தமிழ்த் தெய்வம்

25/6/10

நம்பிக்கையிருந்தால் நடுவானில் நடை போடலாம்,
வெம்பி வீழாமல் வீறுகொண்டு எழலாம்,
எம்பிக் குதித்தே நிலாவைத் தொடலாம்,
ஏற்றம் பலகண்டு இன்பமாய் வாழலாம். எழிலன்.

வாயை இழந்தவன் வழக்கை இழந்தான்.

அறிவை விரிவாக்க அதிகம் படிக்க வேண்டும்.
"கற்றனைத்தூரறும் அறிவு"

நடிக்க வருமுன் உடுக்க உடையில்லை
நடிக்க வந்தபின் உடுக்க விடவில்லை. ஒரு பெண் கவி.

23/6/10

நல்ல தகவல்கள்

1.நேற்று என்பது உடைந்த பானை,
இன்று என்பது அழ்கிய வீணை,
நாளை என்பது மதில்மேல் பூனை.

2.முடியுமா என்பது மூட நம்பிக்கை,
முடியாது என்பது அவ நம்பிக்கை,
முடியும் என்பதே தன்னம்பிக்கை.

3.கற்றல்,கேட்டல்,பேசுதல்,படித்தல்,எழுதுதல்
ஆகியவை திறனை வளர்க்க உதவும்.

4.Defeat the defeat before the defeat defeats you.

5.பகலின் திரைச்சீலைதான் இரவு.

6.இள்மைக் காலத்தில் படித்து புரிந்து கொள்ள கற்க வேண்டும்,பிற்கு
க்ற்று தெரிந்து கொள்ள படிக்க வேண்டும்.

7.அறியாமைதான் அறிவின் திரை.

8.வெட்ட வெட்ட முளைக்கும் வித்தையை முட்செடியிடம் கற்க வேண்டும்.
விழ விழ எழும் சூட்சுமத்தை கடல் அலையிடம் கற்க வெண்டும்.
அயராது உழைக்கும் வித்தையை சிலந்தியிடம் கற்க வேண்டும்.
தள்ராத மனத்திடத்தை புறாக்களிடம் கற்க வேண்டும்.

9.கடன் வாங்க கற்றுக்கொள்,கடன் வாங்காமலும் வாழ கற்றுக்கொள்.

22/6/10

சிலமணி நேரம் சிரிக்காமல் இருங்கள்.

பல மணி நேரம் அழாமல் இருங்கள்.

மண்ணுலகில் நீங்கள் மனிதனாய் வாழலாம்

மனித நேயத்துடன். எழிலன்.
--------------------------------------------------

Don't walk in front of me, i may not follow you,
Don't walk behind me ,i may not lead you,
Just walk beside me and be my friend.
ALBERT COMUS.
---------------------------------------------------

கோபம் என்பது மற்றவர்களின் தவறுகளுக்கு நாம் கொடுததுக் கொள்ளூம் தண்டனை. எழிலன்.
-----------------------------------------------------------------------------------

வானமே எல்லை?
வானமே இல்லை. எழிலன்.
-----------------------------------------------------------------------------------

ஆணுக்கு அருங்கேடு நினைத்தாலும
பெண்ணுக்கு பிழை வரக்கூடாது. யாரோ.
--------------------------------------------------------------------------------------
கேட்டதை மறந்து போனேன்,
பார்த்ததை நினைவில் வைத்தேன்,
செய்ததை கற்றுக் கொண்டேன்.
சீனப் பழமொழி.



--------------------------------------------------------------------------------------

17/6/10

ம்னிதனின் கண்டு பிடிப்புகளில் மிக அழகானது,மிகவும் அற்புதமானது குடும்ப அமைப்பு. ஏங்கல்ஸ்.




பொன்னோ பொருளோ தெவையில்லை,
அன்பும் அறமும் அருளும் போதும்.
மனித நேயம் மலர.

பரிபாடல்.



The purpose of life is a life of purpose.

ரயில் பயணம்

நான் (17.6.2010)காலை தஞ்சையிலிருந்து சென்னைக்கு குளிர்சாதனப் பெட்டியில் பயனித்து
தாம்பரம் ரயில் நிலயத்தில் இறங்கினேன்.இரவு மயிலாடுதுறை ரயில் நிலயத்தில் ஒரு சிரு குடும்பத்தினர் ஏறினர்.ஒரு வயதான அம்மா,இரண்டு பேர் 40லிருந்து 45வ்யது மதிக்கத்தக்க ஆண்கள்,அவர்களின் துனைவியர்கள்மற்றும் இரு குழந்தைகள்(சுமார் 3வயது,1வயது).அனைவரும் ஏறியது சரி.அவர்களுக்கு படுக்கைகள் இருந்தன.ஆனால் அவர்கள் எடுத்து வந்த சாமான்கள்.....? இயகோ....அது மட்டுமா? தாம்பரம் வரும் வரை ஒரே பெச்சும் சத்த்மும்தான்.மற்றவர்கள் உறங்குகின்றனறே என்ற எண்ணம் கொஞ்சம்கூட இல்லாமல் அவர்கள் தங்கள் மனம் போன போக்கில் விடியும் வரை ஒரே கூச்சல்தான்.தாம்பரம் ரயில் நிலயத்தில் ரயில் நின்றதும் இற்ங்க வேண்டியகள் இறங்கினர்.அதில் நானும் ஒருவன்.அந்த குடும்பத்தினரும் இறங்கினர்.தங்கள் சாமாங்களை சரிபார்த்து இற்க்கி வைத்தனர்.அந்தோ பரிதாபம்!...தூங்கிக்கொண்டிருந்த த்ங்கள் 1 வயது குழந்தையை மறந்து விட்டனர்.சாமாங்களை மாத்திரம் சரியாக உள்ளதா என கவணித்து எடுத்து வைத்தவர்கள் குழந்தையை மறந்து விட்டனரே.நல்ல வேளை ரயில் புறப்படுகின்ற் சமயத்தில் ஒருவர் தாவி ஏறி குழந்தையை எடுத்து வந்து விட்டார்...
நமது ரயில்வே நிர்வாகத்தினர் "குறைந்த சாமான்,நிறைந்த வசதி" என எவ்வளவுதான் எடுத்துரைத்தாலும் இது போன்ற் மர மண்டைகளுக்கு ஏறுவதில்லையே. தங்கள் குழந்தையை அல்லவா பறிகொடுக்க இருந்த்னர்.