்பதைபோன்று அந்த் அட்டிகையைப் பற்றி விசாரித்தவண்ணம் இருந்தனர்.அந்த அட்டிகைப் பெண்ணும் அனைவருக்கும் சலிக்காமல் தன் மாமியார்தான் அதை வாங்கிக் கொடுத்ததாகவும் கூறி, தன் மாமியார் புகழ்பாட ஆரம்பித்துவிட்டார். இதையெல்லாம் கண்டும் காணாமல் அமர்ந்திருந்தார் பக்கத்து இருக்கைப் பெண்மணி.பிறகு ஒருவழியாக கூட்டம் களையத் தொடங்கியதும், இந்தப் பெண்மணி அந்த அட்டிகைப் பெண்ணிடம் இப்போது கொஞ்சம் பேச ஆரம்பித்தாள்.அந்த அட்டிகை எப்போது வாங்கியது? யார் வாங்கிக் கொடுத்தது? எந்தக் கடையில் வாங்கியது? எவ்வளவு ரூபாய்க்கு வாங்கியது? என்று குடை குடையென்று குடைந்து எடுத்துவிட்டார்.ஆனால் எல்லாவற்றுக்கும் அந்த அட்டிகைப் பெண்மணி அலட்டல் இல்லாமல் பொறுமையாக பதில் அளித்துக்கொண்டிருந்தாள். "எனக்கு எல்லாமே என் மாமியார்தான் .என் கனவரைவிட என் மாமியாதான் எல்லாம் செய்வார். இதை எனக்கு வாங்கிக் கொடுத்த்தும் என் மாமியார்தான்"என்றுக் கூறியவர் பிறகுதான் கவனித்தார் அந்தப் பெண்ணின் கண்ணில் நீர் மல்குவதை. பிறகு அப்பெண்ணிடம் "ஏன்? என்ன ஆச்சு? என் மாமியார் மாதிரி உங்களுக்கு இல்லையே என்ற ஏக்கமா?" என்று கேட்டார். அதற்கு அந்தப் பெண்மனி, "அப்படியில்ல, எனக்கு ஒரு மருமகள் இல்லையே" என்றாரே பார்க்கலாம்.