தமிழ்த் தெய்வம்
13/8/10
சிந்திக்க
நாட்டில் எவ்வளவோ மாமியார்கள் மருமகள்கள் இருக்கின்றனர்.எல்லோரும் எலியும் பூனையுமாக வாழ்ந்தாலும் ஒரு சிலர் நல்ல பண்பாடு பழக்க வழக்கங்களுடன் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர்.
இன்னும் சிலரோ பசுவும் கன்றும்போல பண்பாட்டுடன் வாழ்ந்து வருகின்றனர்.இந்தக் காலத்தில் எலியும் பூனையும்கூட விட்டுக் கொடுத்து வாழ்ந்து வருவதாக அறியப்படுகின்ற்து.ஆனால் மனித இனத்தில் மட்டும்தான் இன்னும் மாமியாரும் மருமகளும் ஒன்று சேர முடியவில்லை.
தன் கழுத்தில் புது அட்டிகையுடன் ஒரு நாள் ஒரு பெண் தனது அலுவலகம் வந்திருக்கின்றாள்.அந்த அட்டிகை புது வடிவத்துடன் புதிய வேலைப்பாட்டுடன் அமைந்திருந்தது.இதைக் கண்ட அந்த அலுவலகத்தில் வேலை செய்யும் அத்தனை பெண்களும் அருகில் வந்து ,ஏதோ உடல் நலமில்லாதவரை விசாரிப்பதைபோன்று அந்த் அட்டிகையைப் பற்றி விசாரித்தவண்ணம் இருந்தனர்.அந்த அட்டிகைப் பெண்ணும் அனைவருக்கும் சலிக்காமல் தன் மாமியார்தான் அதை வாங்கிக் கொடுத்ததாகவும் கூறி, தன் மாமியார் புகழ்பாட ஆரம்பித்துவிட்டார்.
இதையெல்லாம் கண்டும் காணாமல் அமர்ந்திருந்தார் பக்கத்து இருக்கைப் பெண்மணி.பிறகு ஒருவழியாக கூட்டம் களையத் தொடங்கியதும், இந்தப் பெண்மணி அந்த அட்டிகைப் பெண்ணிடம் இப்போது கொஞ்சம் பேச ஆரம்பித்தாள்.அந்த அட்டிகை எப்போது வாங்கியது? யார் வாங்கிக் கொடுத்தது? எந்தக் கடையில் வாங்கியது? எவ்வளவு ரூபாய்க்கு வாங்கியது? என்று குடை குடையென்று குடைந்து எடுத்துவிட்டார்.ஆனால் எல்லாவற்றுக்கும் அந்த அட்டிகைப் பெண்மணி அலட்டல் இல்லாமல் பொறுமையாக பதில் அளித்துக்கொண்டிருந்தாள். "எனக்கு எல்லாமே என் மாமியார்தான் .என் கனவரைவிட என் மாமியாதான் எல்லாம் செய்வார். இதை எனக்கு வாங்கிக் கொடுத்த்தும் என் மாமியார்தான்"என்றுக் கூறியவர் பிறகுதான் கவனித்தார் அந்தப் பெண்ணின் கண்ணில் நீர் மல்குவதை. பிறகு அப்பெண்ணிடம் "ஏன்? என்ன ஆச்சு? என் மாமியார் மாதிரி உங்களுக்கு இல்லையே என்ற ஏக்கமா?" என்று கேட்டார். அதற்கு அந்தப் பெண்மனி, "அப்படியில்ல, எனக்கு ஒரு மருமகள் இல்லையே" என்றாரே பார்க்கலாம்.
3/8/10
இறைவன் திருவிளையாடல்
வணக்கம் நண்பர்களே,
1987-88 ம் ஆண்டு நான் சென்னை இராயபேட்டை மருத்துவமனையில் இதய நோய் காரண்மாக அனுமதிக்கப்பட்டிருந்தேன்.எங்களுடைய சிறப்பு வகுப்பில் (special ward)ல் நாங்கள் நான்கு பேர் அனுமதிக்கப்பட்டிருந்தோம். ஒரு வயதான பெரியவரும எங்களுடன் அனுமதிக்கப்ப்ட்டிருந்தார்.அவருக்கு சுமார் 55 வயது இருக்கலாம். அவருக்குத் துணையாக அவருடைய மனைவி இருந்தார். ஒரு நாள் இரவு அவர் கொஞ்சம் மோசமான நிலையை அடைந்தார். இரவு 7,மணியள்வில் மூத்த வைத்தியர் (chief doctor) வந்தார். பெரியவரை ப்ரிசோதனை செய்துவிட்டு அந்த அம்மாவிடம் ,அவ்வள்வுதான் உறவினர்களுக்கு சொல்லி அனுப்புங்கள் என்று கூறிவிட்டு போய்விட்டார்.அந்த அம்மாள் அழுது அரற்றியது எங்களுக்கே பரிதாபமாக இருந்தது.அந்த அம்மாள் கொஞ்ச நேரம் அவரை உற்றுப் பார்த்துவிட்டு அவரது உள்ளங்காலை நன்றாக அழுத்தி தேய்த்துவிட்டார்.என்ன ஆச்சரியம் ,பெரியவர் கொஞ்சம் அசைந்து கொடுத்தார்.ஆனால் அந்தோ பர்தாபம் பெரியவர் மீண்டும் கொஞ்ச நேரத்தில் கண்ணை மூடிவிட்டார்.
சிறிது நேரத்துக்குப் பிறகு ஒரு இளம் பெண் மருத்துவர் வந்தார்.அவருக்கு சுமார் 25(அ)26 வயது இருக்கலாம்.பயிற்சி மருத்துவராக இருக்க வேண்டும்.அல்ல்து புதிதாக் வேலைக்கு செர்ந்திருக்கவேண்டும்.அவரிடம் இந்த அம்மாள் அழுதுகொண்டே த்ன் நிலையை விளக்கினார்.அந்த மருத்துவரோ அவரிடம் "கவலைப் ப்ட வேண்டாம்.நான் முயற்சி செய்கிறேன்" என்று கூறிவிட்டு அவரும் பெரிய்வரின் காலைத் தேய்க்க ஆரம்பித்தார்.இப்படியே அவர் கொஞ்ச நேரம் தேய்த்து விட்ட் பிறகு அந்த அம்மாளிடம்,"கொஞ்ச நேரம் இப்படியே செய்து கொண்டிருங்கள், இதோ வருகிறேன்"என்று போய்விட்டார்.எங்களுக்கு யாருக்கும் நம்பிக்கை இல்லை. இந்த சின்ன பெண் வேலை அவ்வளவுதான் என்று நாங்கள் முடிவு செய்து அந்த அம்மாளுக்கு ஆறுதல் கூறஆரம்பித்துவிட்டோம்.சிறிதுநேரத்தில் அந்த் பெண் மருத்துவர் திரும்பி வந்தார்.வந்தவர் எதுவும் பேசாமல் தானே பெரியவரின் காலை எடுத்து நன்றாக தேய்க்கத் தொடங்கினார்.எவ்வெள்வு நேரம் தேய்த்தார் என்பது தெரியாது.நாங்கள் கண்ணயர்ந்து விட்டோம்.திடீரென்று எங்களை அந்த அம்மாள் எழுப்பினார். திடுக்கிட்டு விழித்தால் அந்த அம்மாளும் மருத்துவரும் சிரித்துக் கொண்டிருதது எங்களுக்கெல்லாம் ஆசசரியம், பெரியவர் சிறிது அசைந்தார்.அணைவருக்கும் அளவ்ற்ற மகிழ்ச்சி. பிறகுதான் அந்த மருத்துவரிடம் மூத்த ம்ருத்துவர் கூறியதை அந்த அம்மாள் விளக்கிக் கூறினார்.அப்பொழுது அவர் முகத்தைப் பார்க்கவேண்டுமே.தான் பெரிய சாதனை செய்ததை எண்ணி தானே உள்ளுக்குள் உணர்ச்சிப் பெருக்குடன் அந்த அம்மாளின் கைகளைப் பிடித்துக் குலுக்கிவிட்டு புறப்பட்டார்.உடனே அந்த அம்மாள் வயது விதியாசம் பாராமல் அவர் காலில் விழுந்து கட்டிப் பிடித்து கண்ணீர் விட்டு அழுதார்.எங்களுகெல்லாம் என்ன சொல்வ்தென்றே ஒன்றும் புரியாமல் வாய் பிளந்து பார்த்துக்கொண்டிருந்தோம். அவர் போன பின் நாங்கள் அந்த அம்மாவிடம் "இப்பொழுது வந்தது மருத்துவர் இல்லை.அந்த கடவுள்தான் வந்து உங்கள் கணவரைக் காப்பாற்றினார்".என்று கூறினோம்.இது ந்டந்த்து 22 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.
இது ஏன் இப்போது நினைவுக்கு வந்த்து என்றுதானே கேட்கின்றீர்கள்.காரணம் இலலாமலா? நேற்று (02.08.2010) The Hindu நாளிதழில் coma வில் இருந்த ஆறு வயது சிறுமியை இசை மூலம் (Music Therapy) மீண்டும் உயிர் பெற்று எழச் செய்ததாக ஒரு செய்தி வந்ததும் எனக்கு ஆச்சரியம்.நாம் முன்பு பார்த்து அறிந்தது போல உள்ளதே என்றுதான். ஆதலால் நண்பர்களே இதையெல்லாம் பார்க்கும்போது Medical Miracle என்பதைவிட இறைவனின் திருவிளையாடல் என்றுதான் கூறவேண்டும்.
ஒரு நாட்டில் ஒரு பெரிய மருத்துவர் இருந்தார்.அவரிடம் வந்தால் எப்படிப் பட்ட நோயும் குண்மாகிவிடும் என்ற நம்பிக்கை மக்களிடம் மேலோங்கி இருந்தது.ஒருநாள் அவ்ரிடம் மக்கள் வெள்ளம் அலைமோதியது.ஒரு அரை மணி நேரம் அவர் யாரையும் பார்க்கமாட்டார் என்று கூறப்பட்டது. அரைமணி நேரத்துக்குப் பிறகு வந்த மருத்துவரிடம் "ஏன் இப்படி எங்களை காக்க வைத்து விட்டீர்கள்? எங்களை யார் காப்பாற்றுவது?" என்று மக்கள் கேட்டனர். "நான் சர்ச்சுக்குப் போய்விட்டு வருகிறேன்.நாம் அனைவரையும் அந்த கர்த்தர் காப்பாற்றுவார்" என்று கூறிவிட்டு தன் பனியைத் தொடர்ந்தார் அந்த மருத்துவர். இதுவும் இறைவன் திருவிளையாடல்தானா?.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)