வணக்கம் நண்பர்களே,
1987-88 ம் ஆண்டு நான் சென்னை இராயபேட்டை மருத்துவமனையில் இதய நோய் காரண்மாக அனுமதிக்கப்பட்டிருந்தேன்.எங்களுடைய சிறப்பு வகுப்பில் (special ward)ல் நாங்கள் நான்கு பேர் அனுமதிக்கப்பட்டிருந்தோம். ஒரு வயதான பெரியவரும எங்களுடன் அனுமதிக்கப்ப்ட்டிருந்தார்.அவருக்கு சுமார் 55 வயது இருக்கலாம். அவருக்குத் துணையாக அவருடைய மனைவி இருந்தார். ஒரு நாள் இரவு அவர் கொஞ்சம் மோசமான நிலையை அடைந்தார். இரவு 7,மணியள்வில் மூத்த வைத்தியர் (chief doctor) வந்தார். பெரியவரை ப்ரிசோதனை செய்துவிட்டு அந்த அம்மாவிடம் ,அவ்வள்வுதான் உறவினர்களுக்கு சொல்லி அனுப்புங்கள் என்று கூறிவிட்டு போய்விட்டார்.அந்த அம்மாள் அழுது அரற்றியது எங்களுக்கே பரிதாபமாக இருந்தது.அந்த அம்மாள் கொஞ்ச நேரம் அவரை உற்றுப் பார்த்துவிட்டு அவரது உள்ளங்காலை நன்றாக அழுத்தி தேய்த்துவிட்டார்.என்ன ஆச்சரியம் ,பெரியவர் கொஞ்சம் அசைந்து கொடுத்தார்.ஆனால் அந்தோ பர்தாபம் பெரியவர் மீண்டும் கொஞ்ச நேரத்தில் கண்ணை மூடிவிட்டார்.
சிறிது நேரத்துக்குப் பிறகு ஒரு இளம் பெண் மருத்துவர் வந்தார்.அவருக்கு சுமார் 25(அ)26 வயது இருக்கலாம்.பயிற்சி மருத்துவராக இருக்க வேண்டும்.அல்ல்து புதிதாக் வேலைக்கு செர்ந்திருக்கவேண்டும்.அவரிடம் இந்த அம்மாள் அழுதுகொண்டே த்ன் நிலையை விளக்கினார்.அந்த மருத்துவரோ அவரிடம் "கவலைப் ப்ட வேண்டாம்.நான் முயற்சி செய்கிறேன்" என்று கூறிவிட்டு அவரும் பெரிய்வரின் காலைத் தேய்க்க ஆரம்பித்தார்.இப்படியே அவர் கொஞ்ச நேரம் தேய்த்து விட்ட் பிறகு அந்த அம்மாளிடம்,"கொஞ்ச நேரம் இப்படியே செய்து கொண்டிருங்கள், இதோ வருகிறேன்"என்று போய்விட்டார்.எங்களுக்கு யாருக்கும் நம்பிக்கை இல்லை. இந்த சின்ன பெண் வேலை அவ்வளவுதான் என்று நாங்கள் முடிவு செய்து அந்த அம்மாளுக்கு ஆறுதல் கூறஆரம்பித்துவிட்டோம்.சிறிதுநேரத்தில் அந்த் பெண் மருத்துவர் திரும்பி வந்தார்.வந்தவர் எதுவும் பேசாமல் தானே பெரியவரின் காலை எடுத்து நன்றாக தேய்க்கத் தொடங்கினார்.எவ்வெள்வு நேரம் தேய்த்தார் என்பது தெரியாது.நாங்கள் கண்ணயர்ந்து விட்டோம்.திடீரென்று எங்களை அந்த அம்மாள் எழுப்பினார். திடுக்கிட்டு விழித்தால் அந்த அம்மாளும் மருத்துவரும் சிரித்துக் கொண்டிருதது எங்களுக்கெல்லாம் ஆசசரியம், பெரியவர் சிறிது அசைந்தார்.அணைவருக்கும் அளவ்ற்ற மகிழ்ச்சி. பிறகுதான் அந்த மருத்துவரிடம் மூத்த ம்ருத்துவர் கூறியதை அந்த அம்மாள் விளக்கிக் கூறினார்.அப்பொழுது அவர் முகத்தைப் பார்க்கவேண்டுமே.தான் பெரிய சாதனை செய்ததை எண்ணி தானே உள்ளுக்குள் உணர்ச்சிப் பெருக்குடன் அந்த அம்மாளின் கைகளைப் பிடித்துக் குலுக்கிவிட்டு புறப்பட்டார்.உடனே அந்த அம்மாள் வயது விதியாசம் பாராமல் அவர் காலில் விழுந்து கட்டிப் பிடித்து கண்ணீர் விட்டு அழுதார்.எங்களுகெல்லாம் என்ன சொல்வ்தென்றே ஒன்றும் புரியாமல் வாய் பிளந்து பார்த்துக்கொண்டிருந்தோம். அவர் போன பின் நாங்கள் அந்த அம்மாவிடம் "இப்பொழுது வந்தது மருத்துவர் இல்லை.அந்த கடவுள்தான் வந்து உங்கள் கணவரைக் காப்பாற்றினார்".என்று கூறினோம்.இது ந்டந்த்து 22 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.
இது ஏன் இப்போது நினைவுக்கு வந்த்து என்றுதானே கேட்கின்றீர்கள்.காரணம் இலலாமலா? நேற்று (02.08.2010) The Hindu நாளிதழில் coma வில் இருந்த ஆறு வயது சிறுமியை இசை மூலம் (Music Therapy) மீண்டும் உயிர் பெற்று எழச் செய்ததாக ஒரு செய்தி வந்ததும் எனக்கு ஆச்சரியம்.நாம் முன்பு பார்த்து அறிந்தது போல உள்ளதே என்றுதான். ஆதலால் நண்பர்களே இதையெல்லாம் பார்க்கும்போது Medical Miracle என்பதைவிட இறைவனின் திருவிளையாடல் என்றுதான் கூறவேண்டும்.
ஒரு நாட்டில் ஒரு பெரிய மருத்துவர் இருந்தார்.அவரிடம் வந்தால் எப்படிப் பட்ட நோயும் குண்மாகிவிடும் என்ற நம்பிக்கை மக்களிடம் மேலோங்கி இருந்தது.ஒருநாள் அவ்ரிடம் மக்கள் வெள்ளம் அலைமோதியது.ஒரு அரை மணி நேரம் அவர் யாரையும் பார்க்கமாட்டார் என்று கூறப்பட்டது. அரைமணி நேரத்துக்குப் பிறகு வந்த மருத்துவரிடம் "ஏன் இப்படி எங்களை காக்க வைத்து விட்டீர்கள்? எங்களை யார் காப்பாற்றுவது?" என்று மக்கள் கேட்டனர். "நான் சர்ச்சுக்குப் போய்விட்டு வருகிறேன்.நாம் அனைவரையும் அந்த கர்த்தர் காப்பாற்றுவார்" என்று கூறிவிட்டு தன் பனியைத் தொடர்ந்தார் அந்த மருத்துவர். இதுவும் இறைவன் திருவிளையாடல்தானா?.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக