தமிழ்த் தெய்வம்

30/8/11

ஒரு நொடியில்

                                     அந்தக் காலங்களில் பெரும்பாலும் மக்கள் பயனம் செய்வதற்கு மாட்டு வண்டிகளைத்தான் அதிகம் பயன்டுத்தி வந்தனர்.இப்போது உள்ளதுபோல பேருந்தோ சிற்றுந்தோ அல்லது ஆட்டோக்களோ எதுவும அதிகம் ஓடிக்கொண்டிருக்கவில்லை.ரயில் நிலயங்களீல் இருந்தோ பேருந்து நிலையங்களிலிருந்தோ வருபவர்கள் ஜட்கா வண்டியிலோ அல்லது கிராம்ப்புறமானால் மாட்டுவண்டிகளிலோதான் தங்கள் இருப்பிடங்களுக்குச் செல்ல வேண்டும்.

                              ஒருமுறை தமிழறிநர் பண்டிதமனி மு.கதிரேசன் செட்டியார் அவர்கள் ரயிலிலிருந்து இறங்கி தமது கிராமத்துக்குச் செல்ல மாட்டுவண்டியை ஏற்பாடு செய்தார்.ரயிலடியில் நின்றிருந்த பல மாட்டுவண்டிக்காரர்கள் நான் நீ என போட்டி போட்டுக்கொண்டு வந்தனர். அதில் ஒரு வண்டிக்காரனிடம் கூலியைப் பேச ஆரம்பித்தார்.எல்லோரும் கூலி ஒரேமாதிரிதான் கேட்டனர்.ஆனால் யார் தம்மை சீக்கிரம் தமது கிராமத்தில் சேர்ப்பர் என்பதுதான் அவருக்கு கவலையாக இருந்தது.அதில் ஒரு வண்டிக்காரன் மட்டும் "தான் சீக்கிரம் சேர்த்து விடுவதாக கூறினான்.'ஆனால் சிறிது தயக்கத்துடன் சாலை கொஞ்சம் சரியில்லை .மழை பெய்து குண்டும் குழியுமாக இருப்பதாக கூறினான்.உடனே வேரொரு வண்டிக்காரன் 'தமது மாடுகள் இளகாளைகள் என்றும் தாம் ஒரு நொடியில் கொண்டு போய் சேர்த்து விடுவதாகக் கூறினான்.பண்டிதமனி அவர்களும் அவனிடமே பேசி அந்த வண்டியில் ஏறி அமர்ந்தர்.
                            வண்டி வேகமாகச் சென்றது.இளங்காளைகளாயிற்றே.சிறிது தூரம் வரை சாலையும் நன்றாகத்தான் இருந்தது.பண்டிதமனி அவர்களும் தாம் சீக்கிரம் வீடு போய் சேர்ந்து விடலாம் என்று நினைத்துகொண்டு வண்டிக்காரன் தம்மை ஒரு நொடியில் கொண்டுபோய் சேர்த்துவிடுவான் என எண்ணி பெருமிதத்துடன் வண்டியில் அமைதியாக உட்கார்ந்து இருந்தார். சிறிது தூரம் கடந்தபின்தான் சாலை குண்டும் குழியுமாக மக்கள் நடப்பத்ற்கே மிகவும் சிரம்ப்பட் வேண்டியிருப்பது தெரியவந்தது.
                                 கொஞ்சதூரம் மிகவும் மெதுவாகத்தான் வண்டி செல்லவேண்டியநிலை.காலைவெயில் ஏறிக்கொண்டிருந்தது.நடந்து வரும் மக்களும் சிரமப்பட்டே மிக மெதுவாக நடந்து வந்துகொண்டிருந்தனர்.எதிரே ஒரு வயதானவர் வெயிலுக்காக குடைபிடித்துக்கொண்டு ந்டந்துவந்துகொண்டிருந்தார்.குடையைக் கண்டதும் மாடுகள் வெறித்து தாறுமாறாக ஓட, அருகில் இருந்த ஒரு நொடியில் வண்டி குடைசாய்ந்துவிட்டது.
                                   "அய்யா, மன்னித்துக்கொள்ளுங்கள். குடையைக்கண்டதும் மாடு கொஞ்சம் வெறித்துவிட்டது.சாலையும் சரியில்லாத்தால் இந்த நொடியில் தாங்கள் வண்டியோடு சேர்ந்து விழ வேண்டியதாகிவிட்டது.இதோ மீண்டும் ஒரு நொடியில் உங்களை  சேர்த்துவிடுகிறேன்".என்றுகூறினார்வண்டிக்காரர்.உடனே, பண்டிதமனி அவர்கள்,"பரவாயில்லையப்பா,என்னை ஒரு நொடியில் சேர்த்துவிடுகிறேன்,என்றாய்,அப்படி சொன்னதைச் செய்தவன் நீதானப்பா."என்றுகூறி
அந்த நேரத்திலும் கலகலப்பை உண்டுபன்னினார்.
                          இந்த மாதிரி நேரங்களில் துன்பத்திலும் இன்பம் சேர்த்து
நகைச்சுவை  உணர்வோடு பேசுவதுதான் பண்டிதர்களின் தனிப்பெரும் தன்மையாகும்.
                                                                       *******
                                     

26/8/11

உறவு

                                                       உறவுகள்      
                              கனவன் மனைவி இருவர்.(கனவனும் மனைவியும் இருவர்தான் என்கிறீர்களா?)எப்பொழுதும் சண்டையும் சச்சரவுமாகவே வாழ்ந்து வந்தனர்.திருமணம் ஆன நாள் முதல் தினமும் இதே பிரச்சினைதான்.அதுவும் யாராவது உறவினர்கள் வந்து விட்டாலோ வர இருப்பதாக அறிகுறிகள் தென்பட்டாலோ உடனே வீடு அல்லோலகல்லோலப்படும்.
                                      கனவ்ன் வீட்டு நபர்களையும் அவர்களது உறவினர்களையும்
எப்பொழுதும் குறை சொல்லி பேசுவதே மனைவிகளுக்கு சிறந்த பொழுது போக்காக இருக்கும்.எந்தக் காரணத்தைக்கொண்டும் பிறந்த வீட்டுப் பெருமையை மட்டும் விட்டு தரவே மாட்டார்கள்.அவர்கள் எப்படி வாழ்ந்தார்கள், அவர்களை கட்டிக் கொள்ள யார்யார் வந்து  கியுவில் நின்றார்கள் என்பதை கோடி வீட்டு குப்புசாமி முதல் மயிலைக்காளை வைத்திருக்கும் மைனர் வரை கூறி கனவன்மார்களை வெறுப்பேற்றுவார்கள்.
கனவனும் பதிலுக்கு "போடி போக்கத்தவளே,குப்புசாமி தேவரும் மைனரும் உன்னைவச்சுக்கத்தாண்டி ஆசப்பட்டானுக, கட்டிக்க யாரும் வரலைடி.உன் அப்பந்தாண்டி உன் ஆத்தாவோட ஓடிவந்து என் அப்பன் ஆத்தா கால்ல விழுந்து உன்னை எந்தலையில கட்டிவிட்டாங்க.இப்ப நீ என்னன்னா குதிக்கிரே கும்மாள் போடுரே  ம்,..இப்ப நான் நினச்சாலும் உன்னையும் உன் குலத்தையும்
வேரோடும் வேரடி மன்னோடும் வெட்டிச் சாச்சுப் புடுவேண்டி"என்று ஒன்றும் செய்ய முடியாதுயென்றாலு்ம் வீராப்பு பேசுவர்
                                   இப்படியேதான் அவர்களது வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது.அது வளமான வாழ்க்கைதான் என்றாலும், தினமும் வம்படிக்கும் வாழ்க்கையாகிப்போனதே.கனவனுக்கும் மனைவிக்கும் கருத்து வேறுபாடு வரலாம்,அதை அவர்களின் வாழ்க்கையை  கருவருக்கு்ம் வேறுபாடாக வளரவிடக்கூடாது.தங்கள் குலப்பெருமைப் பேசலாம்,தவறில்லை.தமிழர்கள் எப்பொழுதுமே தங்கள் குலப்பெருமையையும்,பழ்ம்பெருமையையும் பேசியே வாழ்ந்து கொண்டிருப்பவர்களாயிற்றே.நம்து பெருமையை நாம்தான் பேசவேண்டும்,அடுத்தவர்களா பேசுவார்கள்?அப்படி குலப் பெருமையைப் பேசும் குலக்கொழுந்துகளே,'உங்கள் பேச்சு பேச்சாகத்தான் இருக்கவேண்டுமே தவிர,நச்சரவமாக மாறிவிடக்கூடாது'
                              ஒருநாள் இந்த கனவன் மனைவி சண்டை உச்ச கட்டத்தில் நடந்துகொ்டிருக்கும் நேரத்தில்,கனவனின் நண்பர் ஒருவர் அங்கு வந்தார்.எதிர்பாராத விதமாக ஒரு பிரச்சினை உச்சகட்டம் அடையும்போது, , நல்ல பிரச்சினை நீண்டு வள்ரவும், கெட்டப் பிரச்சினை ஒரு முடிவு பெறவும் இயற்கையிலேயே வழி ஏற்படும் .வந்த நண்பர் பிரச்சினை என்னவென்று கேட்டார்.கனவனோ "ஒன்றுமில்லையப்பா,யாராவது என்னுடைய உறவினரகள் ஊரிலிருந்து வந்தால் இவள் கண்டு கொளவதேயில்லை.அதேநேரம் அவளது உறவினர்கள் வந்து விட்டால் என்ன உபசரிப்பு தெரியுமா?"
                   "இதெல்லாம் எல்லா மனைவிமார்களும் செய்வதுதானே,அதைக் கண்டும் காணாமல் செல்வதுதான்  நல்ல கணவர்களின் பண்பாடு"என்றார்.
                      அதற்குள் மனைவி," அப்படி ஒன்றுமில்லை அண்ணா,இன்றுகூட அவரோட உறவினர்கள்தான் வந்திருந்தாகள்,நன்றாகத்தான் கவனித்தேன்" என்றாள்.
          "அப்படியா? பிறகு ஏனப்பா பிரச்சினையை நீயே உருவாக்குகின்றாய்?" என்று கேட்டார்.
   " அந்த என்னோட உறவினர்கள் யார் என்று அவளையே கேள்" என்றார்.
               "அவரோட மாமியாரும் மாமனாரும்தான் வந்திருந்தார்கள்,அண்ணா" என்றாரே மனவி,நண்பர் மயங்கிவிழாத குறைதான்.****


19/8/11

சிறுகதை

                                               குதிரை
         ' டேய் எழில், எழுந்திரு'  என்று அதட்டலுடன் எழுப்பினார் என் அப்பா.திடீரென விழித்தெழுந்த எனக்குப் பயம் உடலெங்கும் பரவியது.காரணம் அப்போது எனக்கு ஏழு அல்லது எட்டு வயதுதான் இருக்கும்.இருள் கவ்விய இருட்டு நேரம்.அந்த காலங்களில் பெரும்பாலும் கிராமங்களிலெல்லாம் கதிரவன் தன் கதிர்களை உள்ளிழுத்துக்கொண்டதும் ,கிராமவாசிகள் தங்களின் மாலைக் கடன்களை முடித்துவிட்டு பாய் போட்டு படுத்துவிடுவர்.ஒருசிலர் அன்றைய வேலைப்பளு பற்றியும்,அது எப்படி கழிந்தது என்பதையும், ம்றுநாள் செய்யவேண்டிய வேலைகள் பற்றியும்,  மற்ற சிலரோ,வெட்டிக் கதைகள் பேசியும் தூக்கத்தைவரவழைத்துக் கொண்டுவிடுவர்.இரவு ஒன்பது மணி என்பதே நடுச்சாமம் போல தோன்றும்.அப்போதெல்லாம் மின்சாரம் இல்லை.மிகவும் தாமதமாகத்தான் எங்கள் பகுதிகளில் மின்சாரம் எட்டிப் பார்த்தது.
                          தூக்கத்திலிருந்து எழுந்த எனக்கு பயம் கலந்த ஆச்சரியமாகவும்,ஆச்சரியம் கலந்த பயமாகவும் இருந்தது.அருகில் வெள்ளைநிறம் கலந்த செவலைக் குதிரை ஒன்று நின்றுகொண்டிருந்தது.அதன் பக்கத்தில் எங்கள் வீட்டில் வேலை பார்க்கும் சின்னராசு என்பவருடன் எனது உறவினர் ஒருவரும் நின்றுகொண்டிருந்தார்.'டேய்,இந்த குதிரையை அந்த கம்பத்தில் கட்டு'அப்பா கூறினார்.எனக்கு உடல் வெலவெலத்துப் போனது.காரணம் தூக்கத்தில் எழுந்தது மட்டுமல்ல ,இருட்டில் குதிரையைப் பார்த்த பயம்.அன்றுதான்  குதிரையை அவ்வளவு அருகில்  பார்க்கிறேன்.வேலைக்காரர் சின்னராசு என் பயத்தை அறிந்து,' பயப்படாதேப்பா,சும்மா பிடிச்சு கட்டு'என்று கயிற்றை என்னிடம் நீட்டினார்.நான் பயத்தில் பின் வாங்கினேன். என் அப்பாவும் உறவினரும் தைரியமூட்டி,என் கையைப் பிடித்து குதிரையின் அருகில் அழைத்து சென்று கயிற்றை என் கையில் கொடுத்து கட்டச் செய்தனர். அந்த நேரத்தில், என் அம்மாவும் அண்ணனும் விழித்தெழுந்து,நடப்பதை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை.பிறகு என் அம்மா அரிக்கன் விளக்கை ஏற்றியதும்,குதிரையை அவ்வளவு அருகில், வெளிச்சத்தில் பார்த்த எனக்கு ஆச்சரியத்தில் உடல் முழுதும் புல்லரித்துப் போனது.
                       குதிரை நல்ல அழகு.அதன் மூக்கு, கண், காது அணைத்தையும் அந்த அரை வெள்ச்சத்திலும் நன்றாக உற்றுப் பார்த்தேன்,என்னைக் கவ்வியிருந்த பயத்தைப் பாய்ந்தோடசெய்துவிட்டு,கயிற்றைப் பிடித்துக் குதிரையைக் கம்பத்தில் கட்டினேன்.அப்பொழுது,அப்பா, சின்னராசு,உறவினர்,என் அம்மா மற்றும் அண்ணன் ஆகியோர் 'வீரனாரே' எனக் கையெடுத்துக் கும்பிட்டனர். வீரனார் எங்களின் குல தெய்வம்,எங்கள் கிராமத்தின் காவல் தெய்வம்.நல்ல முறுக்கு மீசையுடன் ஒரு கையில் அரிவாளுடன் சிரித்த முகத்தோடு காட்சியளிப்பவர்.நான் குதிரையை சுற்றி சுற்றி வந்தேன்.முன்னங்கால்,வளைவுடன் கூடிய பின்னங்கால், பின் விலாப் பக்கத்தில் செவலை நிறத் தோலில் வெள்ளை நிற வட்டங்கள்,நீண்ட அடர்த்தியான முடிகள் நிறைந்த ,வழவழப்பான வால் பகுதி ஆகியவற்றைக் கண்ட எனக்கு மனதில் உற்சாகம் பீறிட்டது,என் தூக்கம் போயே போய்விட்டது.நான் குதிரையின் பின்புறம் சென்றதைக் கண்ட சின்னராசு,'தம்பி, பின்னால் போகாதே,குதிரை உதைக்கும்' என்றார்.அப்போதுதான் எனக்கு தெரிந்தது 'குதிரை பின்னால் சென்றால் உதைக்கும்' என்று.இப்போதும் அப்படித்தானே..பிறகு குதிரையை இரண்டு மூன்று முறை சுற்றிவந்து,குதிரையின் அழகை ஆராதித்துவிட்டு,குதிரையின் மேலேறி பார்க்கவேண்டும்  என்றும்,அதன் பிடரி மயிரின் அழகைக் காணவேண்டுமமென்றும் கூறினேன்.முன்பு குதிரையிடம் இருந்த பயம் நீங்கி இப்போது அதை அன்புடம் ஆள வேண்டும் என்ற எண்ணம்  தோன்றியது.சின்னராசுவிடம் என்னை குதிரைமேல் ஏற்றிவிடும்படிக் கெஞ்சினேன்.ஏனெனில் நான் உயரம் குறைந்தவன்தானே?சின்னராசுவும் என்னைக் குதிரைமேல் ஏற்றிவிட்டு,நான் குதிரையின் பிடரியை தொட்டுப்பார்த்ததும் கீழே இறக்கிவிட்டுவிட்டார்.எனக்கோ போர்க்களம் சென்று திரும்பிய போர் வீரன் உணர்வு அப்போது தோன்றியது எனலாம்.
                              பிறகு அம்மா கேட்டார்கள்,'இந்தக் குதிரை சும்மா கிடைத்ததா,இல்லை பணம் கொடுத்து வாங்கியதா? என்று.'பணம் இல்லாமல் பண்டம் கிடைக்குமா?'என்றார் அப்பா.'ஏங்க, நம்ம வயற்காட்டை உழுவதற்கு இரண்டு காளைமாடு வாங்கிவரச்சொன்னா ,நீங்க குதிரை வாங்கிட்டு வந்திருக்கிறீர்களே,இதை வைத்து உழ முடியுமா?'என்று சற்று கோபத்துடன் கேட்ட அம்மா,அவர்களுக்கு சாப்பாடு போட ஆரம்பித்தார்.அப்பா எதுவும் பேசாமல் மற்றவர்களுடன் சேர்ந்து பசியாரத் தொடங்கினார். உறவினர்தான் அம்மாவின் புலம்பலுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
                        'அக்கா நாங்க்ள் மாடு வாங்கத்தான் சந்தைக்கு சென்றோம்.அங்கு சில மாடுகளைப் பார்த்து, விலை கொஞ்சம் அதிகம் என்றாலும் நல்ல ஜாதி ஜோடியாக ஒன்றைப் பார்த்து அச்சாரம் கொடுத்து வந்துள்ளோம். மீதிப் பணத்தை இன்னும் ஒருவாரத்தில் கொடுத்து மாட்டை ஓட்டிவந்து விடலாம்.வீட்டுக்கு வரும் வழியில்,நமது ஆற்றுப்பாலத்திற்கு அருகில் உள்ள இளங்கோவன்  கடையில் டீ குடிக்கும்போது,அங்கு இந்த குதிரையோடுவந்த சிலரும் டீ குடித்தனர்.ஊருக்குப் புதிதாக இருக்கின்றார்களே என்று நாங்கள் அவ்ர்களை,யார், எவர், எந்த ஊர் என்று கேட்டுக்கொண்டிருந்தோம். அவர்களோ, தங்கள் ஊர் பதினைந்து மைல் தூரம் என்றும்,குதிரை விற்பனைக்கு என்றும்,சந்தைக்கு ஓட்டிச்செல்வதாகவும்,இப்போதிலிருந்து ஓட்டிச்சென்றால் விடிகாலைக்குள் சந்தையை அடைந்துவிடலாம் என்றும் கூறினர்'.குதிரைமீது ஏறிச்செல்லலாமே என்று கேட்டதற்கு, குதிரை மீது  ஏறிச்சென்றால் குதிரைக் களைப்படைந்துவிடுமே' என்று கூறினர்.அதற்குள் அக்கம்பக்கத்தில் நின்றுகொண்டிருந்த சிலர் அருகில் வந்துசேர்ந்தனர்.அவர்களில்  குண்டுவீரனும் ஒருவன்.அவன் உடனே தன்னுடைய வேலையைக்காட்ட ஆரம்பித்தான்.''ஏன்யா,நீங்க இதையெல்லாம் கேட்கினறீர்கள்?குதிரையை நீங்கள் வாங்க போறீங்களா? அப்படியே வாங்க நினைத்தாலும் உங்களிடமெல்லாம் பணம் ஏதைய்யா?. உங்களுக்குத்தான் வேறு வேலை இல்லை,அவர்கள் வேலையை ஏன் கெடுக்கின்றீர்கள்?'' என்று குத்தலாக கேட்டார்.
                                  குண்டுவீரன் நல்ல வாட்டசாட்டமான ஆள்தான்.கொஞ்சம் பக்கவாட்டில் வளர்ந்துவிட்டான். அதனால்தானோ என்னவோ பக்கத்தில் உள்ளவர்களைப் பாடாய் படுத்திவிடுவான்.நல்ல எண்ணமும் கிடையாது. பரம்பரை சொத்திலேயே வாழ்க்கையை அமைத்துக்கொண்டு ,பக்கத்துவீட்டு சொத்துக்களையும் வளைத்துப் போட்டு வாழ்க்கையை அமைத்துக்கொண்டாலும்,நல்ல எண்ணமின்றி நாட்டில் நடமாடும் நயவஞ்சகப் பேய்களில் அவனும் ஒருவன்.பணத்திமிரில் பங்காளிகளையும் உற்றார் உறவினர்களையும் உதறித்தள்ளி வாழ்ந்து வருபவன். "நீரென்றால் கீழ் நோக்கித்தான் செல்லும்,நெருப்பென்றால் மெல் நோக்கித்தான் செல்லும்" ஆனால் வீரனோ பக்கவாட்டில் பஞ்சமின்றி வளர்ந்துவிட்டான்.அதனால்தான் இவனைப் பார்ப்பவர்கள்,'இவன் தலையை மட்டும் துண்டித்துவிட்டால்,வீட்டிற்கு குதுரு தேவையில்லை,பத்து மூட்டை நெல் கொட்டிவைக்கலாம்'எனறு கேலி பேசுவர்.இளைய கூட்டமோ.இன்னும் ஒருபடி மேலே சென்று , 'என்னைய்யா நவீன தசரதரே'என்று பேசி  மகிழ்வர்.ஏனெனில் அவருக்கு மனைவிகளைவிட வைப்பாட்டிகளே அதிகம்.
இருந்தாலும் அவனிடம் கடன் வாங்கும் நேரத்தில் மட்டும் அன்போடு பேசி தங்கள் காரியத்தை சாதித்துக் கொள்வர்.
                           வீரன் பேசுவதைக் கேட்ட மாமா   உடனே  கோபம் கொண்டு,"என்னிடமா பண்ம் இல்லை? நீதான் பணக்காரன் என்ற நினைப்போ ரொம்ப திமிருடா உனக்கு" என்று கூறினார்   எங்களிடம் வீரன் நக்கலாக பேசுவதைக் கூட்டத்தினரும் கவனித்துகொண்டிருந்தனர்.உடனே வீரன்,"எங்கையா உன்னிடம் நூறு ரூபாய் இருந்தால் எடு, உனக்கே இந்தக் குதிரையை வாங்கித் த்ருகிறேன்",என்றார்.மாமாவிடம் நூறு ரூபாய் இருந்தது,ஆனால் உடனே எடுக்கக்கூடாது என்று எண்ணி சிறிது தயக்கம் காட்டி,தன்னிட ம் அதிகமாக இருந்த ஒரு இரண்டு ரூபாயைத் தாளைக் கீழே நைசாக போட்டுவிட்டார்.பிறகு தன்னிடம் இருந்த நூறு ரூபாயை எடுத்து நீட்டினார்.குண்டுவீரன் அசந்து விட்டான்.பிறகு ஒருவழியாக சமாளித்து,"நான் உன்னை சோதனை போடவேண்டும்.உன்னிடம் அதிகமாக இருக்கலாம்" என்று கூறி, பக்கத்தில் நின்ற தன் கைத்தடியை அழைத்து சோதனை செய்யச் சொன்னான்.மாமாவும் அதற்கு ஒத்துக்கொண்டு சோதனை போட அனுமதித்தார்.மடியில் கணம் இருந்தல்தானே.சோதனை முடிவில்  கூடுதலாகவோ, குறைவாகவோ பணம் இல்லை என தெரிந்ததும்,"சரி சரி,பரவாயில்லை.அவர்களது வியாபாரத்தில் நாம் நஷ்டம் ஏற்படுத்தக் கூடாது.எல்லோரும் போங்கையயா,"என்று மழுப்பலாக பேசத் தொடங்கினான்.
                                      உடனே,நமது  மேலத்தெரு வெங்கிடு,வீரனின் கையை இறுக்கிப் பிடித்துக்கொண்டு,"வேஷ்டியையெல்லாம் அவிழ்த்து சோதனைப் போட்டுவிட்டு இப்படி நழுவப்பார்க்கிறியே,ஒழுங்கா குதிரையை வாங்கிக் கொடு,இல்லையேல் உனக்கு மானம் என்ற ஒன்று இருந்தால்  அதைக் கப்பலேற்றிவிடுவேன்."என்றான்.""என்னடா மானம் கப்பல் என்று பேசுரே, என்னடா பண்ணமுடியும் உன்னால?" என்று குண்டுவீரனும் பதிலுக்கு முறைத்தான்.உடனே வெங்கிடு,வீரனின் கையை விட்டுவிட்டு,அவன் கழுத்தில் போட்டிருந்த துண்டால்  கழுத்தை இறுக்கிக் கொண்டே , "உன்னுடைய ஆடைகளையெல்லாம் அவிழ்த்துவிட்டு,கரும்புள்ளி செம்புள்ளிக் குத்தி,கழுதைமேல் ஏற்றி,காலை ஆறு மணி முதல் மாலை ஆறு மணிவரை ஊர்வலம் விடுவோம்"என்றதும், வீரனுக்கு உடல் வெலவெலத்துப் போய்விட்டது.காரணம்,வெங்கிடு, சொன்னதை செய்து காட்டுபவனாயிற்றே.பிறகு வேறுவழியின்றி,குண்டுவீரன் நூறு ரூபாயுடன் தன் பணத்தைப் போட்டு இந்தக் குத்ரையை வாங்கிக் கொடுத்தான்.
                                    இதுதான் எங்கள் வீட்டிற்கு குதிரை வந்த கதை.

                மறுநாள்,காலையிலிருந்தே எங்கள் வீட்டைச் சுற்றி கிராம மக்கள் கூட்டம், கூட்டமாக வரத்தொடங்கிவிட்டனர்.மக்கள் மகிழ்ச்சியில் திளைத்தபோது, என் அப்பா மட்டும் கவலையுடன்,'குதிரையை வாங்கிவிட்டோம்,அதை பராமரிப்பது எப்படி? திருமணங்களுக்கு ஓட்டிச் செல்வது யார்?' என்று யோசிக்கலானார்.அந்த்க் காலங்களில் எங்கள் பகுதிகளில் குதிரையில்தான் மாப்பிள்ளை ஊர்வலம் நடைபெறும். குதிரைக்கு ஏற்ற மாதிரி பத்து ரூபாயோ,இறுபது ரூபாயோ சத்தமாக  (வாடைகையாக)கிடைக்கும்.என் அப்பா என்ன செய்தார் தெரியுமா, எங்கள் குதிரைக்கு பத்து ரூபாய்தான் வாடகை என்று நிர்ணயித்து,அதை பராமரிக்கும் பொறுப்பை வேலையாள் சின்னராசுவிடம் ஒப்படைத்துவிட்டார்.மாப்பிள்ளை ஊர்வலத்துக்குப் போய்விட்டு வந்தால், ஒரு ஊர்வலத்துக்கு இரண்டு ரூபாய் கொடுப்பார் சின்னராசுக்கு.
                           இப்படியே  இன்பமாக போய்க்கொண்டிருந்தது குதிரையின் வாழ்க்கை. ஆனால் எனக்குத்தான்,'என்னை ஏன் எழுப்பி குதிரையைக் கட்டச்சொன்னார்கள்'என்று தெரிய்வேயில்லை .பிறகு ஒருநாள் ,அஸ்வனி நட்சத்திரத்தில் பிறந்தால்,குதிரை வாங்கும் அதிர்ஷ்டம் உண்டு என்றும் நான் அஸ்வனியில் பிறந்திருப்பதாகவும் கூறினார்கள்.அஸ்வம் என்றால் குதிரை என்று அர்த்தமாம்.அப்படியென்றால் குதிரை வைத்திருப்பவர்களெல்லாம் அஸ்வனியில் பிறந்தவர்களா என்றால் அப்படியல்ல,அஸ்வனியில் பிறந்தவகள் குதிரை வைத்திருப்பார்கள் என்று கூறுகின்றனர். உண்மையா?.
                                    

18/8/11

தெரிந்துகொள்ள வேண்டும்.

                                           அமெரிக்க பழமொழிகள்
       1.உலகில் புத்திமதிதான் இலவசமாக கிடைக்கும் சரக்கு
       2.வெகுமதியும் தண்டணையுமே உலகை ஆட்சி செய்கின்றன.
       3.நரியோடுசேர்ந்த சேவல் நன்மை அடையாது.
       4.பழைய புத்தகங்களுக்கு வேர் நீளம்.
       5.தேவையற்றதை வாங்காதே, தேவையானதை விற்காதே.
       6.பெரிய சண்டைக்குப் பின்னால் பெரிய நட்பு இருக்கும்.
       7.சொந்த் நாற்காலியில்தான்  சுகமாக உட்காரமுடியும்.

                                     ரக்ஷ்ய பழமொழிகள்
     1.பூண்டு ஏழு பிணிகளை தீர்க்கும்.
     2.திருடின விறகும் எரியும்.
     3.விக்கிரகங்கள் செய்பவன் அதை வணங்குவதில்லை.
     4.நோயாளிக்கு தேனும் கசக்கும்.
     5.பிறரை உள்ளன்புடன் நடத்துவது பெருந்தன்மையின் அடையாளம்.
     6.மனைவிக்கு கணவனே சட்டம்.
     7.பன்றி்க்கு உணவு நேரம் எது?.

                                    ஸ்பெயின் பழமொழிகள்
      1.பெண்கள் கிடைததை விரு்ம்பமாட்டார்கள்,மறுத்ததையே விரும்பி வாடுவார்கள்
      2.விருந்தினருக்கு முதுகுப் புறம்தான் அழகு.
      3.அதிகம் பேசுகின்ற இருவர் நெடுந்தூரம் சேர்ந்து போக முடியாது.
      4.கோழி ஊரெங்கும் கூவும், சேவல் குப்பை மேட்டில் இருந்துதான் கூவும்.
      5.எது நன்மை என்பது அதை இழக்கு்போதுதான் தெரியும்.
    
                                        இத்தாலி பழமொழிகள்
      1.வாலைஆட்டினால்தான் நாய்க்குகூட உணவு கிடைக்கும்.
      2.குழந்தை இல்லாதவனுக்கு அன்புதெரியாது.
      3.இதயம் குறைவானால் நாவு அதிகம்.
      4.நல்லது போனால் தெரியும் கெட்டது வந்தால் தெரியும்.
      5.உன் பகைவனே உன்னை அறிவாளி ஆக்குபவன்.
      6.தாமதித்து வருபவன் மிச்சம் உள்ளதையே உண்ணவேண்டும்.

                                    கிரீஸ் பழமொழிகள்
     1.இந்த உலகில் வாழவேண்டுமா எச்சரிக்கையுடன் இருங்கள்.
     2.ஏழை உ ண்மையைச் சொன்னாலும் நம்ப மாட்டார்கள்.
     3.பழிவாங்குதலைவிட மன்னித்தல் மேலானது.
     4.அதிர்ஸ்டம் உள்ளவன் சேவலும் முட்டையிடும்.
     5.நல்ல நடத்தையே சீரிய பண்பாக அமையும்.
     6.ஈரமான விறகிலிருந்து மட்டுமல்ல எல்லா விறகிலிருந்தும் புகை வரும்.

                                       ஆப்பிரிக்க பழமொழிகள்
     1.பல ப்ழங்களைப் பார்த்துக் கொண்டேயிருந்தால்,கடைசியில் அழுகிய ப்ழங்களைத்தான் வாங்க நேரிடும்.
     2மென்மையான சொற்கள் செல்வத்தைக் கொண்டுவரும்.
     3.கம்புகள் கட்டோடு இருந்தால் அதை ஒடிக்க முடியாது.
     4.செல்வம் தேயும்,கல்வி வள்ரும்.
     5.பிச்சைக்காரனின் கோபம் அவன் தலையில்தான் விடியும்.
     6.வீட்டுத் தலைவன்மீது எல்லோருடைய குப்பையும் கொட்டப்படும்.
     7.நாயிடம் கடன் பட்டிருந்தால்,அதையும் அய்யா என்றுதான் அழைக்கவேண்டும்.

                                   எஸ்டொனிய பழமொழிகள்
     1.மல்ட்டுப் பசுவைவிட, பால் கொடுக்கும் வெள்ளாடு மேலானது.
     2.நீ எதற்கு அஞ்சுகிறாயோ அது உன்னை எட்டிப் பிடித்துவிடும்.
     3.உங்களை நேசிப்பவகளைவிட ,வெறுப்பவர்கள் இந்த உலகில் அதிகம் இருப்பதால்- பொறுமையோடு வாழக் கற்றுக்கொள்ளுங்கள்.
     4.தொழில் தெரிந்தவனிடம்  வேலையே நடுங்கும்.
     5.காலியாய் உள்ள தலைகள் எப்போதும் நிமிர்ந்தே நிற்கும்.

                                                                     தொகுப்பு ---எழிலன். 


                                       

16/8/11

காலாம்புடிக்கியும், மேணாமிணுக்கியும். (நையாண்டி தொடர்)

   கா.பு :  டேய், மேனா மினுக்கி,இன்ன்னைக்கி என்னடா இவ்வளவு நேரம்?
 மே.மி:  ஓய்வு எடுக்கலாமுன்னு போனேன்.நாடு போற போக்கை பார்த்து ,..
 கா.பு: ஒடனே திரும்பி வந்துட்டிங்களாக்கும்.நாட்டு மேல அவ்வளவு அக்கறை?
மே.மி: ஆமாண்ணே.நாட்டு மேல இல்லண்ணே, வீட்டு மேலதான்.
கா.பு :என்னடா  முன்னாள் முதல்வர் கருனாநிதி மாதிரி பேசுற?
 மே.மி:ஆமாண்ணே,.. என்னண்ணே திடீர்னு கருனாநிதி ராகு காலத்தைப் பற்றி பேச ஆரம்பிச்சுட்டாரு?
  கா.பு. அட ஆமாடா,அவ்ரு மஞ்சள் துண்டு போட ஆரம்பிச்சதிலேருந்து நாட்டு மக்கள் அத்தனை பேரும் கேட்டாங்கடா,'மஞ்சள்துண்டின் மகிமை என்னன்னு,இதுவரை என்ண்டா சொன்னாரு?
 மே.மி: அவரு செஞ்சா அது அவரோட விருப்பம்.மற்றவங்க செஞ்சா அது பகுத்தறிவுக்கு பாதகம்ண்ணே.ஆமாண்ணே, ஏன் அவர் இதுவரைக்கும் சிறையில் வாடும் உடன் பிறப்புக்களை சென்று பார்க்கல?
 கா.பு: ஏண்டா, அவர்தான் டில்லிக்கே சென்று தன்னோட மகள் கனிமொழியையும்,உடன் பிறப்பு ராசவையும் பார்த்துவிட்டு வந்தாரே.தலைநகர் சென்று தன் மகளையும்,ராசாவையும் பார்த்தாலே,நாட்டில் எல்லோரையும் பார்த்ததாகத்தான் அர்த்தம்,புரிஞ்சுக்கோடா.
மே மி:ஏண்ணே,எல்லாமே பொய் வழக்குன்னு சொல்லி புலம்புராரே, அங்கே ராசா, கனிமொழி கைது மட்டும் உண்மையோ? இங்கே அவர் ஆட்சியில் இருக்கும்போது மட்டும் அவர் செய்தது எல்லாம் உண்மையோ?
அவர் செய்தது எல்லாம் உண்மை,.அம்மா செய்தால் பொய்யாகிவிடுமா?
கா.பு: டேய்,அவர் செய்தது எல்லாம் அவ்ருக்கே தெரியும்டா.நெஞ்சுக்கு நீதி எழுதியவர்டா,அதைப் பற்றி அதிகம் பேசாதே.பிறகு உனக்கும் அன்பழகனிடம் சொல்லி வக்கீல் நோட்டீஸ் வந்துவிடும்.
மே.மி: ஏண்ணே,எல்லா வழக்கையும் சட்டப்படி சந்திப்போம்னு சொல்ராரே,அப்ப சட்டப்படி இல்லாமலும் சந்திக்க முடியுமாண்ணே?
 கா.பு: டேய்,அவ்ர எப்படி சந்திச்சாலும் வாய் ஜாலம் காடட முயல்வாரே தவிர வழக்கில் அவர் ஜாலம் செல்லாது.'அனைத்து தமிழக மக்களும் அம்மாவை அரியனையில் அமர்த்தியுள்ளனர்.இந்திய துணைக்கண்டமே அம்மாவின்  வாய் அசைவுக்காக காத்துக் கிடக்கிறது,ஏன்,அமெரிக்கா உட்பட அகில உலகமும் அம்மாவின் நடவடிக்கைகளைக் கண்டு அசந்து போய் நிற்கிறது.
 மே மி: அமாண்ணே,பத்திரிகைகளில் மட்டும் கேள்வி ப்தில் வடிவிலும்,கடிதங்கள் மூலமும் எழுத்து ஜாலம் காட்டி தனது கட்சித் தொண்டர்களை ஏமாற்றுகின்றாரே தவிர,உறுப்படியாக இதுவரை எந்த நடவடிக்கையுமெடுக்கவில்லையே?....
 கா.பு: டேய்,அப்படி சொல்லாதே,விரைவில்,  தன் குடும்பத்தாருடன்  தானும் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக செய்திகள் உலா வருகின்றன.அப்படி
நடந்துவிட்டால்.......
 மே மி: அண்ணே நடக்கிற்தைப் பத்தி பேசுங்கண்ணே. இவர் குடும்பத்தினர்எப்பண்ணே இது மாதிரி  நிகழ்ச்சியிலெல்லாம் கலந்துகிட்டு இருக்காங்க? எல்லாம் ஊரை ஏமாற்றும் வேலைண்ணே.
 கா.பு: டேய்,இதையெல்லாம் அவ்ர் கட்சிக்காரர்களும்,நாட்டு மக்களும் புரிந்துகொண்டால் சரிதான்.நமக்கேண்டா அந்த வம்பு?
 மே.மி: ந்ட்டு மக்கள் புரிந்துதாண்ணே ஓய்வு கொடுத்தாங்க,அவ்ர்தாண்ணே இன்னும் புரிந்தும் புரியாததுபோல ந்டந்துக்கிறார்.நாமென்ன செய்ய முடியும்?.../
 சரிண்ணே,ஒரு சின்ன வேலை இருக்கு, நாளைக்கு வர்றேண்ணே. வரட்டுமா?
 கா.பு: சரி, போய்வா, மீண்டும் சந்திப்போம்..

8/8/11

காப்பி யடித்தல்

                                               எனக்கும் தெர்யாது              
                                                                         
              பள்ளித் தேர்வுக ள் முடிந்து விடைத்தாள்கள் மதிப்பிடும் பணி ஆரம்பமாகி விட்டாலே,நமது ஆசிரியர்களுக்கு ஒரே கொண்டாட்டம்தான்.குஷியும் அதிகமாகிவிடும். காரண்ம்,பணம் மட்டுமல்ல,அங்கு அவர்களுக்கு ஏற்படும் அனுபவங்களும்தான்.சில ஆசிரியர்களுக்கு அறிவு வளரும்,அன்பு பெருகும்,நல்ல எண்ணங்கள் உருவாகும்.சில நேரங்களில் வேடிக்கை விளையட்டுக்கள் கூட ஏற்பட்டு அவர்களின் வாழ்க்கை முறைகூட மாறுபட்டுவிடும்.
                                          அப்படி மதிப்பீடு செய்யும் காலங்களில்,இடைவேளையின்போதும்,மதிய உணவின்போதும்,தாங்கள்  சந்தித்த ,வேடிக்கையான, வினோதமான ,விளையாட்டுத்தனமான,அறிவுபூர்வமான,சில அழகான நிகழ்வுகளை,ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வர்.ஒருமுறை,ஓர் ஆசிரியர்,
தான் சந்தித்த ஒரு நிகிழ்ச்சியை விவரித்தார். தனக்கு வந்த பள்ளியின் விடைத்தாள்கள் அணைத்தும் நன்றாக இருந்ததாகவும்,ஏறத்தாழ எல்லா மாணவர்களுமே, நல்ல முறையில்,அழகாக, கையெழுத்தும் தெளிவாக இருந்ததாகவும் குறிப்பிட்டார்.
                                         உடனே அருகிலிருந்த அவ்ருடைய சகா ஒருவர்,'நீங்கள் கொடுத்துவைத்தவர் அய்யா,எங்களுக்கும் சில பள்ளிகளிலிருந்தும் வருகின்றதே,பார்க்கவே சகிக்கவில்லை.வாந்தி எடுத்தது போல் எழுதியிருக்கிறனர்,என்று அவர் தன்னையே நொந்து கொண்டார்.  பிறகு முன்னால் ஆசிரியரோ,தான் சந்தித்த இன்னொன்றையும் குறிப்பிட்டார்.
                                       இரண்டு மாண்வர்கள் ஏறத்தாழ ஒரே மாதிரியாக எலலா விடைகளையும் சரியாகவே எழதியிருந்தனர்.அதுவும்' ஈயடிச்சான் காப்பி 'என்று
கூறுவோமே அப்படி.'அதை எப்படி அய்யா  தாங்கள் ஈயடிச்சான் காப்பி என்று
கூற முடியும்?' என்று கேட்டனர். அதற்கு அவர்,'ஒரு மாணவன் ஒரு வினாவுக்கு ஒரு விடை எழுதியிருந்தால் அதைப் போலவே அடுத்த மாணவனும் அப்படியே ஜெராக்ஸ்காப்பியைப் போல் எல்லா விடைகளையும்
எழுதியிருந்தான்.' என்று கூறினார்
                                              ' தாங்கள்தான் எல்ல மாணவர்களும் நன்றாகவே எழ்தியிருப்பதாகவே கூறுகின்றீர்கள். இவர்கள் மட்டும் காப்பி அடித்ததாக எப்படிசொல்கின்ற்ரீர்கள்?'என்று கேட்டனர்.அதற்கு அந்த ஆசிரியர்
எப்படிக் கண்டுபிடித்தார் என்பதை , 'இறுதி வினாவுக்கு, ஒரு மாணவன் 'எனக்குத் தெர்யாது' என்று பதில் எழுதியிருந்தான்'.இன்னொரு மாண்வன்தான் காப்பி அடித்தான் என்பதைக் கண்டுபிடித்துவிட்டார் ஆசிரியர். ,அவன் என்ன எழுதியிருந்தான் என்பதைமுதல் வரியிலேயே கூறி விட்டாரே.

5/8/11

சாதி

                                                 சாதி
               ' சாதி இரண்டொழிய வேறில்லை' ஒள்வையார் அக்காலத்தில் பாடியது.
இப்பொழுது சாதி மூன்றாக உள்ளதே,திருந்ங்கைகளையும் சேர்த்து.
               ' சாதிகள் இல்லையடி பாப்பா' பாரதியார் பாடினார்.ஆனால் அவர்கூட தன்
சாதியில்தானே திருமணம் செய்துகொண்டார்.
               நமது நாட்டில்தான் சாதிகளொழியவேண்டும் என்று கூறுவோரும், தன் சாதியில்தான் எல்லாம் நடைபெற வேண்டும்,தன் சாதியினருக்கே எல்லா நலமும், வளமும் கிடத்திட வேண்டும் என்றுகூச்சலிடுவோரும் அதிகம். ஏன்,
அரசியலில்கூட, சாதியை ஒழிப்போம் என்று கூறிவிட்டு,தேர்தல் வந்து விட்டால்
எந்த தொகுதியில் ,எந்த சாதியினர் அதிகம் ,என்று அலசி ஆராய்ந்து, அந்த சாதியினரைத்தானே வேட்பாள்ராக அறிவிக்கின்றனர்.
                                சாதி என்பது பண்டைய நாட்களில் இருந்த்தாக தெரியவில்லை.மக்கள் தோன்றி, பல இடங்களில்,கூட்டம் ,கூட்டமாக வாழ
தலைபட்ட் பின்னர்தான், தங்களின் உணவு, உறைவிடம் போன்றவ்ற்றுக்காக
பல்வேறு தொழில் முறைகளை மேற்கொண்டு வாழ்ந்து வந்தனர்.இப்படி, தொழில் முறகளை வைத்துத்தான், தங்களுக்குள்ளேயே ,தாங்க்ள் யார், யார் என
பிரிந்து வாழ்ந்து வந்தனர்.இப்படித்தான், உல்கம் முழுவதும் மக்கள் தோன்றி
வாழ்ந்து வந்த்ள்ளதாக அறியப்படுகின்றது
                            பிற்காலத்தில், நமது நாட்டில் வந்து குடியேறிய ,ஒரு குறிப்பிட்ட வகுப்பினர்தான், மக்களிடையே சாதிப் பிரிவினையை ஏற்படுத்தி உள்ளனர்.
அந்த வகுப்பினர், நம் நாட்டிற்கு வருவத்ற்கு முன், நம் நட்டில் வாழ்ந்து வந்த நாகர் என்ற இனத்தவரிடமோ,திராவிடர், தமிழர் என்ற யாரிடத்தும், சாதிப்
பிரிவுகள் இருந்த்ததாக தெரியவில்லை.நம் நாட்டில் வாழ்ந்து வந்த மக்களைவிட, தாங்கள் எதோ அதிகம் அறிந்ததாக கூறிக்கொண்டு, ,அவர்களிடையே சாதிப் பிரிவிணையை ஏற்படுத்தி,தங்களின் கீழ் பணியாற்ற
பணித்தனர் .இப்படி ஏற்பட்டதுதான் சாதிப் பிரிவுகள்.உலகிலேயே நமது நாட்டில்தான், சாதிகளும் ,சாதிகளின் ஆதிக்கமும்.அதிகம்.
                  ஒருவன் இன்ன சதியைச் சேர்ந்தவன் என்பதை ,மிக விவரமாக பண்டைய நூல் ஒன்று கூறுகின்றது. ஒருவனது சாதியும், அவனது முன்னேர்ர்களது சாதியும் , ஏழு தலைமுறைகளாக ஒரே சாதியினராக இருத்தல் வேண்டும்.அதே போல, அவனது மனைவியின் சாதியும் அவளது
முன்னேர்ர்களது சாதியும் அப்படியே ஏழு தலைமுறைக்கும் ஒரே சாதியினராக
இருத்தல் வேண்டும்.    எழேழு தலைமுறை என்று கூறுவோமல்லவா?, அப்படி..
இதன்படி, முன்னோர்களின் ஏழேழு தலைமுறையும் ஒரே சாதியை சேர்ந்தவர்களாக இருந்தால்தான், அவர்களை அந்த சாதியை செர்ந்தவர்களென்று அணைவரும் ஏற்றுக்கொள்ளவேண்டும்.இப்படி மிக அழகாக, ஆணித்தரமாக ,அந்த காலத்திலேயே, சாதியைப் பற்றி, விளக்கமாக
 கூறப்பட்டுள்ளது.
                சாதி என்ற சொல் caste என்ற ஆங்கில சொல்லிலிருந்தும் caste என்ற சொல் casta என்ற போர்த்துகீசீய சொல்லிலிருந்தும் உருவானது.casta என்றால்sect,race பிரிவு,இனம் என்று பொருள்.இதுதான் த்மிழில் சாதி என்று உருவானது.இதிலிருந்தே பண்டைய காலங்களிலிருண்தே சாதிகள் இருந்துள்ளது தெளிவாகின்றது.
                     இப்படித்தான், ஆதி காலம் முதல் நமது நாட்டில் சாதிய அடிப்படையிலேயே எல்லாம் இயங்குகின்றது.அனேகமாக இனி வருங்கால்த்திலும் நமது நாடில் எல்லாமே சாதிய அடிப்படையிதான் இயங்கும் என எதிபார்க்கலாம்.