பள்ளி ஆண்டு விழா
----------------
கடந்த 24.03.2013 அன்று சென்னையில் ஒரு பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது.அந்த விழாவில் நானும் கலந்து கொண்டேன்.என்னுடைய பேரனும் அந்த பள்ளிக்குத்தான் சென்று வருகின்றான்(கவணிக்க:சென்று வருகின்றான்)."பிலே குருப்"_ல் பட்டம் வாங்கும் அந்த பாலகனுக்கு துணையாக நாங்கள் குடும்பத்தோடு சென்றிருந்தோம். "மதியம் 12 மணிக்கு வந்து விடுங்கள், 1.00 மணிக்கு நிகழ்ச்சிகள்ஆரம்பாகிவிடும்"என்று கூறியிருந்தனர் பள்ளீயில். ஆனால் அங்கு நாங்கள் சென்றபோது எந்த ஏற்பாடுகளும் முழுமையடையவில்லை.எப்படியோ ஒருவழியாக நிகழ்ச்சிகள் ஆரம்பமாயின.சிறப்பு விருந்தினர்களும் சரியான நேரத்திற்கு வந்து விட்டனர்.குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் சிலவற்றை முதலில் நடத்திவிட்டு இடையில் பட்டமளிப்பு விழா. குழந்தைகளுக்கெல்லாம் பட்டமளிப்பு கோட்டும் தொப்பியும் அணிவித்து நல்ல தோற்றத்துடனும் சிறந்த முறையிலும் பயிற்சி கொடுத்திருந்தது ஒரு நேர்த்தியாக, மிக கம்பீரமாக காணப்பட்டது.அவரவர்களுக்குரிய பட்டத்தை அந்த குழந்தைகள் பெற்றபோது குழந்தைகளைவிட அளவிடமுடியாத ஆனந்தத்தை அடைந்தது அந்த குழநதைகளின் பெற்றோர்கள்தான் என்றால் மிகையில்லை.
பின்னர் மீண்டும் கலை நிகழ்ச்சிகள் ஆரம்பமாயின.வாய்ப்பாட்டு,பரதம், கீ போர்டு,கரடி நடனம் மற்றும் ரயில் நடனம் என்று பலவிதமான நிகழ்ச்சிகள்.எல்லா நிகழ்ச்சிகளும் அந்தந்த குழந்தைகளின் வயதுக்கேற்பவும்,திறமைக்கேற்பவும் மிகச்சிறப்பாக அமைந்திருந்தன.ஒரு சில ஆட்டங்களுக்கு குழந்தைகள் ஆடியதைவிட அவர்களை பயிற்சிசெய்த ஆசிரியகள்(மிஃஸ்) ஆடிய ஆட்டம் இருக்கின்றதே மிக மிக நன்றாக இருந்தது என்றால் அது மிகையில்லை.அந்த ஆசிர்யர்களின் ஆட்டங்களிலிருந்து, இந்த குழந்தைகளை தயார் செய்ய அவர்கள் எவ்வளவு சிரமப்பட்டிருப்பார்கள் என்றும் புரிந்துகொள்ள முடிந்தது.
குழந்தைகள் உலகமே தனி உலகம்.அதை யாராலும் புரிந்து கொள்ள முடியாது.அவர்களுக்கு புரிய வைப்பதும் மிக மிகக் கடினம். எனது நண்பர் ஒருவர் அடிக்கடி கூறுவார், "இத்தனை சிறிய, பேச்சையே புரிந்துகொள்ள முடியாத குழந்தைகளுக்கு பாடம் சொல்லி கொடுக்க இவ்வளவு படித்திருக்க வேண்டுமா? இவ்வளவு பணம் வாங்குகின்றனரே,சில பள்ளிகளில் குழந்தை பிறந்ததும் பதிவு செய்ய வேண்டியது உள்ளதே என்று அங்கலாய்ப்பதைப் பார்த்திருக்கிறேன் .அன்று இந்த நிகழ்ச்சியை பார்த்த பின் அந்த மாதிரியான எண்ணங்கள் மாற்றிக்கொள்ளப்படவேண்டிய ஒன்று எனப்புரிந்துகொண்டேன் என்றால் மிகையில்லை. வளர்ந்த குழந்தைகளுக்கு நாம் சொல்லி கொடுப்பது சுலபம். ஆனால் பிறந்து சில மாதங்களே (இரண்டு வயதும் அதற்கு மேலும்) ஆன இந்த சிறிய குழந்தைகளுக்கு,இன்னும் இதைவிட பயிற்சி பெற்ற ஆசிரியர்களும் பள்ளிகளும் தேவைதான் என்பதைப் புரிந்துகொண்டேன் .ஏனெனில் இப்போது குழந்தைகள் பிறக்கும்போதே உலக நடப்பை புரிந்து கொள்கின்றனர்.காரணம் உலகம் நமது வரவேற்பறையில் .பெற்றோர்களும் நல்ல பொது அறிவும் நமது குழந்தைகளை நன்கு வளர்க்க வேண்டும் என்ற் உயர்ந்த எண்ணமும் கொண்டுள்ளனர்.ஒரு சில ஆண்டுகளுக்கு முன் இப்படியெல்லாம் இருந்ததா? நிலைமை இதற்கு நேர்மாறாகத்தானே இருந்தது .காலம் மாறும்போது நாமும் மாறித்தானே ஆகவேண்டும்?
இவ்வளவு நிகழ்ச்சிகளும் இவ்வளவு அருமையாக நடந்ததை பார்த்த பின்னும் சில பெற்றோர்கள் பீஃஸ் கொஞ்சம் அதிகம்தான் என்று கூறியதும் காதில் விழாமல் இல்லை.மழலையர் பள்ளி நிரவாகத்தினர் கவனத்தில் கொள்வார்களா?
*****************************
1 கருத்து:
வணக்கம்!
காளிங்க ராயா் கமழ்வலையை நான்கண்டு
நாளிரண்டாய் இல்லை நடை!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
கருத்துரையிடுக