கெடாவெட்டு
ஆற்றின் மேற்கு கரையில் ஏறியதும்,அங்கு சில அடி தூரத்தில் தெரிந்த வீரனார் கோயில்,அஅதனருகில் அமைக்கப்பட்டிருந்த பந்தலும்,தோரணங்களும் இன்னபிற ஏற்பாடுகளும அவர்களுக்கு ஆனந்தத்தை அள்ளிவழங்கின. ஆற்றின் மேற்கு கரையின் இரு பக்கமும் எப்போதும் வளர்ந்திருக்கும் முட்செடிகள் வெட்டப்பட்டு,கோயிலுக்குச் செல்லும் வழி சீர்செய்யப்பட்டிருந்தது.கோயில் அருகில் கெடா வெட்டுமிடம்,சமைக்குக்மிடம்,வீரனாருக்கு விருந்து படைக்குமிடம் மற்றும் பலவற்றையும் பார்த்து ஆச்சரியப்பட்டனர்.கோயிலுக்கு புது வண்ணம் பூசப்பட்டு ,பொலிவுடன் காட்சியளித்தது.சென்ற முறை ஊருக்கு வந்தபோது மற்ற சிறுவர்களுடன் சேர்ந்து, ஆற்றங்கரைப் பக்கம் வந்து, காரைப்பழம்,சூரைப்பழம்மற்றும் ஈச்சம்பழம் ஆகியவற்றை பறித்து சாப்பிட்ட அனுபவத்தையும்,ஆற்று மணலில் மற்ற சிறுவர்களுடன் துள்ளிவிளையாடிய அனுபவத்தையும்,அசைபோட்டு,தன் தங்கையிடம் பெருமையாக பேசிக்கொண்டிருந்தான் புகழேந்தி..
சிறிது நேரத்தில் சுக்ரனின் அண்ணன் அங்கு வந்தார்.இவர்கள் கோயிலடியில் நிற்பதைப் பார்த்ததும்,அனைவரையும் அழைத்துக்கொண்டு தனது வீட்டிற்கு சென்றார்.வீட்டில் உற்றார் உறவினர்கள், அக்கம்பக்கம் உள்ளவர்கள் என ஒரு பெரிய பட்டாளமே இருந்தது.தனது உறவினர்களையும் மற்ற ,ஊர் பெரியவர்களையும் பார்த்து புகழேந்தி, சித்ரா இருவருக்கும் உற்சாகம் அதிகமாகிவிட்டது.பெரும்பாலும், இந்த கால கிராமத்து உறவுகளே கோயில் திருவிழா, கல்யாணம், காதுகுத்து,இன்னபிற இது போன்ற நல்லது கெட்டதுகளுக்குத்தானேஊருக்கு வந்து கூடுவர்.வெளீயிடங்களிலிருந்து வந்துள்ள கூட்டம் இவ்வளவு என்றால்,இனி அண்டை அயல் கிராமங்களிலிருந்தெல்லாம் இரவுக்குள் வந்து கூடிவிடுவர் இப்படிப்பட்ட உற்றார் உறவினர் கூட்டம், இவர்கள் வீட்டில் மட்டுமல்ல, ஊரில் எல்லா வீடுகளிலும்தான். நிறைந்திருக்கும்.
இரவு போய்க்கொண்டேயிருந்தது.கெடாவெட்டும் நேரம் நெருங்கியது.முதல் கெடா சுக்ரனின் வீட்டு கெடாதான்.எனெனில் சுக்ரனின் வீடுதான் பூசாரி வீடு.அதன் பிறகுதான் மற்ற கெடாக்கள் வெட்டப்படும்.அதன்படி சுக்ரனின் வீட்டு கெடா வெட்டப்பட்டு,பிறகு நாட்டாமை வீட்டு கெடா வெட்டப்பட இருக்கும்போது,'அப்போது எனந்த மனிதன் வந்தானோ,இன்னலை ஏற்படுத்த?.வடக்குத்தெரு வாயாடி குடிகார கோயான் என்றெல்லாம் அழைக்கப்படும் துரைராசு என்பவன் அங்கு வந்து,"தன் வீட்டுக்கெடாவைத்தான் பூசாரி வீட்டு கெடாவுக்கு அடுத்து வெட்ட வேண்டுமென வீண்வம்பு பேசினான்.இதக்கண்ட ஊர் பெரிசுகள் சிலர்,"அப்படியெல்லாம் வழக்கத்தை மாற்றக்கூடாதப்பா,நாட்டாமை கெடாவை வெட்டிய பின்தான் மற்ற கெடாக்கள் வெட்ட வேண்டும்"என மன்றாடினர்,"அதெல்லாம் முடியாது, எங்கெடாதான் வெட்டப்பட வேண்டும்"என மீண்டும் மீண்டும் முரண்டு பிடித்துக்கொண்டிருந்தான் அப்போது ராசதுரை , அமைதியாக துரைராசு முன் வந்து,"பெரியவர்கள் சொல்வதைக் கேள், நாட்டாமை கெடா வெட்டிய பின் உங்கெடவை வெட்டலாம்,என்று அமைதியாக கூறினான்.அதையெல்லாம் பொருட்படுத்தாமல் துரைராசு வீண் வம்பு செய்துகொண்டிருந்தான் பொறுமையை இழந்த ராசதுரை,உடனே துரைராசுவின் கண்ணத்தில் ஓங்கி ஒரு அறை கொடுத்து அவனை அப்புறப்படுத்திவிட்டான்.. ராசதுரை கொஞ்சம் கோபக்காரந்தான்,ஆனால் குண்வானுமாவான. அதனால் அவனுக்கு ஊரில் நல்ல பெயர்.ஆனால் துரைரசுக்கோ,'குடிகாரன் ,குணக்கேடன் என்றெல்லம் கெட்ட பெயர்தான்.
ஊர் மக்கள் துரைராசு மற்றும் அவனது கூட்டத்திற்காக அழுதாலும்,அவர்களின் கொட்டம் அடங்கியதை எண்ணி தங்கள்வேலைகளை பார்க்க புறப்பட்டனர்.சுக்ரனும் அன்று மாலையே செனையை நோக்கி புறப்பட்டான், கனத்த இதயத்துடன்தான்.
2 கருத்துகள்:
எழுத்துக்களின் மீது மஞ்சள் நிறம் கண்ணை பறிக்கிறது படிக்க முடியவில்லை...
நிறத்தை மாற்றிவிட்டேன்.தங்கள் கருத்துக்களை தொடரவும்.
கருத்துரையிடுக