தமிழ்த் தெய்வம்

4/10/11

மாசோலியம்

                         ஒரு மனிதனுக்கு ஏற்படுகின்ற எல்லா நிலைகளிலும் காதல்தான் உயர்ந்த நிலை.காதல் இல்லையேல் தனக்கு வாழ்க்கையே இல்லை என்பதாகத்தான் ஒவ்வொரு மனிதனும் எண்ணுகின்றான்.எந்த ஒரு மனிதனும் தனது எந்த ஒருநிலையிலாவது காதல் வயப்பட்டிருக்கவேண்டும்.எனக்கு காதலே ஏற்பட்டதில்லையென்று யாராவது கூறுவார்களேயானால்,அவர்களை மனித வர்க்கத்தினின்று சற்று தள்ளியே அமர்ந்திருக்கச் செய்யலாம்.காதலில் ஆண் பெண் என்ற பாகுபாடே கிடையாது இருபாலாருக்கும் காதல் ஒரேமாதிரிதான் தோன்றும்.ஆணின் காதல் அளவிடற்கரியது,என்பதின் எடுத்துக்காட்டுத்தான் ஷாஜஹான் தன் மனைவிக்காக கட்டிய தாஜ்மஹால்.இன்றளவும் அது காதலின் அழியாச்சின்னமாகவும், உலகின் அதிசய்ங்களில் ஒன்றாகவும் மிளிர்கின்றதே!
                         ஆனால் அதைவிட பெண்ணின் காதல் பேரளவிடற்கரியது.இதோ பெண்ணின் காதலுக்கோர்,பெண்ணின் பெருமைக்கோர் பெரிய சான்று.
         முற்காலத்தில் பாரசீக  நாட்டின் ஒரு பகுதியான காரியா என்ற நாட்டை ஒரு சிற்றரசன் ஆண்டு வந்தான். அவன் பெயர் மாசோலஸ் .நல்ல வாட்டசாட்டமானவன்.ஆணழகனும்கூட.அவன் மனைவி ஆர்ட்டிமிர்சியாவும் நல்ல அழகி.இருவரும் காதலித்து மனம் புரிந்துகொண்டு சிறப்பாக வாழ்ந்து வந்தனர்.இருவரும் காதலில் தங்களை மிஞ்ச யாரும் இல்லை இந்த  உலகில் என்று மற்றவர்கள் கூறுமளவிற்கு ஒருவர்மீது ஒருவர் அளவிலா அன்புகொண்டு வாழ்ந்தனர்.இப்படிப்பட்ட இன்ப வாழ்வில்தானே இடி பலமாக தாக்கும்.அப்படித்தாக்கியது அவர்கள் வாழ்வில் ஓர் பேரிடி.ஆம்.மன்னன் மாசோலஸ் தனது 36- வது வய்தில் நோவாய்ப்பட்டான்.அரச வைத்தியர்கள் முதல் அனைத்துலக் வைத்தியர்களும் சிகிச்சை செய்தும்,பலனின்றி தனது வாழ்வை முடித்துக்கொள்ளநேர்ந்தது,அந்த மாவீரனுக்கு.
                       காதல் கனவன் காலமானதும் அரசு கட்டிலை ஏற்க வேண்டிய நிலை அந்த அபலை  ஆர்ட்டிமிர்சியாவுக்கு.மனதைத் திடமாக்கிக்கொண்டு ஆட்சியில் அமர்ந்தாள்.ஆட்சியில் அதிக வேலைகளிருந்தாலும்  ஆர்ட்டிமிர்சியாவால் தனது அன்புக் கனவனை மறக்கமுடியவில்லை.தனது காதல் கனவனின் நினைவுக்கு ஒரு வடிவம் கொடுக்க முனைந்தாள்.உலகின், மற்ற நாட்டின், பல தேசங்களிலிருந்தும் புகழ்பெற்ற சிற்பிகள் வரவ்ழைக்க்ப்பட்டனர்.பிரமாண்டமான 36 தூண்கள் நிறுவப்பட்டன.மேலே விண்ணைத்தொடும் அளவிற்கு 24 அடுக்குகள் கொண்ட பெரிய விதானம் அமைக்கப்பட்டது. நடுவில் கல்லறை,அத்ற்கும் மேலே மாசோலஸ் மன்னனின் பிரமாண்டமான சிலை. கல்லறைக்குச் செல்ல 200 படிக்கட்டுகள்.படிக்கட்டுகள் அனைத்திலும் வண்ண வண்ண  ஓவியங்கள்.
                           இப்படி மக்கள் அனைவரின் கண்ணையும் ,கருத்தையும் கவரும் வண்ணம் தனது காதல் மன்னனுக்காக நினைவுச்சின்னம்  எழுப்பினாள் ஆர்ட்டிமிர்சியா.அந்த மாளிகைக்கு "மாசோலியம்"என்று பெயர் சூட்டினாள்.அப்போது உல்கப் பேரதிசயங்களில் ஒன்றாகவும் இது கருத்ப்பட்டது. கி.பி. 15 ம் நூற்றாண்டில் படையெடுத்த அயல் நாட்டினர். அந்த காதல் மாளிகையான 'மாசோலியத்தை இடித்துக்கொண்டிருக்கும்போது வயதான முத்யவர் ஒருவர்,"இது காதல் கனவனுக்காக காதல் மனைவி தீட்டிய காதல் காவியம். இதை அழித்துவிட வேண்டாமே?"என்று அவர்களிடம் கேட்டுக்கொண்டாராம். உடனே இதைக் கேட்டதும் சிலிர்த்துப்போய் இடிப்பது நிறுத்த்ப்பட்டது.எஞ்சிய பாகங்கள்தான் இன்று இருப்பதாக தெரிகின்றது
              மேலை நாட்டுக் காதலில் ஆழம் இருக்காது என்பது நமது மக்களின் கனிப்பு.ஆனால் இந்த க் காதல்?....!.இப்போது புரிகின்ற்தா? பெண்ணுக்காக ஆண் கட்டிய காதல் சின்னம்,தாஜ்மஹால்,ஆணுக்காக பெண் கட்டிய காதல் சின்னம் மாசோலியம்.  .
                  காதல் என்பது ஆணுக்கு வாழ்க்கையில் ஓர் அம்சம்.ஆனால் பெண்ணுக்கோ அதுதான் வாழ்க்கை என்று கூறப்படுவதுண்டு.உண்மைதான்.பெண்களைப் பொருத்தவரை காதல் அவ்வளவு ஆழமானது, புனிதமானது.
                           ஒருவர் தனது மனைவியைக் காணவில்லை என்று டி.வி.யில் விளம்பரம் செய்தார்.இதைக்கண்ட மனைவி  மறுநாள் நேராக வீட்டிற்கு வந்து சேர்ந்தாள்.கனவனுக்கு மிகவும் மகிழ்ச்சி.ஆனால் திடீரென்று மறுபடியும் உடனே கானமல் போய்விட்டாள்.அக்கம்பக்கம்பத்தில் இருந்தவர்கள் கனவனிடம்,"ஏன் ம்றுபடியும் சன்டை போட்டீர்களா? என்று விசாரித்தனர் "இல்லை, வீட்டில்தான் கலர் போட்டோ இருக்கே,ஏன் பிளாக் &ஒயிட் கொடுத்தீர்கள்?விளம்பரத்திற்கு? இனிமேல் இதைக்கொடுங்கள்" என்று கூறிவிட்டுப் போய்விட்டாள்"என்று கூறினார்.
                             இது தற்போதைய காதல்.ம்..ம்...ம்ம்ம்.



5 கருத்துகள்:

SURYAJEEVA சொன்னது…

காதல் பக்தி நட்பு என்று தொடரும் அனைத்து உறவுகள் மேல் உள்ள பாசம், வெளியில் காட்டிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை... நீங்கள் உங்கள் உறவுகள் மேல் பாசம் வைத்திருந்தாள், அது உண்மையானது என்றால் சம்பந்தப் பட்டவர்களுக்கு கண்டிப்பாய் தெரியும்... ஒரு பறவை மேல் உனக்கு அன்பு உண்டென்றால் அதை பறக்க விடு, திரும்பி அது உன்னிடமே வந்தால் உன் அன்பு உண்மையானது என்று ஒரு கூற்று உண்டு.. இது போல் தாஜ் மஹால் கட்டுவது, பிறந்த நாள் பரிசு கொடுப்பது, அன்னையர் தின வாழ்த்து கூறுவது, நண்பர் தின வாழ்த்து கூறுவது அனைத்தும் ஒரு வகை விளம்பரமே... நீங்கள் இவர்கள் மேல் பாசமாய் இருக்கிறீர்கள் என்று வெளியில் பிரசங்கம் செய்யவே உதவும்... கண்ணீர் அஞ்சலி என்று போஸ்டர் அடியில் இப்படிக்கு என்று அடித்தவர்கள் பெயர் இடம் பெற வேண்டிய அவசியம் என்ன... விளம்பரம் தானே...

இது என் கருத்து... சொல்ல நினைத்தேன்.. சொன்னேன்

ezhilan சொன்னது…

வணக்கம்

ezhilan சொன்னது…

தங்கள் வருகைக்கும்,விளக்கத்திற்கும் நன்றி,சூர்யா.

கதம்ப உணர்வுகள் சொன்னது…

தன் அன்பை தன் ஆசையை தன் காதலை எப்படி எல்லாமோ வெளிப்படுத்துகிறார்கள்..

ஷாஜஹானின் அன்பு மனைவிக்கு தன் காதலை தாஜ்மஹாலாக்கி இன்று உலகமே அவர்கள் காதலை அறிய செய்திருக்கிறான்.....

அதே போல் பெண்களில் யாரும் இல்லையா என்று மாசோலியம் என்ற தன் காதல் கணவனுக்காக ஒரு நினைவு சின்னத்தை உலகம் போற்றும்படி செய்ததை மிக அழகாக நிரூபித்திருக்கிறீர்கள் எழிலன் ஐயா…

தன் சக்திக்கு இயன்றதை தன் இணைக்கு தந்து பெருமைப்படுத்துவது போல தான் இந்த மாசோலியம் நினைவுச்சின்னமும்….
இந்த தகவல் இதுவரை நான் அறியாதது ஐயா….
அறியத்தந்து காதலின் மகத்துவத்தை சொல்லி சென்ற வரிகளுக்கு என் அன்பு நன்றிகள் ஐயா….

ezhilan சொன்னது…

தங்கள் இதயத்தை இனைத்து, இந்த இன்ப உலகில் ஈடுஇனையற்று வாழ்ந்த ,இதுபோன்ற இனைகளின், நினைவுச்சின்னங்களை நாம் போற்றி பாராட்டுவோம்.தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோதரி.