உறவுகள்
கனவன் மனைவி இருவர்.(கனவனும் மனைவியும் இருவர்தான் என்கிறீர்களா?)எப்பொழுதும் சண்டையும் சச்சரவுமாகவே வாழ்ந்து வந்தனர்.திருமணம் ஆன நாள் முதல் தினமும் இதே பிரச்சினைதான்.அதுவும் யாராவது உறவினர்கள் வந்து விட்டாலோ வர இருப்பதாக அறிகுறிகள் தென்பட்டாலோ உடனே வீடு அல்லோலகல்லோலப்படும்.
கனவ்ன் வீட்டு நபர்களையும் அவர்களது உறவினர்களையும்
எப்பொழுதும் குறை சொல்லி பேசுவதே மனைவிகளுக்கு சிறந்த பொழுது போக்காக இருக்கும்.எந்தக் காரணத்தைக்கொண்டும் பிறந்த வீட்டுப் பெருமையை மட்டும் விட்டு தரவே மாட்டார்கள்.அவர்கள் எப்படி வாழ்ந்தார்கள், அவர்களை கட்டிக் கொள்ள யார்யார் வந்து கியுவில் நின்றார்கள் என்பதை கோடி வீட்டு குப்புசாமி முதல் மயிலைக்காளை வைத்திருக்கும் மைனர் வரை கூறி கனவன்மார்களை வெறுப்பேற்றுவார்கள்.
கனவனும் பதிலுக்கு "போடி போக்கத்தவளே,குப்புசாமி தேவரும் மைனரும் உன்னைவச்சுக்கத்தாண்டி ஆசப்பட்டானுக, கட்டிக்க யாரும் வரலைடி.உன் அப்பந்தாண்டி உன் ஆத்தாவோட ஓடிவந்து என் அப்பன் ஆத்தா கால்ல விழுந்து உன்னை எந்தலையில கட்டிவிட்டாங்க.இப்ப நீ என்னன்னா குதிக்கிரே கும்மாள் போடுரே ம்,..இப்ப நான் நினச்சாலும் உன்னையும் உன் குலத்தையும்
வேரோடும் வேரடி மன்னோடும் வெட்டிச் சாச்சுப் புடுவேண்டி"என்று ஒன்றும் செய்ய முடியாதுயென்றாலு்ம் வீராப்பு பேசுவர்
இப்படியேதான் அவர்களது வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது.அது வளமான வாழ்க்கைதான் என்றாலும், தினமும் வம்படிக்கும் வாழ்க்கையாகிப்போனதே.கனவனுக்கும் மனைவிக்கும் கருத்து வேறுபாடு வரலாம்,அதை அவர்களின் வாழ்க்கையை கருவருக்கு்ம் வேறுபாடாக வளரவிடக்கூடாது.தங்கள் குலப்பெருமைப் பேசலாம்,தவறில்லை.தமிழர்கள் எப்பொழுதுமே தங்கள் குலப்பெருமையையும்,பழ்ம்பெருமையையும் பேசியே வாழ்ந்து கொண்டிருப்பவர்களாயிற்றே.நம்து பெருமையை நாம்தான் பேசவேண்டும்,அடுத்தவர்களா பேசுவார்கள்?அப்படி குலப் பெருமையைப் பேசும் குலக்கொழுந்துகளே,'உங்கள் பேச்சு பேச்சாகத்தான் இருக்கவேண்டுமே தவிர,நச்சரவமாக மாறிவிடக்கூடாது'
ஒருநாள் இந்த கனவன் மனைவி சண்டை உச்ச கட்டத்தில் நடந்துகொ்டிருக்கும் நேரத்தில்,கனவனின் நண்பர் ஒருவர் அங்கு வந்தார்.எதிர்பாராத விதமாக ஒரு பிரச்சினை உச்சகட்டம் அடையும்போது, , நல்ல பிரச்சினை நீண்டு வள்ரவும், கெட்டப் பிரச்சினை ஒரு முடிவு பெறவும் இயற்கையிலேயே வழி ஏற்படும் .வந்த நண்பர் பிரச்சினை என்னவென்று கேட்டார்.கனவனோ "ஒன்றுமில்லையப்பா,யாராவது என்னுடைய உறவினரகள் ஊரிலிருந்து வந்தால் இவள் கண்டு கொளவதேயில்லை.அதேநேரம் அவளது உறவினர்கள் வந்து விட்டால் என்ன உபசரிப்பு தெரியுமா?"
"இதெல்லாம் எல்லா மனைவிமார்களும் செய்வதுதானே,அதைக் கண்டும் காணாமல் செல்வதுதான் நல்ல கணவர்களின் பண்பாடு"என்றார்.
அதற்குள் மனைவி," அப்படி ஒன்றுமில்லை அண்ணா,இன்றுகூட அவரோட உறவினர்கள்தான் வந்திருந்தாகள்,நன்றாகத்தான் கவனித்தேன்" என்றாள்.
"அப்படியா? பிறகு ஏனப்பா பிரச்சினையை நீயே உருவாக்குகின்றாய்?" என்று கேட்டார்.
" அந்த என்னோட உறவினர்கள் யார் என்று அவளையே கேள்" என்றார்.
"அவரோட மாமியாரும் மாமனாரும்தான் வந்திருந்தார்கள்,அண்ணா" என்றாரே மனவி,நண்பர் மயங்கிவிழாத குறைதான்.****

3 கருத்துகள்:
சூப்பர்...
பெண்கள் தங்கள் புகுந்த வீட்டில் பிறந்த வீட்டின் பெருமையை பேசாமல் இருந்து விட்டாலே போகும் பிரச்சனைகள் குறைந்துவிடும்...
நன்றி,சௌந்தர்.மற்ற இடுகைகளையும் பார்த்து தங்கள் கருத்துக்களை தெர்விக்கவும்.எழிலன்
கருத்துரையிடுக