தமிழ்த் தெய்வம்

25/3/13

கட்டுரை

    
                                              பள்ளி ஆண்டு விழா
                                                     ----------------

        கடந்த 24.03.2013 அன்று சென்னையில் ஒரு பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது.அந்த விழாவில் நானும் கலந்து கொண்டேன்.என்னுடைய பேரனும் அந்த பள்ளிக்குத்தான் சென்று வருகின்றான்(கவணிக்க:சென்று வருகின்றான்)."பிலே குருப்"_ல் பட்டம் வாங்கும் அந்த பாலகனுக்கு துணையாக நாங்கள் குடும்பத்தோடு சென்றிருந்தோம். "மதியம் 12 மணிக்கு வந்து விடுங்கள், 1.00 மணிக்கு நிகழ்ச்சிகள்ஆரம்பாகிவிடும்"என்று கூறியிருந்தனர் பள்ளீயில். ஆனால் அங்கு நாங்கள் சென்றபோது எந்த ஏற்பாடுகளும் முழுமையடையவில்லை.எப்படியோ ஒருவழியாக நிகழ்ச்சிகள் ஆரம்பமாயின.சிறப்பு விருந்தினர்களும் சரியான நேரத்திற்கு வந்து விட்டனர்.குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் சிலவற்றை முதலில் நடத்திவிட்டு இடையில் பட்டமளிப்பு விழா. குழந்தைகளுக்கெல்லாம் பட்டமளிப்பு கோட்டும் தொப்பியும் அணிவித்து நல்ல தோற்றத்துடனும் சிறந்த முறையிலும் பயிற்சி கொடுத்திருந்தது ஒரு நேர்த்தியாக, மிக கம்பீரமாக காணப்பட்டது.அவரவர்களுக்குரிய பட்டத்தை அந்த குழந்தைகள் பெற்றபோது குழந்தைகளைவிட அளவிடமுடியாத ஆனந்தத்தை அடைந்தது அந்த குழநதைகளின் பெற்றோர்கள்தான் என்றால் மிகையில்லை.
               பின்னர் மீண்டும் கலை நிகழ்ச்சிகள் ஆரம்பமாயின.வாய்ப்பாட்டு,பரதம், கீ போர்டு,கரடி நடனம் மற்றும் ரயில் நடனம் என்று பலவிதமான நிகழ்ச்சிகள்.எல்லா நிகழ்ச்சிகளும் அந்தந்த குழந்தைகளின் வயதுக்கேற்பவும்,திறமைக்கேற்பவும் மிகச்சிறப்பாக அமைந்திருந்தன.ஒரு சில ஆட்டங்களுக்கு குழந்தைகள் ஆடியதைவிட அவர்களை பயிற்சிசெய்த ஆசிரியகள்(மிஃஸ்) ஆடிய ஆட்டம் இருக்கின்றதே மிக மிக நன்றாக இருந்தது என்றால் அது மிகையில்லை.அந்த ஆசிர்யர்களின் ஆட்டங்களிலிருந்து, இந்த குழந்தைகளை தயார் செய்ய அவர்கள் எவ்வளவு சிரமப்பட்டிருப்பார்கள் என்றும் புரிந்துகொள்ள முடிந்தது.

              குழந்தைகள் உலகமே தனி உலகம்.அதை யாராலும் புரிந்து கொள்ள முடியாது.அவர்களுக்கு புரிய வைப்பதும் மிக மிகக் கடினம். எனது நண்பர் ஒருவர் அடிக்கடி கூறுவார், "இத்தனை சிறிய, பேச்சையே புரிந்துகொள்ள முடியாத குழந்தைகளுக்கு பாடம் சொல்லி கொடுக்க இவ்வளவு படித்திருக்க வேண்டுமா?  இவ்வளவு பணம் வாங்குகின்றனரே,சில பள்ளிகளில் குழந்தை பிறந்ததும் பதிவு செய்ய வேண்டியது உள்ளதே என்று அங்கலாய்ப்பதைப் பார்த்திருக்கிறேன் .அன்று இந்த நிகழ்ச்சியை பார்த்த பின் அந்த மாதிரியான  எண்ணங்கள் மாற்றிக்கொள்ளப்படவேண்டிய ஒன்று எனப்புரிந்துகொண்டேன் என்றால் மிகையில்லை. வளர்ந்த குழந்தைகளுக்கு நாம் சொல்லி கொடுப்பது சுலபம். ஆனால் பிறந்து சில மாதங்களே (இரண்டு வயதும் அதற்கு மேலும்) ஆன இந்த சிறிய குழந்தைகளுக்கு,இன்னும் இதைவிட பயிற்சி பெற்ற ஆசிரியர்களும் பள்ளிகளும் தேவைதான் என்பதைப் புரிந்துகொண்டேன் .ஏனெனில் இப்போது குழந்தைகள் பிறக்கும்போதே உலக நடப்பை புரிந்து கொள்கின்றனர்.காரணம் உலகம் நமது வரவேற்பறையில் .பெற்றோர்களும் நல்ல பொது அறிவும் நமது குழந்தைகளை நன்கு வளர்க்க வேண்டும் என்ற் உயர்ந்த எண்ணமும் கொண்டுள்ளனர்.ஒரு சில ஆண்டுகளுக்கு முன் இப்படியெல்லாம் இருந்ததா? நிலைமை இதற்கு நேர்மாறாகத்தானே இருந்தது .காலம் மாறும்போது நாமும் மாறித்தானே ஆகவேண்டும்?

          இவ்வளவு நிகழ்ச்சிகளும் இவ்வளவு அருமையாக நடந்ததை பார்த்த பின்னும் சில பெற்றோர்கள் பீஃஸ் கொஞ்சம் அதிகம்தான் என்று கூறியதும் காதில் விழாமல் இல்லை.மழலையர் பள்ளி நிரவாகத்தினர் கவனத்தில் கொள்வார்களா?
                 *****************************


 

23/3/13

தன்னமபிக்கை 2

தன்னம்பிக்கை  உனக்கிருந்தால்  தரணியை ......

        வாழ்க்கையை எல்லோருமே வளமுடன் வாழவே விரும்புவர்.ஆனால் முடிகின்றதா ?ஏற்ற இறக்கங்கள்  உயர்வுகள் தாழ்வுகள் ஏன்?இயற்கையின் நியதியை யாரும் எதிர்பார்ஆன் அப்படித்தானுய்ஸ்ர்ஸ் நினைப்பவர்கல்த்ன்னம்பிக்கையை முதலில் வளர்த்துக்கொள்ளவேனடும் த்து வாழ்வதில்லை. நம்பிக்கைதான் வாழ்க்கை.குளம் வற்றி விட்டதென்று கொக்கு நினைப்பதில்லை.மீண்டும் மழைக்கலம் வருமல்லவா? மழைக்காலம் வந்துவிட்டால் மீண்டும் கோடை காலம் வந்து விடுமே!இருட்டிவிட்டதென்று மனித மனம் சும்மா இருப்பதில்லை.விடியல் வரும் என்ற நம்பிக்கையோடு மறுநாள் செய்ய வேண்டியவற்றை அசை போடுகின்றது.இமயமலையைஏறஎண்ணியவன் உயரத்தைபற்றிக்  கவ லைப்படாமல் தன் எண்ணத்தை நிறைவேற்றத் தன்னம்பிக்கையுடன் ஏறினான் .வெற்றி பெற்றான் .அப்படித்தான் உயர நினைப்பவர்கள் தன்னம்பிக்கையை முதலில் வளர்த்துக்கொள்ள வேண்டும்.தறுதலை எண்ணம் தலை எடுக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.பூனையைப் பிடித்தவன் யானையைப் பிடிக்க எண்ணித் தோல்வி கண்டதைப் போல ,நீச்சல் குளத்தில் நீந்தியவன்  கடலில் குதித்து கரையேற துடிப்பதைப் போல சிந்திக்ககூடாது .அப்படிப்பட்ட சிந்தனை வரும்போது அந்த ஆற்றல் நம்மிடம் உள்ளதா ஆராய்ந்து நம் உள்ளத்தைப் பக்குவப் படுத்தி தன்னம்பிக்கையை வளர்த்துக்கொண்டு செயலில் இறங்க வேண்டும்.
          நான் நான் என்று நீ  அலைந்தால் 
தான் தான் என்பதை இறைவன் காட்டி விடுவான்.
          என்று கவியரசர் கண்ணதாசன் கூறியுள்ளதைஎப்போதும்கவனத்தில் கொண்டு நம்பிக்கையோடு  செயல்பட வேண்டும்.
          ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு தீப்பொறியை  ஏற்படுததினால் போதும்  அது பெரும் நெருப்பாக பொங்கிபிரவாகமெடுத்து வெப்பத்தைஏற்படுத்தும். தாக்கத்தை ஏற்படுத்தும்.என்பதுதான் தன்னம்பிக்கையின் பின்னணி.
               நம்மிடம் தன்னம்பிக்கை குடிகொண்டுவிட்டால் நாம் எவ்வளவுபெரிய சவாலையும் எதிர்கொண்டு வெல்ல முடியும்.எவ்வளவு பெரிய எதிரியையும் வீழ்த்த முடியும்.யானை உருவத்தில் பெரியது.ஆனால் உருவத்தில் சிறிய புலி, தன்னம்பிக்கையால் "யானையை வீழ்த்த் முடியும்" என்ற நம்பிக்கை கொண்டு, யனையை எளிதில் வென்று விடுகின்றது.
     நாம் பிரச்சினையைக கண்டு பயந்தால்,பிரச்சினை நம்மை வென்று விடுகின்றது.துனிந்து நாம் தன்னம்பிக்கையோடு போராடினால் பிர்ச்சினையை எளிதில் கிள்ளி எறிந்துவிட முடியும்.ஜென் கதை ஒன்று உண்டு.நோபிகா என்ற ஜப்பானிய தளபதி சோர்ந்து வீழ்ந்துவிட்ட தன்  வீரர்களுக்கு உற்சாகத்தையும் தன்னம்பிக்கையையும் ஏற்படுத்த எண்ணி,"வீரர்களே,நாம் இப்போது கடவுளை வனங்குவோம். நான் உள்ளே சென்று கடவுளை வணங்கிவிட்டு வந்து,ஒரு நாணயத்தை சுண்டி விடுகின்றேன்,அதில் தலை விழுந்தால் நாம் துனிந்துபோரிடுவோம்,இல்லையேல் நாடு திரும்புவோம்,என்று வீரர்களிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்தி ஒரு நாணயத்தை சுண்டினான்.அதில் தலை விழுந்து,வீரர்கள் உற்சாகமும் உறுதியும்,தன்னம்பிக்கையும் கொண்டு போராடி போரில் வெற்றி கண்டனர்.
        "ஆம் விதியை மாற்றி எழுத முடியாது" என்று அவனது பணியாட்கள் சொன்னார்கள்.
      "ஆம்" என்ற நோபிகா, தான் சுண்டிய நாணயத்தைக் காட்டினான்.அதில் இரு பக்கமும் தலைகள் இருக்குமாறு ஒட்டி இருந்தன..
     அதே நோபிகாதான்.அதே தளபதிதான்.அதே விரர்கள்தான்.ஆனால் நாணயத்தில் தலையைக் கண்டதும், வீரர்களின் தலைகள் நிமிர்ந்து நின்றன.ஒரு மாற்றம் அவர்களிடம் காணப்பட்டது.மாற்றம் என்பது அவர்களின் உற்சாகம் ,ஊக்கம்,தன்னம்பிக்கை,வெற்றி பெறுவோம் என்ற எண்ணம் ஏற்பட்டதும் அவர்களிடம் இருந்த ஆற்றல் வெளிப்பட்டது,போரில் வெற்றி அடைந்தனர்.
         A journey ofthousand miles begins with a single step.ஆயிரக்கான மைல்கள் கொண்ட பயணம் ஒரு சின்ன அடியில்தான் முதலில் ஆரம்பமாகின்றது.முதல் அடி வைக்கும்போதே அது எங்கே முடியும்? என்ற அவ நம்பிக்கையுடன் தொடராமல் வெற்றி பெறுவோம் என்ற தன்னம்பிக்கையுடன் தொடர்ந்து சென்றால் அது ஒரு நெடிய பயணமாக வெற்றியுடன் முடிவு பெறுகின்றது.ஒரு நீளமான காவியம்கூட ஒரு சிறிய எழுத்தில்தான் ஆரம்பமாகின்றது.ஓர் அழகிய வேலைப்பாடுடன் கூடிய சிறந்த சிற்பம்கூட ஒரே ஒரு உளியோசையுடன்தான் ஆரம்பமாகின்றது.ஒரு பெர்ய சமுத்திரம்கூட  சிறுதுளி வெள்ளத்தில்தான் ஆர்ம்பமாகின்றது.தன்னம்பிக்கையுள்ளவன் தக்கன செய்கின்றான்,இந்த தரணியையும் ஆளுகின்றான்.உலகின் தலைசிறந்த தலைவர்கள் எல்லோருமே தன்னம்பிக்கை கொண்டுதான் தரணியில் வாழ்ந்து வந்துள்ளனர்."எங்களால் முடிந்தது ஏன் உங்களால் முடியாது?"என்று கேட்கின்றனர்  தன்னம்பிக்கையால் வளர்ந்த அந்த தலைவர்கள்.தங்கள் திறமையாலும் உழைப்பாலும் தன்னம்பிக்கையாலும் தானே அவர்கள் உயர்ந்து நிற்கின்றனர்.எனவே உயரவேண்டும் என்ற நம்பிக்கை வையுங்கள்/
         "முடியாது என்பது மூட நம்பிக்கை
         முடியுமா என்பது அவ நம்பிக்கை
         முடியும் என்பதே தன்னம்பிக்கை"
   உண்மை, உழைப்பு, உறுதி,விடாமுயற்சி ஆகியவற்றை கைக்கொள்ளுங்கள் .மலர்ந்த முகத்துடனும் தன்னம்பிக்கையுடனும் செயல் படுங்கள், வெற்றி உங்கள் கையில். உயர்ந்து நில்லுங்கள் .உலகம் உங்களை வாழ்த்தும் வணங்கும் .வரவேற்கும்.*