அந்தக் காலங்களில் பெரும்பாலும் மக்கள் பயனம் செய்வதற்கு மாட்டு வண்டிகளைத்தான் அதிகம் பயன்டுத்தி வந்தனர்.இப்போது உள்ளதுபோல பேருந்தோ சிற்றுந்தோ அல்லது ஆட்டோக்களோ எதுவும அதிகம் ஓடிக்கொண்டிருக்கவில்லை.ரயில் நிலயங்களீல் இருந்தோ பேருந்து நிலையங்களிலிருந்தோ வருபவர்கள் ஜட்கா வண்டியிலோ அல்லது கிராம்ப்புறமானால் மாட்டுவண்டிகளிலோதான் தங்கள் இருப்பிடங்களுக்குச் செல்ல வேண்டும்.
ஒருமுறை தமிழறிநர் பண்டிதமனி மு.கதிரேசன் செட்டியார் அவர்கள் ரயிலிலிருந்து இறங்கி தமது கிராமத்துக்குச் செல்ல மாட்டுவண்டியை ஏற்பாடு செய்தார்.ரயிலடியில் நின்றிருந்த பல மாட்டுவண்டிக்காரர்கள் நான் நீ என போட்டி போட்டுக்கொண்டு வந்தனர். அதில் ஒரு வண்டிக்காரனிடம் கூலியைப் பேச ஆரம்பித்தார்.எல்லோரும் கூலி ஒரேமாதிரிதான் கேட்டனர்.ஆனால் யார் தம்மை சீக்கிரம் தமது கிராமத்தில் சேர்ப்பர் என்பதுதான் அவருக்கு கவலையாக இருந்தது.அதில் ஒரு வண்டிக்காரன் மட்டும் "தான் சீக்கிரம் சேர்த்து விடுவதாக கூறினான்.'ஆனால் சிறிது தயக்கத்துடன் சாலை கொஞ்சம் சரியில்லை .மழை பெய்து குண்டும் குழியுமாக இருப்பதாக கூறினான்.உடனே வேரொரு வண்டிக்காரன் 'தமது மாடுகள் இளகாளைகள் என்றும் தாம் ஒரு நொடியில் கொண்டு போய் சேர்த்து விடுவதாகக் கூறினான்.பண்டிதமனி அவர்களும் அவனிடமே பேசி அந்த வண்டியில் ஏறி அமர்ந்தர்.
வண்டி வேகமாகச் சென்றது.இளங்காளைகளாயிற்றே.சிறிது தூரம் வரை சாலையும் நன்றாகத்தான் இருந்தது.பண்டிதமனி அவர்களும் தாம் சீக்கிரம் வீடு போய் சேர்ந்து விடலாம் என்று நினைத்துகொண்டு வண்டிக்காரன் தம்மை ஒரு நொடியில் கொண்டுபோய் சேர்த்துவிடுவான் என எண்ணி பெருமிதத்துடன் வண்டியில் அமைதியாக உட்கார்ந்து இருந்தார். சிறிது தூரம் கடந்தபின்தான் சாலை குண்டும் குழியுமாக மக்கள் நடப்பத்ற்கே மிகவும் சிரம்ப்பட் வேண்டியிருப்பது தெரியவந்தது.
கொஞ்சதூரம் மிகவும் மெதுவாகத்தான் வண்டி செல்லவேண்டியநிலை.காலைவெயில் ஏறிக்கொண்டிருந்தது.நடந்து வரும் மக்களும் சிரமப்பட்டே மிக மெதுவாக நடந்து வந்துகொண்டிருந்தனர்.எதிரே ஒரு வயதானவர் வெயிலுக்காக குடைபிடித்துக்கொண்டு ந்டந்துவந்துகொண்டிருந்தார்.குடையைக் கண்டதும் மாடுகள் வெறித்து தாறுமாறாக ஓட, அருகில் இருந்த ஒரு நொடியில் வண்டி குடைசாய்ந்துவிட்டது.
"அய்யா, மன்னித்துக்கொள்ளுங்கள். குடையைக்கண்டதும் மாடு கொஞ்சம் வெறித்துவிட்டது.சாலையும் சரியில்லாத்தால் இந்த நொடியில் தாங்கள் வண்டியோடு சேர்ந்து விழ வேண்டியதாகிவிட்டது.இதோ மீண்டும் ஒரு நொடியில் உங்களை சேர்த்துவிடுகிறேன்".என்றுகூறினார்வண்டிக்காரர்.உடனே, பண்டிதமனி அவர்கள்,"பரவாயில்லையப்பா,என்னை ஒரு நொடியில் சேர்த்துவிடுகிறேன்,என்றாய்,அப்படி சொன்னதைச் செய்தவன் நீதானப்பா."என்றுகூறி
அந்த நேரத்திலும் கலகலப்பை உண்டுபன்னினார்.
இந்த மாதிரி நேரங்களில் துன்பத்திலும் இன்பம் சேர்த்து
நகைச்சுவை உணர்வோடு பேசுவதுதான் பண்டிதர்களின் தனிப்பெரும் தன்மையாகும்.
*******

3 கருத்துகள்:
அடடா..சிலேடைப் பேச்சின் மூலம் சிரிக்க வைத்திருக்கிறாரே பண்டித மணி அவர்கள்.
நல்லவேளை டிக்கெட் வாங்கவில்லை.. பேருந்தா இருந்தா டிக்கெட் கொடுத்திருப்பார்கள்....
அஹா.. நகைச்சுவை..
கருத்துரையிடுக