தமிழ்த் தெய்வம்

20/10/11

கட்டுரை

                                               

                                                                    திருமணம்

        "திருமணம்" ஆயிரங்காலத்துப் பயிர்.இது காலங்காலமாக இருந்துவரும் முதுமொழி.ஆனால் இன்று, இது ஆயிரங்களின் பயிர். பிள்ளைகளின் வாழ்க்கையை ஆயிரங்கள் சிலவற்றில் அடக்கிவிடுகின்றனர்.
          இப்பொழுதெல்லாம் பிள்ளைகள் நிறைய படிக்கின்றனர்.நல்ல வேளையிலும் அமர்ந்து விடுகின்றனர்.பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளுடன்  மன நிறைவோடு மகிழ்ச்சி பொங்க வாழ்கின்றனர்.ஆனால் திருமணம் என்ற பேச்சு வரும்போது மட்டும் பெற்றோர்கள் பெருமை பேச ஆரம்பித்துவிடுகின்றனர்.அதுவும் சில பெற்றோர்கள் பேசுவது பெரும் பிரச்சினையையே உருவாக்கிவிடும் என்ற அச்சம் எழுகின்றது. மேலும் பெண்கள் ஆண்களைவிட அதிகம் படிக்கின்றனர்.நன்கு படிக்கின்றனர்.நல்ல வேலையிலும் அமர்ந்துவிடுகின்றனர்.ஆனால் திருமணம் என்று வரும்போது தங்களுக்கேற்றவாறு பையன் கிடைக்காமல் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்,பெண்களும்,பெற்றோர்களும்.
               பெண்கள் படிக்க வேண்டும்,பெரிய படிப்பு  படிக்க வேண்டும்.நல்ல வேலையில் அமர்ந்து நல்ல சம்பளமும் வாங்கவேண்டும்.ஆனால் திருமணம் என்ற நிலைப்பாடு வரும்போது மட்டும் பெண்களைப் பெற்றோர் பெரும் வேதனைப் படுகின்றனர்.உதாரணமாக,பெண், பி.ஈ  எம் .எஸ் படித்திருக்கின்றார் என்றால் அதைவிட உயர்ந்தவராக மாப்பிள்ளை இருக்க வேண்டும் என பல  பெற்றோர்கள்  நினைக்கின்றனர்.இந்த மாதிரியான நினைப்புதான் பல பெண்களின் வாழ்க்கை த்ள்ளிப்போக காரணமாகின்றது.பெண்ணிண் படிப்புக்கு ஏற்ற படிப்பும், பண்பாடும் ,இருந்தால் உடன் மணம் முடித்துவிட வேண்டும்.இதை விடுத்து, " என் பெண் இவ்வளவு படித்து, இவ்வளவு சம்பளம் வாங்குகின்றாள் ,பையனுக்கு அதைவிட அதிக படிப்பும், சம்பளமும் இருக்கவேண்டும்" என பேசினால்,பெண்ணுக்கு எப்படி திருமணம் நடக்கும்? பையனின் பெற்றோர்களும் "என் பையன் இவ்வளவு படித்திருக்கின்றான்,இவ்வளவு சம்பளம் வாங்குகின்றான்,எங்களுக்கு ஒரே பையன்"என்றெல்லாம் பெருமை பேசி,ஒருசில விருப்பு, வெறுப்புகளையும் கொண்டிருப்பதால்தான், இக்காலத்து திருமணங்கள்,ஆயிரங்காலத்துப் பயிராக இல்லாமல் சில நாள் பயிராக வாடி வ்தங்கிப் போய் விடுகின்றது.
                               இப்படியெல்லாம் இல்லாமல்,தங்கள் பையன் ,தங்கள் பெண் ,தங்கள் குழந்தைகளின் வாழ்க்கை என்பதை மட்டும் மனதில் இருத்தி,கடந்த காலத்தில் நாம் எப்படி இருந்தோம்?, இப்பொழுது எப்படி இருக்கின்றோம்? எதிர் காலத்தில்   நமது பிள்ளைகள் வாழ்வு எப்படி இருக்க வேண்டும்? என்பதை மட்டும் மனதில் கொண்டு  நமது செயல் பாடுகள் அமைய வேண்டுமே தவிர, .எந்தக் காரணத்தைக்கொண்டும் தங்களது விருப்பு வெறுப்புகளை தங்களது பிள்ளைகளின் வாழ்க்கை மீது தினிக்காமல்  திருமணத்தை பேசி முடித்து,அவர்களுக்கு வெற்றிகரமான வாழ்க்கை அமைய பாடுபட வேண்டும்.
                              அடுத்து, சில பெற்றோர்கள் ஜாதகத்தை நம்பியே தங்களது செல்லக் குழந்தைகளின் வாழ்க்கையை சீரழித்து விடுகின்றனர்.ஜாதகத்தை நம்புவோர், ஓரளவுதான் அதை நம்ப வேண்டுமே தவிர,அதில் உள்ள எல்லா அம்சங்களையும் அலசி ஆராய்ந்து கொண்டிருக்கக்கூடாது.எல்லா ஜாதகத்திலும் நல்லதும் கெட்டதும் கலந்துதான் இருக்கும்.குறிப்பாக தோஷமில்லாத ஜாதகமே இருக்காது.செவ்வாய் தோஷத்தை மட்டும் வேண்டுமானால் திருமணத்திற்காக பார்க்கலாமே தவிர,வேறு எந்த தோஷத்தையும் பார்க்கக்கூடாது.ஆதலால்,ஜாதகத்தை நம்புவோர் செவ்வாய் தோஷத்தை மட்டும் பாருங்கள், மற்ற எந்த தோஷம் இருந்தாலும் அதற்கும் திருமணத்திற்கும் தொடர்பில்லை.ஆதலால் செவ்வாய் தோஷம் பாருங்கள் ,பொருத்தம் பாருங்கள், நல்ல முறையில் பேச்சு வார்த்தையை முடித்து திருமண்த்தை நடத்தும் வழியைப் பாருங்கள்
                     "பிள்ளைகளின் ஜாதகத்தைப் பார்ப்பதைவிட,பெற்றோர்களின் ஜாதகத்தை முதலில் பார்த்து,சம்பந்திகளுக்குள் பொருத்தம் இருந்தால், பிறகு பேசலாம்" என்று வேடிக்கையாக சொல்வ்துண்டு..இம்மாதிரியான இக்கட்டான நிலைமைகளையெல்லாம் ஏற்படுத்தாமல் , ஜாதகம் பார்ப்போர் பாருங்கள்,ஜாதகத்தை நம்பாதோர்,தங்கள் பிள்ளைகளை நம்புங்கள்.எல்லாவற்றுக்கும் மேலாக பெண்ணையும், பிள்ளையையும் நேரில் பார்த்து பேச வாய்ப்பளியுங்கள்.முதலில் அவர்கள் தங்களைப் புரிந்துகொள்ளட்டும்,பிறகு தொடருங்கள் உங்கள் பேச்சுக்களை.
       ஆதலால்,பிள்ளைகளே,பெற்றோர்களுக்கு மரியாதை கொடுங்கள், ம்திப்பளியுங்கள்,ஆனால் உங்கள் வாழ்க்கைப் பாதையை  நீங்களே நிர்ணயித்துக்கொள்ளுங்கள்.பெற்றோர்களே,நீங்களும் உங்கள் பிள்ளைகளின் எதிகாலத்தை நன்றாக கவனத்தில் கொண்டு, நல்ல முடிவினை எடுங்கள்.வீண் வார்த்தை, விதண்டாவாதம் பேசி, எதிகால சந்ததியினரை ஏமாற்றத்துக்கு ஆளாக்காமல், அவர்கள் வாழ்வில் வளம் பெற ,வாழ்வில் ஏற்றம்பெற, வாழ்வில் ஒளீயேற்ற முயற்சியுங்கள்.
                 எல்லா பெற்றோர்களும்,தங்கள் பிள்ளைகளின் வாழ்வை வளமாக்கத்தான் விரும்புவர். ஆனால், வளமான வாழ்வு வாழ, முதலில் தங்கள் பிள்ளைகளின் மனதை ஆராய்ந்து,தங்களின் நிலையையும் நன்குணர்ந்து,பிறகு மற்றவர்களின் கருத்துக்கு மதிப்பளித்து,மண வாழ்க்கையை, மணமுள்ள வாழ்க்கையாக மாற்ற முணைவோம்.விரைவில் எல்லோரது இல்லங்களிலும் மகிழ்ச்சியான மணவிழா காண வாழ்த்துக்கள்.

                    இது ஒரு மீள் பதிவு.

     இராசராசன் செய்தி மலரில்  மே 2007-ல் வேளிவந்தது.



13/10/11

நல்ல சிந்தனைகள்

                                                  சிந்தியுங்கள்.
            
         1.பத்து ரூபாய் பூ தலைமேலே
                 அதிக  விலையுள்ள செருப்பு காலுக்கும் கீழே.

           2.வேட்டையாடிவிட்டு திரும்பிய மன்னனிடம், புலவர்,
                 "புலி வேட்டையில் வென்று புவனத்தில் உயர்ந்த மன்னா,இனி
                  உன் சந்ததி எலி வாலைப் பிடித்து உண்ணும்." (Mouse)

           3.சிலந்திக்கு சிக்கலில்தான் வெற்றி, 
             ரோஜாவுக்கு முள்ளில்தான் மனமும் மரியாதையும்,
            மனிதனுக்கு தோல்வியில்தான் வெற்றி.
          
          4.நன்மைகள் போனால்தான் தெரியும்.
            தீமைகள் வந்தால்தான் தெரியும்.

          5.ஒரு விவசாயி வக்கீலிடம் கூறியது,
                 "வயல் போனாலும் பரவாயில்லை,
                  வரப்பு நிலைக்க வேண்டும்"

          6.கள்ளு கெட்டதுதான்-ஆனால் அதை போய்த்தான் பருகவேண்டும்
              பால் நல்லது-ஆனால் நாம் ஒவ்வொரு இடத்திற்கும் போய்த்தான் ஊற்றவேண்டும்          
                உன்னைத் தேடி மக்கள் வந்தால், நீ கள்ளுக்கடைக்காரன்.
                நீ மக்களைத் தேடிச் சென்றால் பால்காரன்.

           7.பள்ளீயில் பிராணி படம் வரைந்தான், மாணவன்,வாயில்லாமல்,
             ஏனெனில் அது வாயில்லா ஜீவனாம்.

             8.மனைவிகள் கனவர்களிடம் பேசக்கூடாதவை.
                     "உங்ககிட்ட கொஞ்சம் பேசனும்"
                     " நீங்க எப்பவுமே இப்படித்தான்."
                    "  உங்களைக் கட்டிகிட்டு என்னத்தைக் கண்டேன்?"
                     "  தொந்தியும் தொப்பையும் ஆளைப் பார்க்கவே சகிக்கலை"
                    
                                   அடுத்தவர்களிடம்,தன் கனவர்களிடம் உள்ள குறைகளை,அவை சிறியதோ, பெரியதோ, பேசக்கூடாது,உங்கள் பெற்றோரிடம் கூட.

                9.கடவுளைக் காண்பதைவிட கடவுளைப் புரிந்து கொள்வதுதான் முக்கியம்.

              10.உலகிலேயே அழகான ம்னிதரும் நீங்கள்தான்,அசிங்கமான மனிதரும் நீங்கள்தான்.
                கொஞ்சம் புன்னகையை, முகத்தில் தேக்கி, உங்களை நீங்களே கண்ணாடியில் பாருங்கள்,உண்மை விளங்கும்.

            11உனது சிந்தனைகளை கண்ணில் தேக்கி வைக்காதே,இதயத்தில் தேக்கி வை.  கண்ணில் தேக்கி வைத்தால், அவை கண்ணீரில் கரைந்துவிடும்.இதயத்தில் தேக்கிவைத்தால்,இதயம் துடிக்கும்போதெல்லாம் ,உன் நினைவில் நின்றுகொண்டேயிருக்கும்.

             12.  Any voiceof freedom is better than the silence of Tyranny
                   
                     It does not mater where you come from-It matters where you move..

                    we cannot control circumstances,bu we can control response to circumstances.
     
             13. வாக்கற்றவனுக்கு வாத்தியார் வேலை,
                   போக்கற்றவனுக்கு போலிஸ் வேலை.
   
          இதன்  விளக்கம் இதோ,

                         மாணவர்களுக்கு சொல்லி கொடுக்கும் அளவுக்கு வாக்கு கற்றவன்தான் வாத்தியார் வேலைக்கு  வரவேண்டும்.
                        குற்றவாளிகளின் போக்கை அறிந்தவன் தான்  போலிஸ் வேலைக்கு வரவேண்டும்.           ,

                                            888888888888888888888




11/10/11

சிறுகதை

                                               கெடாவெட்டு
                      இப்பதான் தாத்தா ஆபிசில் லீவு கிடைத்தது.நா இல்லேன்னா என்ன தாத்தா, அதான் வீட்டுல என் அண்ணனும், தம்பியும் இருக்காங்களே, நா வந்து என்னெ தாத்தா பண்ண்ப்போறேன்?இப்படி கூறியபடியே ஆற்றுக்குள் இறங்கி நடக்க ஆரம்பித்தான்,சுக்ரன்.அவனைத் தொடர்ந்து,அவனது மனைவியும் மகன் புகழேந்தி,மகள் சித்ரா ஆகியோரும் ஆற்றில் இறங்கி நடக்க ஆரம்பிததனர்.அந்த ஊரில் இருக்கும் பெரிசுகள்,நமது சுப்ரமணியனை சுக்ரன் என்றுதான் அழைப்பர்.நாமும் இனி அப்படி அழைக்கலாமே.!
                    கோடைகாலமாக இருக்கும்போது தஞ்சையிலிருந்து பேருந்தில் வந்து இறங்குபவர்கள்,அந்த இடத்தில் இறங்கி ஆற்றுக்குள் நடந்துதான் செல்வர்.கோடைகாலத்தில் ஆற்றில் தண்ணீர் இருக்காதே!.மற்ற நாட்களில் பாலம் இருக்கும் இடத்தில் இறங்கி ஏற்த்தாழ ஒரு கிலோமீட்டருக்குமேல் நடக்கவேண்டியிக்கும்  .அன்றும் அப்படித்தான் அவர்கள் நடந்து சென்றனர்.
                  காலை வெயிலில் ஆற்று மணலில் நடக்க ஆரம்பிதததும்,மணல் சூடு சற்று இதமாக ஏறிக்கொண்டிருந்தது.சின்னப்பெண் சித்ராவுகு கால் சூடு எடுக்க ஆரம்பித்துவிட்டது."கால் சுடுதப்பா" என்று கூறிக்கொண்டே வேகமாக நடக்க ஆரம்பித்தாள்.உடனே புகழேந்தி, "என்ன் பாப்பா, காலா சுடுது? ஆற்று மணல்தானே சுடுகின்றது?"என்றுகூறி வேடிக்கையாக சிரித்தான். ஆற்று மணலில் சிறிது தூரம் நடப்பதற்குள் சுக்ரனின் மனைவிக்கும்,குழந்தைகளுக்கும் களைப்பு ஏற்பட்டவிட்டது. சென்னை நகர வீதிகளில் வலம் வந்த கால்களாயிற்றே,குழந்தைகளின் கால்கள்.  ஆனாலும் கிராமத்தின் சூழ்நிலையும், பச்சைப்பசேலென்றிருக்கும் செடிகொடிகளையும் பார்க்கின்றபோது அவர்களுக்கு உற்சாகம்பீறிட்டுவிடும்.
                  ஆற்றின் மேற்கு கரையில் ஏறியதும்,அங்கு சில அடி தூரத்தில் தெரிந்த வீரனார் கோயில்,அதனருகில் அமைக்கப்பட்டிருந்த பந்தலும்,தோரணங்களும் இன்னபிற ஏற்பாடுகளும அவர்களுக்கு ஆனந்தத்தை அள்ளிவழங்கின. ஆற்றின் மேற்கு கரையின் இரு பக்கமும் எப்போதும் வளர்ந்திருக்கும் முட்செடிகள் வெட்டப்பட்டு,கோயிலுக்குச் செல்லும் வழி சீர்செய்யப்பட்டிருந்தது.கோயில் அருகில் கெடா வெட்டுமிடம்,சமைக்குக்மிடம்,வீரனாருக்கு விருந்து படைக்குமிடம் மற்றும் பலவற்றையும் பார்த்து ஆச்சரியப்பட்டனர்.கோயிலுக்கு புது வண்ணம் பூசப்பட்டு ,பொலிவுடன் காட்சியளித்தது.சென்ற முறை ஊருக்கு வந்தபோது மற்ற சிறுவர்களுடன் சேர்ந்து, ஆற்றங்கரைப் பக்கம் வந்து, காரைப்பழம்,சூரைப்பழம்மற்றும் ஈச்சம்பழம் ஆகியவற்றை பறித்து சாப்பிட்ட அனுபவத்தையும்,ஆற்று மணலில் மற்ற சிறுவர்களுடன் துள்ளிவிளையாடிய அனுபவத்தையும்,அசைபோட்டு,தன் தங்கையிடம் பெருமையாக பேசிக்கொண்டிருந்தான் புகழேந்தி..
                       ஆம்,சுரனும் அப்படித்தான் தனது இளவயது பள்ளி நாட்களில் மாலை வேளையில் அந்த ஆற்றங்கரையில் காலார நட்ந்து சென்று படித்ததையும்,நாவல்பழம், இலந்தப்பழம் ஆகியவற்றை காயாக இல்லாமலும் பழமாக இல்லாமலும் பறித்து தின்றதையும் எதிர் கரையில் சென்ற வாகனகளைப்பார்த்து வியந்ததையும் நினைத்து, பெருமூச்சுவிட்டு,  தனது குலதெய்வக் கோயிலின் அழகைக்கண்டு ஆனந்தக்கண்ணீர் வடித்து நின்றான்..
கோயில் பந்தலில் சில சிறுவர் சிறுமியர் தங்கள் உற்சாகத்தை ஊராருக்கு காட்டிக் கொண்டிருந்தனர்.அப்போது 'கட்டையன்' என்றழைக்கப்படும் தமிழரசன் என்பவன் மட்டும் இவர்களை அடையாளம் கண்டுகொண்டு அறுகில் வந்தான். பிறகு மற்ற சிறுவர்களும் அருகில் வந்து இரண்டற கலந்து விளையாட ஆரம்பித்துவிட்டனர்.இதுதானே குழந்தைகள் உலகம் என்பது!.
           சிறிது நேரத்தில் சுக்ரனின் அண்ணன் அங்கு வந்தார்.இவர்கள் கோயிலடியில் நிற்பதைப் பார்த்ததும்,அனைவரையும் அழைத்துக்கொண்டு தனது வீட்டிற்கு சென்றார்.வீட்டில் உற்றார் உறவினர்கள், அக்கம்பக்கம் உள்ளவர்கள் என ஒரு பெரிய பட்டாளமே இருந்தது.தனது உறவினர்களையும் மற்ற ,ஊர் பெரியவர்களையும் பார்த்து புகழேந்தி, சித்ரா இருவருக்கும் உற்சாகம் அதிகமாகிவிட்டது.பெரும்பாலும், இந்த கால கிராமத்து உறவுகளே  கோயில் திருவிழா, கல்யாணம், காதுகுத்து,இன்னபிற இது போன்ற நல்லது கெட்டதுகளுக்குத்தானேஊருக்கு வந்து கூடுவர்.வெளீயிடங்களிலிருந்து வந்துள்ள கூட்டம் இவ்வளவு என்றால்,இனி அண்டை அயல் கிராமங்களிலிருந்தெல்லாம் இரவுக்குள் வந்து கூடிவிடுவர் இப்படிப்பட்ட உற்றார் உறவினர் கூட்டம், இவர்கள் வீட்டில் மட்டுமல்ல, ஊரில் எல்லா வீடுகளிலும்தான். நிறைந்திருக்கும்.

        இரவு வந்தது. எல்லோரும் கோயிலுக்குப் புறப்பட்டனர்.அங்கே, ஆற்றின் கரை இருமருங்கிலும் மக்கள் கூட்டம்.கோயில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு,மேளதாளம் வாணவேடிக்கை ஒரு பக்கம் மறுபக்கம் நாட்டுப்புற கலைகளான கொம்பு, தாரை தப்பட்டை போன்ற கருவிகளின் ஒலிமுழக்கம்.சென்னையில் வளர்ந்த சுக்ரனின் குழந்தைகள் மட்டுமல்ல,மற்ற பெங்களூரு, திருவனந்தபுரம்,மேலும் வெளிநாட்டில் வாழும் குழந்தைகளுக்கும் இந்நிகழ்ச்சிகள்  மகிழ்ச்சியை தந்தன.ஊரில் உள்ள் சிறுவர் சிறுமியர்களுடன் இவர்களும் சேர்ந்து கொண்டு தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.
          இரவு போய்க்கொண்டேயிருந்தது.கெடாவெட்டும் நேரம் நெருங்கியது.முதல் கெடா சுக்ரனின் வீட்டு கெடாதான்.எனெனில் சுக்ரனின் வீடுதான் பூசாரி வீடு.அதன் பிறகுதான் மற்ற கெடாக்கள் வெட்டப்படும்.அதன்படி சுக்ரனின் வீட்டு கெடா வெட்டப்பட்டு,பிறகு நாட்டாமை வீட்டு கெடா வெட்டப்பட இருக்கும்போது,'அப்போது எனந்த மனிதன் வந்தானோ,இன்னலை ஏற்படுத்த?.வடக்குத்தெரு வாயாடி  குடிகார கோயான் என்றெல்லாம் அழைக்கப்படும் துரைராசு என்பவன் அங்கு வந்து,"தன் வீட்டுக்கெடாவைத்தான் பூசாரி வீட்டு கெடாவுக்கு அடுத்து வெட்ட வேண்டுமென வீண்வம்பு பேசினான்.இதக்கண்ட ஊர் பெரிசுகள் சிலர்,"அப்படியெல்லாம் வழக்கத்தை மாற்றக்கூடாதப்பா,நாட்டாமை கெடாவை வெட்டிய பின்தான் மற்ற கெடாக்கள் வெட்ட வேண்டும்"என மன்றாடினர்,"அதெல்லாம் முடியாது, எங்கெடாதான் வெட்டப்பட வேண்டும்"என மீண்டும் மீண்டும் முரண்டு பிடித்துக்கொண்டிருந்தான் அப்போது  ராசதுரை , அமைதியாக துரைராசு முன் வந்து,"பெரியவர்கள் சொல்வதைக் கேள், நாட்டாமை கெடா வெட்டிய பின் உங்கெடவை வெட்டலாம்,என்று அமைதியாக கூறினான்.அதையெல்லாம் பொருட்படுத்தாமல் துரைராசு வீண் வம்பு செய்துகொண்டிருந்தான் பொறுமையை இழந்த ராசதுரை,உடனே துரைராசுவின் கண்ணத்தில் ஓங்கி ஒரு அறை கொடுத்து அவனை அப்புறப்படுத்திவிட்டான்.. ராசதுரை கொஞ்சம் கோபக்காரந்தான்,ஆனால் குண்வானுமாவான. அதனால் அவனுக்கு ஊரில் நல்ல பெயர்.ஆனால் துரைரசுக்கோ,'குடிகாரன் ,குணக்கேடன் என்றெல்லம் கெட்ட பெயர்தான்.
           பிறகு கெடாவெட்டு அமைதியாக நடந்தது. வீரனாருக்கு படையல் போட்டு,மக்கள் அமைதியாக சாமி கும்பிட்டுவிட்டு படையல் சாதத்தை வாங்க  வரிசையில் நின்றனர்.அப்போது சிலர் தேவையில்லாமல் துரைராசுக்கு ஆதரவாக பேச முன்வந்தனர்.எல்லாம் பாழாய்ப்போன குடியால் ஏற்படுவதுதான்.குடியாலேயே அந்த கிராமத்தில் பல குடிகள் அழிந்துள்ளன.
     துரைராசுவிடம் கொஞ்சம் பணம் இருநததால் அவனைச்சுற்றி எப்போதும். ஒரு கூட்டம் இருந்து கொண்டேயிருக்கும்.அந்த கூட்டத்தில் முக்கியமானவன் சாமிநாதன் என்கிற ஒரு போலியோ நோய் உடையவன்.சிறு வயதிலேயே பெற்றோரை இழந்து பாட்டியுடன் பரிதாப வாழ்க்கை நடத்திக்கொண்டிருப்பவன்.ஆனால் மூளை எப்போதும் நேர் வழியில் வேலை செய்தது இல்லை.வஞ்சனை எண்ணம்கொண்டு கெட்ட எண்ணத்துடனேயே எப்போதும் இருப்பவன்." நொண்டிக்கு நூற்றீயெட்டு கிருத்துவம்""என்று கிராமப்புறங்களில் கூறுவது இவனைப்போன்றவர்களைப் பார்த்துதானோ ,என்னவோ?.இந்த நொண்டியின் தூண்டுதலால்தான் துரைராசு, ஊரில் கெட்ட பெயரை சம்பாதித்துக்கொண்டிருந்தான்.இவர்கள் கெடாவெட்டில் செய்த கலாட்டா ஊர் மக்களையும்,வந்திருந்த உறவினர்களையும் பாதித்தது, ஏன் வீரனாரையே பாதித்து என்றும் சொல்லலாம். பொறுமை காத்த மக்கள் துரைராசுவையும் அவனது கோஷ்டியினரையும் மிகக் கடுமையாகச் சாடினர்.
       நடந்த அனைத்தையும்   அமைதியாக பார்த்துக்கொண்டிருந்த சுக்ரன்,பொறுமையின் எல்லைக்குச் சென்று,பொறுக்கமாட்டாமல், தானும் களமிறங்கினான்.இவனைத் தொடர்ந்து ஊர் இளைநர்களும் பொது மக்களும் திரண்டு கலாட்டா செய்த துரைராசுவையும், அவனது கோஷ்டியினரையும் விரட்டியடித்தனர்.குடிகார கூட்டமான துரைராசுவும் அவந்து கூட்டமும் எடுத்தனர் ஓட்டம்.  மக்கள் கூட்டம் விடாமல் அவர்களைத் துரத்தி அடித்துக் கொண்டே சென்றது.அவர்களோ துண்டைக் கானோம் துணியைக் கனோம் என்று ஓடிக்கொண்டேயிருந்தனர்.
        ஓடிய கூட்டம் அடியும் உதையும் பட்டு ஆங்காங்கே விழுந்து புரண்டு ஓடிக்கொண்டிருந்தனர்.அப்படி ஓடும்போது நொண்டி சாமினாதன் எதிரே இருந்த சமையல்செய்த அடுப்புக்குழி என்பதை அறியாமல் அதனுள் விழுந்துவிட்டான்.நல்ல தீக்காயங்களுடன் கானப்பட்ட அவனை  மருத்துவமனையில் சேர்க்க சுக்ரந்தான் உதவி புரிந்தான். மேலும் பலரும் அந்த கூட்டத்தில் படுகாயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
                  பின்னர் கெடாவெட்டு விருந்து அமைதியாக நடந்து முடிந்தது .ஊர் மக்கள் அனைவரும் அவரவர் வீடு நோக்கி விரைந்து துயில் கொண்டனர். மறுநாள் காலை  நொண்டியைப் பார்ப்பதற்காக மருத்துவமனைக்குச் சென்றான் சுக்ரன்.அய்யகோ, அவன் மருத்துவமனையை அடையுமுன் நொண்டி இறைவனடி சேர்ந்துவிட்டான்.ஆம், வீரனார் தெய்வத்திற்கு நடத்த்ப்படும் விசேஷத்தில் விளையாட்டாகக் கூட சிறு இடைஞ்சலையும் ஏற்ப்டுத்தக்கூடாது. வீரனார் மட்டுமல்ல, எந்த தெய்வந்தான் இதுமாதிரி நடப்பதை ஏற்கும்?
       ஊர் மக்கள் துரைராசு மற்றும் அவனது கூட்டத்திற்காக அழுதாலும்,அவர்களின் கொட்டம் அடங்கியதை எண்ணி தங்கள்வேலைகளை பார்க்க புறப்பட்டனர்.சுக்ரனும் அன்று மாலையே செனையை நோக்கி புறப்பட்டான், கனத்த இதயத்துடன்தான்.

4/10/11

மாசோலியம்

                         ஒரு மனிதனுக்கு ஏற்படுகின்ற எல்லா நிலைகளிலும் காதல்தான் உயர்ந்த நிலை.காதல் இல்லையேல் தனக்கு வாழ்க்கையே இல்லை என்பதாகத்தான் ஒவ்வொரு மனிதனும் எண்ணுகின்றான்.எந்த ஒரு மனிதனும் தனது எந்த ஒருநிலையிலாவது காதல் வயப்பட்டிருக்கவேண்டும்.எனக்கு காதலே ஏற்பட்டதில்லையென்று யாராவது கூறுவார்களேயானால்,அவர்களை மனித வர்க்கத்தினின்று சற்று தள்ளியே அமர்ந்திருக்கச் செய்யலாம்.காதலில் ஆண் பெண் என்ற பாகுபாடே கிடையாது இருபாலாருக்கும் காதல் ஒரேமாதிரிதான் தோன்றும்.ஆணின் காதல் அளவிடற்கரியது,என்பதின் எடுத்துக்காட்டுத்தான் ஷாஜஹான் தன் மனைவிக்காக கட்டிய தாஜ்மஹால்.இன்றளவும் அது காதலின் அழியாச்சின்னமாகவும், உலகின் அதிசய்ங்களில் ஒன்றாகவும் மிளிர்கின்றதே!
                         ஆனால் அதைவிட பெண்ணின் காதல் பேரளவிடற்கரியது.இதோ பெண்ணின் காதலுக்கோர்,பெண்ணின் பெருமைக்கோர் பெரிய சான்று.
         முற்காலத்தில் பாரசீக  நாட்டின் ஒரு பகுதியான காரியா என்ற நாட்டை ஒரு சிற்றரசன் ஆண்டு வந்தான். அவன் பெயர் மாசோலஸ் .நல்ல வாட்டசாட்டமானவன்.ஆணழகனும்கூட.அவன் மனைவி ஆர்ட்டிமிர்சியாவும் நல்ல அழகி.இருவரும் காதலித்து மனம் புரிந்துகொண்டு சிறப்பாக வாழ்ந்து வந்தனர்.இருவரும் காதலில் தங்களை மிஞ்ச யாரும் இல்லை இந்த  உலகில் என்று மற்றவர்கள் கூறுமளவிற்கு ஒருவர்மீது ஒருவர் அளவிலா அன்புகொண்டு வாழ்ந்தனர்.இப்படிப்பட்ட இன்ப வாழ்வில்தானே இடி பலமாக தாக்கும்.அப்படித்தாக்கியது அவர்கள் வாழ்வில் ஓர் பேரிடி.ஆம்.மன்னன் மாசோலஸ் தனது 36- வது வய்தில் நோவாய்ப்பட்டான்.அரச வைத்தியர்கள் முதல் அனைத்துலக் வைத்தியர்களும் சிகிச்சை செய்தும்,பலனின்றி தனது வாழ்வை முடித்துக்கொள்ளநேர்ந்தது,அந்த மாவீரனுக்கு.
                       காதல் கனவன் காலமானதும் அரசு கட்டிலை ஏற்க வேண்டிய நிலை அந்த அபலை  ஆர்ட்டிமிர்சியாவுக்கு.மனதைத் திடமாக்கிக்கொண்டு ஆட்சியில் அமர்ந்தாள்.ஆட்சியில் அதிக வேலைகளிருந்தாலும்  ஆர்ட்டிமிர்சியாவால் தனது அன்புக் கனவனை மறக்கமுடியவில்லை.தனது காதல் கனவனின் நினைவுக்கு ஒரு வடிவம் கொடுக்க முனைந்தாள்.உலகின், மற்ற நாட்டின், பல தேசங்களிலிருந்தும் புகழ்பெற்ற சிற்பிகள் வரவ்ழைக்க்ப்பட்டனர்.பிரமாண்டமான 36 தூண்கள் நிறுவப்பட்டன.மேலே விண்ணைத்தொடும் அளவிற்கு 24 அடுக்குகள் கொண்ட பெரிய விதானம் அமைக்கப்பட்டது. நடுவில் கல்லறை,அத்ற்கும் மேலே மாசோலஸ் மன்னனின் பிரமாண்டமான சிலை. கல்லறைக்குச் செல்ல 200 படிக்கட்டுகள்.படிக்கட்டுகள் அனைத்திலும் வண்ண வண்ண  ஓவியங்கள்.
                           இப்படி மக்கள் அனைவரின் கண்ணையும் ,கருத்தையும் கவரும் வண்ணம் தனது காதல் மன்னனுக்காக நினைவுச்சின்னம்  எழுப்பினாள் ஆர்ட்டிமிர்சியா.அந்த மாளிகைக்கு "மாசோலியம்"என்று பெயர் சூட்டினாள்.அப்போது உல்கப் பேரதிசயங்களில் ஒன்றாகவும் இது கருத்ப்பட்டது. கி.பி. 15 ம் நூற்றாண்டில் படையெடுத்த அயல் நாட்டினர். அந்த காதல் மாளிகையான 'மாசோலியத்தை இடித்துக்கொண்டிருக்கும்போது வயதான முத்யவர் ஒருவர்,"இது காதல் கனவனுக்காக காதல் மனைவி தீட்டிய காதல் காவியம். இதை அழித்துவிட வேண்டாமே?"என்று அவர்களிடம் கேட்டுக்கொண்டாராம். உடனே இதைக் கேட்டதும் சிலிர்த்துப்போய் இடிப்பது நிறுத்த்ப்பட்டது.எஞ்சிய பாகங்கள்தான் இன்று இருப்பதாக தெரிகின்றது
              மேலை நாட்டுக் காதலில் ஆழம் இருக்காது என்பது நமது மக்களின் கனிப்பு.ஆனால் இந்த க் காதல்?....!.இப்போது புரிகின்ற்தா? பெண்ணுக்காக ஆண் கட்டிய காதல் சின்னம்,தாஜ்மஹால்,ஆணுக்காக பெண் கட்டிய காதல் சின்னம் மாசோலியம்.  .
                  காதல் என்பது ஆணுக்கு வாழ்க்கையில் ஓர் அம்சம்.ஆனால் பெண்ணுக்கோ அதுதான் வாழ்க்கை என்று கூறப்படுவதுண்டு.உண்மைதான்.பெண்களைப் பொருத்தவரை காதல் அவ்வளவு ஆழமானது, புனிதமானது.
                           ஒருவர் தனது மனைவியைக் காணவில்லை என்று டி.வி.யில் விளம்பரம் செய்தார்.இதைக்கண்ட மனைவி  மறுநாள் நேராக வீட்டிற்கு வந்து சேர்ந்தாள்.கனவனுக்கு மிகவும் மகிழ்ச்சி.ஆனால் திடீரென்று மறுபடியும் உடனே கானமல் போய்விட்டாள்.அக்கம்பக்கம்பத்தில் இருந்தவர்கள் கனவனிடம்,"ஏன் ம்றுபடியும் சன்டை போட்டீர்களா? என்று விசாரித்தனர் "இல்லை, வீட்டில்தான் கலர் போட்டோ இருக்கே,ஏன் பிளாக் &ஒயிட் கொடுத்தீர்கள்?விளம்பரத்திற்கு? இனிமேல் இதைக்கொடுங்கள்" என்று கூறிவிட்டுப் போய்விட்டாள்"என்று கூறினார்.
                             இது தற்போதைய காதல்.ம்..ம்...ம்ம்ம்.