தமிழ்த் தெய்வம்

11/10/11

சிறுகதை

                                               கெடாவெட்டு
                      இப்பதான் தாத்தா ஆபிசில் லீவு கிடைத்தது.நா இல்லேன்னா என்ன தாத்தா, அதான் வீட்டுல என் அண்ணனும், தம்பியும் இருக்காங்களே, நா வந்து என்னெ தாத்தா பண்ண்ப்போறேன்?இப்படி கூறியபடியே ஆற்றுக்குள் இறங்கி நடக்க ஆரம்பித்தான்,சுக்ரன்.அவனைத் தொடர்ந்து,அவனது மனைவியும் மகன் புகழேந்தி,மகள் சித்ரா ஆகியோரும் ஆற்றில் இறங்கி நடக்க ஆரம்பிததனர்.அந்த ஊரில் இருக்கும் பெரிசுகள்,நமது சுப்ரமணியனை சுக்ரன் என்றுதான் அழைப்பர்.நாமும் இனி அப்படி அழைக்கலாமே.!
                    கோடைகாலமாக இருக்கும்போது தஞ்சையிலிருந்து பேருந்தில் வந்து இறங்குபவர்கள்,அந்த இடத்தில் இறங்கி ஆற்றுக்குள் நடந்துதான் செல்வர்.கோடைகாலத்தில் ஆற்றில் தண்ணீர் இருக்காதே!.மற்ற நாட்களில் பாலம் இருக்கும் இடத்தில் இறங்கி ஏற்த்தாழ ஒரு கிலோமீட்டருக்குமேல் நடக்கவேண்டியிக்கும்  .அன்றும் அப்படித்தான் அவர்கள் நடந்து சென்றனர்.
                  காலை வெயிலில் ஆற்று மணலில் நடக்க ஆரம்பிதததும்,மணல் சூடு சற்று இதமாக ஏறிக்கொண்டிருந்தது.சின்னப்பெண் சித்ராவுகு கால் சூடு எடுக்க ஆரம்பித்துவிட்டது."கால் சுடுதப்பா" என்று கூறிக்கொண்டே வேகமாக நடக்க ஆரம்பித்தாள்.உடனே புகழேந்தி, "என்ன் பாப்பா, காலா சுடுது? ஆற்று மணல்தானே சுடுகின்றது?"என்றுகூறி வேடிக்கையாக சிரித்தான். ஆற்று மணலில் சிறிது தூரம் நடப்பதற்குள் சுக்ரனின் மனைவிக்கும்,குழந்தைகளுக்கும் களைப்பு ஏற்பட்டவிட்டது. சென்னை நகர வீதிகளில் வலம் வந்த கால்களாயிற்றே,குழந்தைகளின் கால்கள்.  ஆனாலும் கிராமத்தின் சூழ்நிலையும், பச்சைப்பசேலென்றிருக்கும் செடிகொடிகளையும் பார்க்கின்றபோது அவர்களுக்கு உற்சாகம்பீறிட்டுவிடும்.
                  ஆற்றின் மேற்கு கரையில் ஏறியதும்,அங்கு சில அடி தூரத்தில் தெரிந்த வீரனார் கோயில்,அதனருகில் அமைக்கப்பட்டிருந்த பந்தலும்,தோரணங்களும் இன்னபிற ஏற்பாடுகளும அவர்களுக்கு ஆனந்தத்தை அள்ளிவழங்கின. ஆற்றின் மேற்கு கரையின் இரு பக்கமும் எப்போதும் வளர்ந்திருக்கும் முட்செடிகள் வெட்டப்பட்டு,கோயிலுக்குச் செல்லும் வழி சீர்செய்யப்பட்டிருந்தது.கோயில் அருகில் கெடா வெட்டுமிடம்,சமைக்குக்மிடம்,வீரனாருக்கு விருந்து படைக்குமிடம் மற்றும் பலவற்றையும் பார்த்து ஆச்சரியப்பட்டனர்.கோயிலுக்கு புது வண்ணம் பூசப்பட்டு ,பொலிவுடன் காட்சியளித்தது.சென்ற முறை ஊருக்கு வந்தபோது மற்ற சிறுவர்களுடன் சேர்ந்து, ஆற்றங்கரைப் பக்கம் வந்து, காரைப்பழம்,சூரைப்பழம்மற்றும் ஈச்சம்பழம் ஆகியவற்றை பறித்து சாப்பிட்ட அனுபவத்தையும்,ஆற்று மணலில் மற்ற சிறுவர்களுடன் துள்ளிவிளையாடிய அனுபவத்தையும்,அசைபோட்டு,தன் தங்கையிடம் பெருமையாக பேசிக்கொண்டிருந்தான் புகழேந்தி..
                       ஆம்,சுரனும் அப்படித்தான் தனது இளவயது பள்ளி நாட்களில் மாலை வேளையில் அந்த ஆற்றங்கரையில் காலார நட்ந்து சென்று படித்ததையும்,நாவல்பழம், இலந்தப்பழம் ஆகியவற்றை காயாக இல்லாமலும் பழமாக இல்லாமலும் பறித்து தின்றதையும் எதிர் கரையில் சென்ற வாகனகளைப்பார்த்து வியந்ததையும் நினைத்து, பெருமூச்சுவிட்டு,  தனது குலதெய்வக் கோயிலின் அழகைக்கண்டு ஆனந்தக்கண்ணீர் வடித்து நின்றான்..
கோயில் பந்தலில் சில சிறுவர் சிறுமியர் தங்கள் உற்சாகத்தை ஊராருக்கு காட்டிக் கொண்டிருந்தனர்.அப்போது 'கட்டையன்' என்றழைக்கப்படும் தமிழரசன் என்பவன் மட்டும் இவர்களை அடையாளம் கண்டுகொண்டு அறுகில் வந்தான். பிறகு மற்ற சிறுவர்களும் அருகில் வந்து இரண்டற கலந்து விளையாட ஆரம்பித்துவிட்டனர்.இதுதானே குழந்தைகள் உலகம் என்பது!.
           சிறிது நேரத்தில் சுக்ரனின் அண்ணன் அங்கு வந்தார்.இவர்கள் கோயிலடியில் நிற்பதைப் பார்த்ததும்,அனைவரையும் அழைத்துக்கொண்டு தனது வீட்டிற்கு சென்றார்.வீட்டில் உற்றார் உறவினர்கள், அக்கம்பக்கம் உள்ளவர்கள் என ஒரு பெரிய பட்டாளமே இருந்தது.தனது உறவினர்களையும் மற்ற ,ஊர் பெரியவர்களையும் பார்த்து புகழேந்தி, சித்ரா இருவருக்கும் உற்சாகம் அதிகமாகிவிட்டது.பெரும்பாலும், இந்த கால கிராமத்து உறவுகளே  கோயில் திருவிழா, கல்யாணம், காதுகுத்து,இன்னபிற இது போன்ற நல்லது கெட்டதுகளுக்குத்தானேஊருக்கு வந்து கூடுவர்.வெளீயிடங்களிலிருந்து வந்துள்ள கூட்டம் இவ்வளவு என்றால்,இனி அண்டை அயல் கிராமங்களிலிருந்தெல்லாம் இரவுக்குள் வந்து கூடிவிடுவர் இப்படிப்பட்ட உற்றார் உறவினர் கூட்டம், இவர்கள் வீட்டில் மட்டுமல்ல, ஊரில் எல்லா வீடுகளிலும்தான். நிறைந்திருக்கும்.

        இரவு வந்தது. எல்லோரும் கோயிலுக்குப் புறப்பட்டனர்.அங்கே, ஆற்றின் கரை இருமருங்கிலும் மக்கள் கூட்டம்.கோயில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு,மேளதாளம் வாணவேடிக்கை ஒரு பக்கம் மறுபக்கம் நாட்டுப்புற கலைகளான கொம்பு, தாரை தப்பட்டை போன்ற கருவிகளின் ஒலிமுழக்கம்.சென்னையில் வளர்ந்த சுக்ரனின் குழந்தைகள் மட்டுமல்ல,மற்ற பெங்களூரு, திருவனந்தபுரம்,மேலும் வெளிநாட்டில் வாழும் குழந்தைகளுக்கும் இந்நிகழ்ச்சிகள்  மகிழ்ச்சியை தந்தன.ஊரில் உள்ள் சிறுவர் சிறுமியர்களுடன் இவர்களும் சேர்ந்து கொண்டு தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.
          இரவு போய்க்கொண்டேயிருந்தது.கெடாவெட்டும் நேரம் நெருங்கியது.முதல் கெடா சுக்ரனின் வீட்டு கெடாதான்.எனெனில் சுக்ரனின் வீடுதான் பூசாரி வீடு.அதன் பிறகுதான் மற்ற கெடாக்கள் வெட்டப்படும்.அதன்படி சுக்ரனின் வீட்டு கெடா வெட்டப்பட்டு,பிறகு நாட்டாமை வீட்டு கெடா வெட்டப்பட இருக்கும்போது,'அப்போது எனந்த மனிதன் வந்தானோ,இன்னலை ஏற்படுத்த?.வடக்குத்தெரு வாயாடி  குடிகார கோயான் என்றெல்லாம் அழைக்கப்படும் துரைராசு என்பவன் அங்கு வந்து,"தன் வீட்டுக்கெடாவைத்தான் பூசாரி வீட்டு கெடாவுக்கு அடுத்து வெட்ட வேண்டுமென வீண்வம்பு பேசினான்.இதக்கண்ட ஊர் பெரிசுகள் சிலர்,"அப்படியெல்லாம் வழக்கத்தை மாற்றக்கூடாதப்பா,நாட்டாமை கெடாவை வெட்டிய பின்தான் மற்ற கெடாக்கள் வெட்ட வேண்டும்"என மன்றாடினர்,"அதெல்லாம் முடியாது, எங்கெடாதான் வெட்டப்பட வேண்டும்"என மீண்டும் மீண்டும் முரண்டு பிடித்துக்கொண்டிருந்தான் அப்போது  ராசதுரை , அமைதியாக துரைராசு முன் வந்து,"பெரியவர்கள் சொல்வதைக் கேள், நாட்டாமை கெடா வெட்டிய பின் உங்கெடவை வெட்டலாம்,என்று அமைதியாக கூறினான்.அதையெல்லாம் பொருட்படுத்தாமல் துரைராசு வீண் வம்பு செய்துகொண்டிருந்தான் பொறுமையை இழந்த ராசதுரை,உடனே துரைராசுவின் கண்ணத்தில் ஓங்கி ஒரு அறை கொடுத்து அவனை அப்புறப்படுத்திவிட்டான்.. ராசதுரை கொஞ்சம் கோபக்காரந்தான்,ஆனால் குண்வானுமாவான. அதனால் அவனுக்கு ஊரில் நல்ல பெயர்.ஆனால் துரைரசுக்கோ,'குடிகாரன் ,குணக்கேடன் என்றெல்லம் கெட்ட பெயர்தான்.
           பிறகு கெடாவெட்டு அமைதியாக நடந்தது. வீரனாருக்கு படையல் போட்டு,மக்கள் அமைதியாக சாமி கும்பிட்டுவிட்டு படையல் சாதத்தை வாங்க  வரிசையில் நின்றனர்.அப்போது சிலர் தேவையில்லாமல் துரைராசுக்கு ஆதரவாக பேச முன்வந்தனர்.எல்லாம் பாழாய்ப்போன குடியால் ஏற்படுவதுதான்.குடியாலேயே அந்த கிராமத்தில் பல குடிகள் அழிந்துள்ளன.
     துரைராசுவிடம் கொஞ்சம் பணம் இருநததால் அவனைச்சுற்றி எப்போதும். ஒரு கூட்டம் இருந்து கொண்டேயிருக்கும்.அந்த கூட்டத்தில் முக்கியமானவன் சாமிநாதன் என்கிற ஒரு போலியோ நோய் உடையவன்.சிறு வயதிலேயே பெற்றோரை இழந்து பாட்டியுடன் பரிதாப வாழ்க்கை நடத்திக்கொண்டிருப்பவன்.ஆனால் மூளை எப்போதும் நேர் வழியில் வேலை செய்தது இல்லை.வஞ்சனை எண்ணம்கொண்டு கெட்ட எண்ணத்துடனேயே எப்போதும் இருப்பவன்." நொண்டிக்கு நூற்றீயெட்டு கிருத்துவம்""என்று கிராமப்புறங்களில் கூறுவது இவனைப்போன்றவர்களைப் பார்த்துதானோ ,என்னவோ?.இந்த நொண்டியின் தூண்டுதலால்தான் துரைராசு, ஊரில் கெட்ட பெயரை சம்பாதித்துக்கொண்டிருந்தான்.இவர்கள் கெடாவெட்டில் செய்த கலாட்டா ஊர் மக்களையும்,வந்திருந்த உறவினர்களையும் பாதித்தது, ஏன் வீரனாரையே பாதித்து என்றும் சொல்லலாம். பொறுமை காத்த மக்கள் துரைராசுவையும் அவனது கோஷ்டியினரையும் மிகக் கடுமையாகச் சாடினர்.
       நடந்த அனைத்தையும்   அமைதியாக பார்த்துக்கொண்டிருந்த சுக்ரன்,பொறுமையின் எல்லைக்குச் சென்று,பொறுக்கமாட்டாமல், தானும் களமிறங்கினான்.இவனைத் தொடர்ந்து ஊர் இளைநர்களும் பொது மக்களும் திரண்டு கலாட்டா செய்த துரைராசுவையும், அவனது கோஷ்டியினரையும் விரட்டியடித்தனர்.குடிகார கூட்டமான துரைராசுவும் அவந்து கூட்டமும் எடுத்தனர் ஓட்டம்.  மக்கள் கூட்டம் விடாமல் அவர்களைத் துரத்தி அடித்துக் கொண்டே சென்றது.அவர்களோ துண்டைக் கானோம் துணியைக் கனோம் என்று ஓடிக்கொண்டேயிருந்தனர்.
        ஓடிய கூட்டம் அடியும் உதையும் பட்டு ஆங்காங்கே விழுந்து புரண்டு ஓடிக்கொண்டிருந்தனர்.அப்படி ஓடும்போது நொண்டி சாமினாதன் எதிரே இருந்த சமையல்செய்த அடுப்புக்குழி என்பதை அறியாமல் அதனுள் விழுந்துவிட்டான்.நல்ல தீக்காயங்களுடன் கானப்பட்ட அவனை  மருத்துவமனையில் சேர்க்க சுக்ரந்தான் உதவி புரிந்தான். மேலும் பலரும் அந்த கூட்டத்தில் படுகாயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
                  பின்னர் கெடாவெட்டு விருந்து அமைதியாக நடந்து முடிந்தது .ஊர் மக்கள் அனைவரும் அவரவர் வீடு நோக்கி விரைந்து துயில் கொண்டனர். மறுநாள் காலை  நொண்டியைப் பார்ப்பதற்காக மருத்துவமனைக்குச் சென்றான் சுக்ரன்.அய்யகோ, அவன் மருத்துவமனையை அடையுமுன் நொண்டி இறைவனடி சேர்ந்துவிட்டான்.ஆம், வீரனார் தெய்வத்திற்கு நடத்த்ப்படும் விசேஷத்தில் விளையாட்டாகக் கூட சிறு இடைஞ்சலையும் ஏற்ப்டுத்தக்கூடாது. வீரனார் மட்டுமல்ல, எந்த தெய்வந்தான் இதுமாதிரி நடப்பதை ஏற்கும்?
       ஊர் மக்கள் துரைராசு மற்றும் அவனது கூட்டத்திற்காக அழுதாலும்,அவர்களின் கொட்டம் அடங்கியதை எண்ணி தங்கள்வேலைகளை பார்க்க புறப்பட்டனர்.சுக்ரனும் அன்று மாலையே செனையை நோக்கி புறப்பட்டான், கனத்த இதயத்துடன்தான்.