தத்துவம் ஒன்று நடந்துதான் தீருமென்றால் அதைப் பற்றிக் கவலைப்பட்டு என்ன பயன்?
இந்த வாழ்க்கையில் கசப்பையே இனிப்பாக்கிக் கொள்ளுங்கள்.இருட்டையே வெளிச்சமாக்கிக்கொள்ளுங்கள்.நஷ்டத்தையே லாபமாக்கிக்கொள்ளூங்கள்.எது நேர்ந்தாலும் கவலைப்ப்டாதீர்கள்.விதி என்ற உண்மையைப் போட்டு அதை துடைத்துவிடுங்கள்.
எந்தசெய்தியையும் அமைதியாக கேளூங்கள்.உடம்பை அலட்டிக்கொள்ளாதீர்கள்.
யாராவது தாறுமாறாக உங்களிடம் பேசிக்கொண்டிருந்தால்,'நீங்கள் சொல்வதே சரியாக இருக்கக்கூடும்' என்று சொல்லிவிடுங்கள்.
உங்களை 'முட்டாள்' என்று திட்டினால்"எனக்கு கூட அந்த சந்தேகம் உண்டு"என்று கூறுங்கள்.
உங்கள் மனைவி சண்டை போட்டால் "சம்சாரத்தில் இதுதான் முக்கிய கட்டம்"என்று கருதுங்கள்.
யாராவது உங்களை அவமானப்படுத்தினால் ஒரு அனுபவம் செகரிக்கப்பட்டுவிட்டதென்று கருதுங்கள்.
வருகின்ற துன்பங்கள் எல்லாம் ஒன்று, இரண்டு,மூன்று என்று அநுபவமாக சேகரித்துக்கொள்ளுங்கள்.
புதுப் புது அனுபவமாக சேகரியுங்கள ஒரே அநுபவத்திற்கு இரண்டு மூன்று பதிப்புகள் போடாதீர்கள்.
'நம்மால் ஆனது ஒன்றுமில்லை' என்ற நினைப்பு,'நமக்கு வந்தது துன்பமில்லை'என்று நினைக்க வைத்து சாந்தியைத் தரும்.
நாட்டையே கட்டி ஆண்டவர்கள் எல்லாம்கூட கோர்ட்டை மிதிக்கும்படி விதிவவைக்கிறதே! உனக்கும் எனக்கும் வருவது துன்பமா என்ன?
கண்ணதாசனின் "அர்த்த்முள்ள இந்துமதம்"என நூலிலிருந்து.

4 கருத்துகள்:
பகிர்வுக்கு நன்றி..
வாழ்க கவிஞர் புகழ்..
நண்பரே,எனக்கு சிறந்ததாகப் பட்டதை தங்களுடன் பகிர்ந்துகொண்டேன்.தங்கள் வரவுக்கு நன்றி.
அரிய தத்துவங்கள் உணர்ந்து நடந்தாலே வாழ்வில் வெல்வது உறுதியாகிடும் நன்றி தோழரே
வருகைக்கு நன்றி.ஹாசிம் அவர்களே,தொடர்ந்து வாருங்கள்.நிறைய கிடைக்கும்.
கருத்துரையிடுக